Saturday, October 19, 2013

கவிதை பக்கம்

                          கவிதை பக்கம்
-----------------------
நடனக்கலையின் மகத்துவம் பற்றிய ஒரு உணர்வு

--------------------------------------------------------------------------
நடனக்கலை

---------------------
மனித சமூகம் மேம்படவே அவனியிலே
மகிமை சேர் கலைதன்னை கண்டிடலாம்
மானிட சமூக வலைத் தடத்தை
மங்காது காத்ததும் எம் கவின்கலைகள்


உள்ளது உணர்வுதனை முனைப்புடன்
உண்மையான ஆற்றலுடன் கருத்துக்களும்
வினையாற்றல் தன்னூடு பெற்றிங்கு
வழிப்படுத்தும் நெறியாக தொடர்பு கொள்ளும்

தூய்மையின் பிறப்பிடமாம் ஆலயங்கள்
தூய கலை வளர்க்கும் களமதுவாகும்
மாக்களையும் மக்களாக வழிப்படுத்தும்
மாண்புறு அழகுடைய கலைகள்தான்

பயிற்சியுடன் பாவனையும் தந்தனவே
பலகலை வளர்ச்சியும் புவிதனிலே
பரதமுனி காட்டிய பரதக்கலை
பாவராக தளமாகின அவைதனிலே

தலம்தோறும் வளமான ஒவியமாய்
தாவியே படர்ந்து கோடிட்டு
கற்சிலை காட்டிடும் கலைஅழகு
காண்போர் களித்து மகிழ்ந்திடுவர்

இசையுடன் இயலினை சேர்த்திங்கு
இசையுறு கலையாகி ஒலித்தனவே
கலை வளர்க்கும் கலைஞன் மாண்புகள்
சிந்தையிலே சிந்தனையை நெருடிவிடும்

பரதமுனி தந்திட்ட பரதக்கலை
பாவமாய் அவைகளை அலங்கரிக்க
கட்சிதரும் அழகுறு நடனக்கலை
அவைதோறும் அவனியில் போற்றிடுவோம்
============================================

அழகு
---------
இயற்கையின் பேரின்பம்
--------------------------------------
அழகு அழகு  என்று  வியந்திட வைக்கும்
அழகு எனப் போற்றும்  உலக அழகு எத்தனை
அழகு தமிழிலில்  பேசுவது பேரின்பம்
அழகு இயற்கையை  ரசிப்பது  பேரின்பம்

வருடிச் செல்லும்  விசும் தென்றல்  ஓர் அழகு
வளைவுடன் நகர்ந்து பாய்ந்து வரும் நதியும் ஓர் அழகு
பச்சை கம்பளம்  விரித்ததுபோல் மலை சாரல் ஓர் அழகு
மலைமேல் யானை படுத்தது போல் படிந்த முகில் கூட்டம் ஓர் அழகு

வானத்தில்  இயற்கை  வரைந்த வானவில் ஓர்  அழகு
வானமதில்  பவனி வரும்  பல வர்ண முகில் கூட்டம் ஓர் அழகு
முகில் கூட்டம்   இடையே தோன்றும் வெண் மதியும் ஓர் அழகு
வானத்தில் மின்னுகின்ற மின்மினிகூட்டம் ஓர் அழகு

வானம் தொடும்  நவீன கட்டிடங்கள் ஓர் அழகு
வானத்தை  ஊடுருவும்  வான ஊர்தி  தரும்  இரைச்சலொலியும் அழகு
பூத்துக்குலுங்கும் வர்ணமிகு  மலர் கூட்டம் ஓர் அழகு
பூக்காது அசைந்தாடும் மரங்கள் ஓர் அழகு

இயற்கையோடு அமைந்த எம் வாழ்வு பேரின்பம்
இறைவன் படைப்பு  தரும்  இயற்கையே  பேரழகு


================================================
குழந்தைச் சிரிப்பு  ஒரு அழகின் சிரிப்பு

குவளை இதழ் பிரித்து   செவ்விதழ் தாள்  திறந்து
கன்னத்து குழி விழுந்து தாய் முகம் பார்த்துநிற்கும்
காட்டுமே மெல்லியதை முழு உலகும் காட்சி தரும்
இளகாத கல்  நெஞ்சும்  கவலை நீக்கி களிப்புறும்
2வாழ்வின் நெடும் தூரம்  கலக்கமிடும் இதயமதில்
தாள் தூக்கி முத்தமிட பஞ்சொத்த ச்பரிசமது
தெள்ளு தமிழ்  அழகுணர்வு காட்டிடும் குழந்தைமுகம்
கள்ளுரும் நெஞ்சமதில் தெவிட்டாது  தித்திக்கும்
3குழந்தையாய் தரணிதன்னில் பெரும் பேறாய் வாழ்ந்தபின்னர்
சலிப்புற்ற வாழ்க்கைக்கு உயிர் ஊட்டும்  ஒவியமாய்
தடாகத்து தாமரையாய் வீற்றிருக்கும் குழந்தைஅது
காட்டினிற்கும் புன்னகையோ கோடானு கோடி இன்பம்
4பாஞ்சாலி சிரிப்பதுவே தந்திடும் பாரதயுத்தம்
கன்னிகள் சிரிப்பொலியொ இளைஞ்ர் மனம் தடுமாறும்
எதிரிகள் நகை ஒலிகள் நெஞ்சமதில்  அனல் கொட்டும்
குழந்தை மென்சிரிப்பு  தந்துவிடும்   பேரின்பம்
5வையமதில் இறைவன் அவன் வைத்திட்டான்   பேரின்பம்
பையவே பல இன்பம் மனதினையே கொள்ளையிடும்
படைப்பதினில் பலசெல்வம்   காட்டினான் மாயனவன்
படைவெல்லும்  தரணி புகழ் செல்வம் ஒடுங்கிடும்   மழலை  சிரிப்பினில்
6அழகின் சிரிப்பொன்றை அவனியிலே கண்டிடேன்
அழகின் தென்றலாய்  தொட்டிலிலே  கண்டிடேன்
பழக ப்ழக பாலும் புளிக்குமென்பார்
தவழ்ந்திடும் குழந்தையோ தரணியின்  அழகின் சிரிப்பு

                    -------------------------------------------
காற்றே
காற்றே கைகளில் சிக்காது  வடிவத்தால்
உருவத்தால்  மானுடனின் பதுக்கலில் நீ தப்பினாய்
உணர்த்திடும் உன் அன்புக்கரம்
எம்மை வருடலில்  தென்றலாய்  தித்திப்பாய்
மானுட கொடுமையில் நீயும் தான் கொந்தளிப்பாய்
பொறுமையின் கொடுமை தாங்காது   நீயும் சீறிடுவாய்
பூமிதனில் இயற்கை தரும் காற்றாய்  வீசிடுவாய்
நீ கொடுக்கும் நன்மைகள் பல கோடி
மரண பயம் உனக்கில்லை
வீசா பாஷ்போட்  உனக்கில்லை
வெள்ளை கறுப்பு என்றும் இந்து முஷ்லிம் க்ரிஷ்டியன் என்றும்
ஜாதி மதம் என்ற வேறுபாடு கிடையாது
சூரியனிடம்தான் உனக்கென்ன பயம்
சூரியனை அண்மித்தால் சுடுமென்றும் இல்லை
மானுடனுக்கு உன்னால் அழிவு இல்லை
மானுடனால்தான் சமூக  சீரழிவு
அகழ்வாரை தாங்கும்  நிலம் போல     
மனித சமுதாயத்துக்கு   துணையானாய்
எனினும்  கோபப்பட்டால்  புயலாகி காட்டுவாய் உன்பிரதாபம்
நினது நிழல் நிலவட்டும்    புவிதனில்      தென்றலாய்              
                          ----------------------------------
 நாற்று
----------
பெரும்பயன்   நோக்கி   பெரிதும்   முயன்று
 
வழி  பலவூடு    பயணம்     சென்றிட

கலை  பலவற்றை    கற்றுத்தெளிந்திட

வலைபோல்   அமை ந்த    இன்னல்   தந்திடும்

தெளிந்த   உள்ளமும்  துணிவுறு   நடையும்

கற்றுத்  தந்திடும்   கலைக்கூடம்  சென்று

அன்னை மடி யினில்  தவழ்ந்த்திடும்      மதலை

தன்னை   மறந்து   களிப்புறச்செய்திடும்

வாழ்க    பாலகர்    கல்விக்கூடம்  என்றும்

வளர்க  பெரும்   வளத்துடன்  எங்கும்
-----------------------------------------------------------

இரசனை
ஒலியூடு    ஒருவாகும்   சொல்   இஙுகு
வலிவான  ந்யம்   கூடி   இசையாகும்
இசைதரும்  ஓசை  கவியாகி
இசைவுடனே  நன்கு  கலையாகும்

கலைகள்  பல  தன்னை   நாம்  கண்டிஙுகு
மலை னிகர்   உயர்வுடனே  மகிழ்வதுண்டு
கானமழை   தனிலே  களித்து   மாந்தர்
வானவெளி  செல்லும்  புள்ளாவர்

கலைதரும்   மேன்மை  அழகினிலே
கலைந்த   அனிச்சமும்  துளித்துவிடும்
பரந்த  உலகினை   பற்றிவிடும்
விரிந்த   கரம்  தான்  கலைக்குண்டு

உயர்ந்த   வாழ்க்கையும்   தாழ்வதுண்டு
மலர்ந்து   மணம்  வீசும்   கலை  மட்டும்
குன்று தோறாடும்  குமரன்  அழகு போல்
என்றுமே  தன்   உயர்வை   காட்டி  நிற்கும்

-------------------------------------------------------------------

அலை  பாயும்  ஆசை
-----------------------------------

வெட்ட  வான்வெளியில்    பறந்துவிடும்
வட்டமிடும்       வண்ணப்பறவைகளை
கண்டிடும்   கூட்டுக்கிளி   ஏக்கமுடன்
தன்  எண்ணச் சிறகினை  விரித்தனவே

வான்வெளியில்   பறந்துவிடும்    பறவைக்கு
வதிவிடப் பிரச்ச்னைகள்   பல  உண்டு
அடிந்திடும்   காற்றின்   திசைதோறும்
அடிபட்டு   அலைவதனை   அறியாதோ

பட்டான   அரவணைப்புடன்  கூட்டுக்கிளி
சிட்டான  பலவகை   உண்டியுடன்  
மெட்டான   வாழ்வுதனை   வாழ்வதனை
மட்டமாய்   எண்ணியது   கூட்டுக்கிளி

கூட்டுக்கிளிக்கு  ஒர்  ஆசை
பட்டுப்  போல்  சிறகினை   விரித்து
வான்வெளியில்   சுதந்திரமாய்
தானும்    பறந்திட   நினைத்ததுண்டு

கூட்டுக்கிளி   அறியாதே   வானவெளியின்  இடர்களை
வட்டமிடும்   வான்பறவை   படும் துன்பம்
கிடைத்திடும்   இன்பமதனை   உணராத   மானுடனும்
கூட்டுக்கிளி போல்  குமுறுகிறான்  ஏக்கமுடன்
-----------------------------------------------------------------------
கானல்  நீர்

பாலைவனம்   எனும்  வளைகுடா  நாட்டில்
பசுமையும்   வளமும்  கண்கவர்  அழகும்   உண்டு
சாலையில்   ஒடிடும்   வாகனமும்   வீதியில்
சாலையை   மேவி   பாய்ந்த்திடும்  நீரிலே

ஒருகணம்  நானும்   திகைத்திட்ட  வேளையில்
ஒளிமுறிவுற்ற  ஒளிக்கதிர்   வளியினுள்
தோன்றிடும்  கானல்நீர்   தான்   காட்டும்
தோன்றியதே   எமக்கிவ்வித   மாயா  பாயும்    நீரினை
--------------------------------------------------------------------------------

பாலைவன மழை

வான்மழை   பொய்த்த  வளைகுடா நாட்டில்
வான்மழை   அழகினை  அறிய வேண்டின்
சாலையில்  அமைந்திட்ட  குளிர்  பெட்டி  யிலே
சாரையாக  விசிறின  நீரின்  சிதறல்கள்
    
மாயை       வடிவம்   காட்டியே  எமக்கு
மழையின்  தன்மையை  உணர்த்தின
மழையின்  அழகினை   அறிய வேண்டின்
மாயை    நீரின்   சிதறல்கள் தான்
------------------------------------------------------------

புத்தம் புது  மலர்கள்

புலரும்  காலைப்பொழுதிலே  மாந்தர்
மலரும்    ஆரவாரிக்கும்   மழலை  மொழியுடன்
மகிழ்வுறு    வதனமும்   துள்ளும்   நடையுடன்
தளர்  நடை  நடக்க   புதுமலர் போன்று

பாலர்   பவ்விடயமாய்   பள்ளி  சென்றிடும்
பொலிவுறு  ஆடையும்  அணிகலன்  பூண்டு
பள்ளி  சென்றிடும்  மகழ்வுறு  காட்சி
துள்ளிட வைத்தன   மானிட  மனங்களை

கலை பலவற்றை   கற்றே  களித்திட
சாலைகள் தோறும்  பவனி வருவது
முகிழ்கின்ற   மலர்கள்  போன்ற அழகுடன்
மகிழ்ந்த்திட  வைத்தன  எம் புத்தம்  புது  மலர்கள்
------------------------------------------------------------------------------

பாலைவனமும்    பசுமையானது

பூமியே   தரையாகி   வானமே   கூரையாக
வாழும்     வழியே   நாமும்  அறிவோம்

தரையையும்   தொடாது   வானையும்     பார்க்காது
தந்திரமாய்   வாழும்  நெறி  உலகில் உண்டு

அந்தரத்தில்   சுந்தரமாக   வாழும்  வழிமுறை
அவனியிலே  இன்று   கிடைத்தற்  அரியது

தரையின்  விரிப்புடன்  தரணியின்   சுகம்   எல்லாம்
வரைவின்றி  கணந்தோறும்  நன்கு  புரிந்தன

பூமிதனில்  வாழ்வு  பெருமைகள்   நிறைந்தன
புரிந்திட்டேன்    களித்திட்டேன்  மகிழ்வுடன்  பலவாக

வீதிகள்  தோறும்   இந்திரலோகம்போல்
வியக்கும்  விளக்கொளியில்  ஒளிர்ந்தன

இடையூறு   ஏதும்  இல்லாது   எழிலுடன்    பவனி வரும்
இயந்திர  வாகனகளின்     ஓசையின்  இசையூடு

சுத்தம்  சுகமென்ற  வாக்கை  அறிந்திஙுகு
சுடுகின்ற  வெயிலும்   தென்றல்   போல் ஆகியது

வாகன சகிதம்  வல்ல  கனவான்கள்
வலம்  வரும்  காட்சி   அழகு  சொல்லிட  வார்த்தை  இல்லை

பணத்தின்   பெருமையும்   நாகரீக   வாழ்வும்
பலப்பல  முறை   வியந்து   களித்திட்டேன்

மாளிகையோ   மன்னர்  வாழ்  வதிவுடமோ
மானசமாய்   பாரட்டி  வியந்து   களித்திட்டேன்

சீர்வரிசை  பல  உண்டு  வியத்தகு  பொருள்  உண்டு
தெரிவு  செய்ய  தெரியாது   சொக்கிப் போய்  நின்றிட்டேன்

வாணிபத்தின்   திறமையும்   வணிக வளாக   அழகினை
அண்ணாந்து  பார்த்து    ஆச்சரியம்    கொண்டிடேன்

உலகத்து   அழகெல்லாம்    கொட்டி   பெருமை செய்த
பாலைவனத்து  பசுமையை   பாரினிலே  கண்டேனே

----------------------------------------------------------------------------------

இயற்கையை    வென்றிட்ட  மானுடன்

ஊண்   உடை  உறைவிடம்    தேவைகளென   நினைத்தேன்
ஊக்கமுடன்    அலைந்து   தேடினர்   நம்  முன்னோர்

புரிந்திட்டேன்    தேவைகள்   பலவென்று
புரியாத  பலவற்றை  கண்டிஙகு   அசந்திட்டேன்

பலபல  உணவுடன்   பேரும் புரியாது
பலவேறு    ருசிகளையும்     சுவைத்து  களித்திட்டேன்

இல்லத்தின்  தேவைகள்    பலவென்று  கண்டேனே
பலபல   பொருட்களையும்   கண்டே  மலைத்திட்டேன்

இயற்கையை வென்று  இனிய  நடை போடும்
செயற்கையின்   அதிசயத்தை  கண்டே  அசந்த்திடேன்

கொழுத்தும்  அனல்  போன்ற  வெயிலுமே  ந்ன்கு
கொழுந்துபோல்   தென்றலாக்கும்   குளிரூட்டி  விசிறிகள்  

பெருமைகள்   பலவாக  போற்றியே  வாழ்த்திட
அருமைகளை    அறிந்தேன்  பல்வேறு   விதமாக

தரையினை  இருக்கையாய்  அகதிகள்  அவலமுற
குதிரை போல்  பலவர்ண  இருக்கை  குசனுடன்

இருக்கையின்  அழகினை  விபரிக்க   விளக்கிட
பெரும்பெரும்   வார்த்தை  தேடியே  அலைந்திட்டேன்

கடல்நீரை   சுத்திகரித்து  குடிநீராய்   குடித்திடவும்
செயல்காட்டும்  வீரர் புகழ்  இயற்கையை  வென்றவர்கள்

பாதாள  குழாய் மூலம்  நீரினை  பாய்ச்சி
பாலைநிலங்களை   பசுமை நிறை  களனியாக்கும்

 பசுமை  புரட்சி   செய்யும்  மானுட வீரத்தை
வறுமை எனும்  அரக்கன்  கண்டே  ஒழித்திட்டான்

கானல் நீரைதோற்று விக்கும்  கண் பறிக்கும்  ஒளிக்கதிரை
பசுமையாக்கும்   செயலினை  விபரிக்க  வார்த்தை ஏது

மரத்தில்  அடங்கியது  மாமத யானை
மரத்துள்  அடங்கியது   மாமதயானை

இயற்கையுள்   அடங்கிய  மானுடன்
இயற்கையை  அடக்கிய  மானுடனாவான்

----------------------------------------------------------------------

கலை   தந்த  அழகியல்

மனித  சமூகம்  மகிமைபெற   அவனியிலே
மாண்புறு   கலை யினை   காணலாம்

மக்களின்  சமூக  தொடர்புகளை
மங்காது    காப்பதுவும்   கலைகளே

உள்ளத்து   உணர்வுகளின்   பிறப்பிடமே
உண்டான  ஆற்றலுடன்  கருத்துக்களும்

வினையாற்றல்    எல்லாமே   பெற்றிட்டு
வழிப்படுத்தும்   களமாகும்   கலைகள்தாம்

தூய்மையின்   பிறப்பிடமாம்   ஆலயங்கள்
தூய  கலை    வளர்க்கும்   சன்னிதானம்

மாக்களை   மனிதனாக   நெறிப்படுத்தும்
மாட்சிமை   நிறைந்த    அழகு நெறி

பல கலை  வளர்ச்சியினை   பூமியிலே
பயிற்சிகளும்  பாவனையும்   தந்திடுமே

பரதர் முனி  வளர்த்திட்ட பரதக்கலை
பாவ  ராக   தாள  பாங்கினை  கொண்டனவே

தலம்தோறும்  வளமான  ஒவியமாய்
பற்பல  கற்சிலை  காட்டிடும்  கலை அழகு

பாவமான  பரதக்கலை   அவைதோறும்
காண்போர்  களிக்கவே  வைத்துவிடும்

கலையோடு  சேர்ந்தமைந்த   மக்கள்  வாழ்வு
 சிலையாக  சிற்பமாக்கும்  கவின்  கலைகள்

----------------------------------------------------------

புன்னகை
----------------
பொன்னகைகள்  பல நான்  கண்டதுண்டு
பொன்னகையில் மயங்காத பெண்ணில்லை
பொன்னகையின்  ஒளியையே  விஞ்சி நிற்கும்
பெருந்தனமாம்    பொன்னகையே  புன்னகையே

பொல்லாப்பை நீக்கிவிடும்  இயற்கை ஆயுதம்
இயற்கையாய்  இறைவன் அளித்த சன்மானம்
மனித சமுதாய  இணைப்பின்  அத்திவாரம்
சமுதாய உறவின்  பாலம் புன்னகையே

பலபல உறவுகளை தோற்றிவிடும் புன்னகை
விலையில்லா  பெரும் சன்மானம் புன்னகை
நட்புறவு காட்டிவிடும்   பாலமாக
மனித சமுதாயத்தின்  பெரும் சக்தி புன்னகை

வசீகரிக்கும்  சக்தி உடைய  புன்னகை
வளம் கொழிக்கும்  பேரழகுடைய  புன்னகை
புதுமை பல காட்டும்  பண்பாளனாய்
பேரழகு குணமாம்   மனிதனுக்கு
---------------------------------------------------------------


ஒலி தரும்  ஊறுகள்
------------------------------
சப்தச் சுரமாகி   இவை  கானமாகி
சகலகலா  கலைஞ்யனின்  நாவில் ஊறி
புவனமதில்  பவனி வரும்  ஒலி சக்தி
பூவுலகில்  ஊறுகள் தருவதுண்டு

வாத்தியத்தில்  சுருதியிடில்   கானமாகும்
வசமாகும்  சுருதி போகில்  அலறல் ஆகும்
ஒத்து லயம் சுருதி பேணி  இசை அமைக்க
ஓங்கிவளர் இன்பமான கலை ஆகும்

ஒலியோடு  ஒத்தொடும் இசையே
ஒத்திசையா  இடர் களையும் தந்துவிடும்
ஒத்திசையா ஒலியேதான் ஒன்றாகி
ஒப்பற்ற அதிர்வாகி  இடர் ஆகும்

தொழில் சாலை  இரைச்சல் எமக்கூட்டும் 
தொல்லை தரு நலக்குறைவு எத்தனையோ
தொந்தரவு தந்தெமக்கு   தொடர்கின்ற
இடராகும்  ஒலியின்  இரைச்சல்கள்

வாகனங் கள் எழுப்பிவிடும்  ஓசைகளோ
வாழ்க்கை அமைதியை  அழித்துவிடும்
வேகமிகு ஒலிதரும்  தொல்லை நீக்கி
வேதமாய்  அமைதியினை  பேணிடுவீர்

அமைதி அமைதி என கூவிடுவர்
அவையோர் தாங்காது நொந்திடுவர்
ஆக்கம் தரும்  சக்தியாம் ஒலி வடிவம்
அவனியிலே  தரும்  இடர்  அளவில்லை

காப்போம்  என்றுமே  அமைதியினை
வென்றிடுவீர்  அமைதியினை  பேணிடவே
பெருமையுறு  அமைதி  நிலவிடவே
காத்திடுவோம்  அமைதி யினை அவனியிலே 

----------------------------------------------------------------------

முதுமை
-------------
மானுட வாழ்வு  பருவகால மாற்றம் போல்
மானுடன் எதிர் கொள்ளும்   இயற்கை நியதியே
வாழ்வின் இயற்கை விதிகளை   மீறிடின்
வாழும் புவிதான்  தாங்க முடியுமோ

ஆரோகண  அவரோகண     பருவ மாற்றம் 
மானிட வாழ்வின்  இயற்கை நியதியே
ஆரோகணத்தில் மானிடன்  இன்பமாகவும்
அவரோகணத்தில்  துன்பமாகவும்  இருப்பது

இளமைக்காலம்  தென்றலாய்  இனிக்க
முதுமைக்காலம்  புயலாய்  வெறுக்க
 வாழும் மனிதன்  எண்ணும் நினைவுகள்
வாழ்க்கை பரிணாமம் புரியாத விளைவுகள்

புவியின் பருவகால மாற்றம்  ஆண்டாண்டு தோன்றும்
வாழ்வின் பருவகால மாற்றம்   வாழ்வில் தோன்றும்
பருவ வேளை  கால  மாற்றங்கள்  இயற்கையின் நியதி
புரிந்திடின் வாழ்வு  தெவிட்டா இன்பம்

முதுமை     எனும்  அனுபவ முதுமையை
முதுமையில்  மக்களிடம் உபகாரியாய்  வாழ்ந்து
இளம்  தலை முறை     மககளின் வழிகாட்டியாய்  வாழ்ந்து
வளம் பல நலத்துடன்  வாழ்வீர் முதுயோர்
---------------------------------------------------------------

யுத்தம்
--------------
யுத்தம் யுத்தம் யுத்தம்

இனத்திடை தோன்றின இனவாத யுத்தம்
மொழியிடை தோன்றின மொழிபேத யுத்தம்
மண்ணிலே தோன்றின மண்ணாசை யுத்தம்
வல்லரசுகளிடையே தோன்றின வல்லமை உத்தம்

நிலை தடுமாறும்  அழிவுறு யுத்தங்கள்
பற்பல தோன்றிடின்  மானிட வாழ்வில்
யுத்த பேரிகை  முழங்கிடும் புவிதனில்
மானிட வாழ்வு யுத்த அழிவினில்

நிலையில்லா யுத்தம் பற்பல தொன்றிலும் 
புயலடித்து ஓய்ந்து தென்றலாய் மாறலாம்
மாந்தர் உளம்தனில் தோன்றிடும் யுத்தமோ
மனம் தடுமாறி  திடுக்கிட வைக்கும்

குருசேத்திர போர்போல் பல முறை தோன்றிடும்
ராமராவண போர் அடிக்கடி தோன்றிடும்
தடுமாற வைக்கும்  பலவகை யுத்தங்கள்
மாந்தர் வாழ்வினை  துயர்ருற வைத்திடும்

சூறாவளி  வேகமாய்  சுழ்ற்றிடும்  மனிதனை
பேராழீ அலை போல் குமுறி எழுந்திடும்
மலைகளால்  தோன்றும் வேகமிகு நதியாகி
மனங்களை அடித்து உழ்ன்று வளைந்து

கனமான உளந்தனை  அழுத்திப் பிழிந்து
ஆற்றுப்படை பாடலாய் தாலாட்டி மீட்டி
தடுமாறும் மனங் களை சீராட்டி செம்மையாய்
மாற்றிடும் ம்னித உள்ளம்  என்றும் குருசேத்திர களந்தான்

------------------------------------------------------------------------------

விடியல்
-------------
அதிகாலை நேரம் சேவல் கூவிடும்  வேளை
ஆதவன்  தன் துயில் நீங்கி அழகு கதிர்  ஒளி வீசி
கருநிற மேலாடை நீக்கி  வண்ணப் பட்டாடை அணிந்து
வானமெனும் மங்கையவள்  செந்நிறப் பொட்டு இட்டது போல்

அடிவானம் விட்டு மேலெழும்பி ஆதவன் உதயமாகின்றான்
பட்சிகள்  பரவசமாய் ஆர்ப்பரித்து மகிழ்ந்தன
இருள் நீங்கிய களிப்புடனெ பட்சிகள்
இனிய கானம் பாடி பாசுரம் இசைத்தன

தன் இனம் கூடி  ஆர்ப்பரித்து
தன் இளசுடன் கூடி குலவி களித்திடு
பல்வேரு திசை நோக்கி  பறந்திட்டு
பசி தீர்த்து  பாடியே  பறந்தன

ஆதவன் வரவின் அழகிலே 
பூவிதழ் புன்னகைத்து   பூ விரிக்க
வண்டின்ம்  மலர் விட்டு மலர் தாவி
தன் அழகுறு நாட்டியம் ஆடவும்

இசையோடு அர்த்தமாய்  நாட்டிய ம்  ஆடியே
தேனீக்கள் தேன் தேடி  பல்திசை ஓடவும்
ஆதவன் வரவினில்  பூவிதழ் ஆயிரம் மின்வலு ஒளியுடன்
அழகு  பூவித்ழ்  விரிய ஆயிரம் வண்டுகள் சூழ்ந்தன

மாந்தர்  தம் இருள் நீங்கிய காலையில்
மகதான விடியலுக்காய்  காத்திருக்க
பழை நாட்  துயரம் நீங்கிட 
புதுமைகள்தேடியே ஏக்கமுடன்

பசுமை புரட்சி ஆயுத புரட்சி  எனெ பல
பலவேறு  காணனி புரட்சிகள்  தேடி
விடியலை தேடியே  இரவெல்லாம்
விரும்பியே ஆவலுடன்  வரவேற்பர்
-------------------------------------------------
விடியல் பலர்வாழ்வில் வருவது
அதிகாலை நேரம் சேவல் கூவிடும்  வேளை
ஆதவன்  தன் துயில் நீங்கி அழகு கதிர்  ஒளி வீசி
கருநிற மேலாடை நீக்கி  வண்ணப் பட்டாடை அணிந்து

வானமெனும் மங்கையவள்  செந்நிறப் பொட்டு இட்டது போல்
அடிவானம் விட்டு மேலெழும்பி ஆதவன் உதயமாகின்றான்

பட்சிகள்  பரவசமாய் ஆர்ப்பரித்து மகிழ்ந்தன
இருள் நீங்கிய களிப்புடனெ பட்சிகள்
இனிய கானம் பாடி பாசுரம் இசைத்தன
தன் இனம் கூடி  ஆர்ப்பரித்து
தன் இளசுடன் கூடி குலவி களித்திடு
பல்வேரு திசை நோக்கி  பறந்திட்டு
பசி தீர்த்து  பாடியே  பறந்தன

ஆதவன் வரவின் அழகிலே 
பூவிதழ் புன்னகைத்து   பூ விரிக்க
வண்டின்ம்  மலர் விட்டு மலர் தாவி
தன் அழகுறு நாட்டியம் ஆடவும்
இசையோடு அர்த்தமாய்  நாட்டிய ம்  ஆடியே
தேனீக்கள் தேன் தேடி  பல்திசை ஓடவும்
ஆதவன் வரவினில்  பூவிதழ் ஆயிரம் மின்வலு ஒளியுடன்
அழகு  பூவித்ழ்  விரிய ஆயிரம் வண்டுகள் சூழ்ந்தன

மாந்தர்  தம் இருள் நீங்கிய காலையில்
மகதான விடியலுக்காய்  காத்திருக்க
பழை நாட்  துயரம் நீங்கிட 
புதுமைகள்தேடியே ஏக்கமுடன்
பசுமை புரட்சி ஆயுத புரட்சி  எனெ பல
பலவேறு  கணனி புரட்சிகள்  தேடி
விடியலை தேடியே  இரவெல்லாம்
விரும்பியே ஆவலுடன்  வரவேற்பர்

விடியல் பலர்வாழ்வில் வருவதுண்டு
ஏழையின் வாழ்வில் விடியல்  வறுமையாய்  விடியும்
துயரங் கள் வாழ்வில்  இன்பமாய்  மாறுவதுண்டு
கவிஞனின் விடியலில்   தினம் தோறும்
கற்பனை கவிதைகள்  தோன்றிவிடும்

------------------------------------------------------


இயற்கை
------------------
மாதாவின் கரங்களிலே  துள்ளிய   எம் வாழ்க்கை
மண்ணின் மைந்தனாகி  உருவெடுத்து
இயற்கை அன்னை கொண்ட பேரழகில்
இந்திர   லோகமதை  இன்புடனே  அனுபவித்து
                        
தந்திரமாக ந்ட்பங்களை   உருவாக்கி                                               
தரணிதனை  இன்பமுறு  உலகாக்கி
எண்ணி எண்ணி இதை நாம் வியக்கையிலே
எண்ணிலா இன்பங்கள் பொங்கிடுமே

எத்தனை கோடி இன்பம்  வைத்தாய்
எத்திக்கும்  இனிமைகள்  பொங்கிடவே
பஞ்சபூத  கலவையை கொண்டிங்கு
விஞ்சு புகழ் புவிதனை  காட்டினாயே

பலவிதமாய் புகழ்ந்திட வார்த்தை தேடி
வேதமாய்  மனமுருகி போற்றிடவே
கொள்ளை கொண்ட இயற்கை   உன் அழகு
பிள்ளை பிராயம் முதல்  வியப்புற்றோம்

உரைத்திட உணர்ந்திட நினைக்கையில்
கரையில்லா இன்பமது பொங்கினதே
பகல் பொழுதின் வெம்மையும்  இராப்பொழுதின்  தண்மையும்
இன்பமும் துன்பமும் கொண்டதுதான் 
இத்தரணி யேனவே  உணர்த்திடவும்
ஆதவனின்  அக்கினி    கதிர் வீச்சு
பால்நிலவின் ஒளியினிலே  ஒழிந்து நின்று
சுகமும் துக்கமும்  மாறி மாறி
சுடர் விட்டு நம்மிடையே தோன்றும் என்று


சொல்லாமல்  விளக்கிடும்  குருவாகியே எமக்கு
பொல்லாவினை  கொண்ட புவியேன புரிய வைக்கும்


நிலையில்லா வாழ்க்கை  அழிந்திடும்  எனினும்
மன அலை அலைந்து  ஓயாது துரத்திடும்
கடலில் தோன்றிடும் பேர் அலை போல்  மன அலைகள்
அடிக்கடி   அணைப்பதுபோல்   துரத்தும் மன அலைகள்
அலை ஒன்று இன்னொரு அலையை  துரத்துவதும் 
 சோர்வதுமாய்
மீண்டும்  பல முயற்சிகளை செய்து சோர்வதும்
 எழுவதும்
மீண்டும் மீண்டும் உய்ர்த்தெழும்  உணர்வுடனே 
அலைந்திடும்   மன அலைகள்                                        


மழை மேகம்  வானிலே  அலைந்தங்கு
காற்றின் அசைவாலே   சிதறுண்டு அலைவது போல்
வேகமாய்  மாந்தர் மன அலையும்  சிதறுண்டு
சோகமாய்  தள்ர்ந்து  உயிர்ப்பதுபோல்


ஆவலாய் பயனுற  வாழ்ந்திடவே  மானிடர்
ஆற்றிய முயற்சிகள்   பலகோடி மானிலத்தில்

----------------------------------------------


இயற்கையின் அழகு
-----------------------------------
வானுடன் போட்டியிடும்   மலைச் சாரல்
வானுயர  ஒங்கி வளர்   மலைக் கூட்டம்
தவித்திட்ட சுமை தாங்கா  முகில் கூட்டம்
தவிப்பு நீங்க   ஒதுங்கி நிற்கும்   முகில் கூட்டம்
கருணை கொண்ட மலைசாரல்  கரம்  நீட்டி
காதலுடன்  வரவேற்று  அணைத்துவிடும்
குடும்பசுமை   தாங்காத முகில் கூட்டம்
முதிர்குடும்ப   முகிலாகி  தன் உரு இழக்கும்

உரு இழந்த முகில் கூட்டம்  மழையாகி
மண்ணே கதியெனெ  பாய்ந்து வர
மண் மகளொ  காதலுடன்  உளம் குளிர்ந்து
மண்டியிட்டு பாசமுடன்  மனம் மகிழ்ந்தாள்

மழை மேகம்  படிந்திட்ட  மலை உச்சி மழை மேகம் நடனமிடும் தரை யாகும்

மழைமேக திரை சேலை  காற்றினால்  மலைக்களிலே  மயங்கி படிவதுண்டு

கொள்ளை கொண்ட மலைசாரல் உச்சிதனில்  கள்ளை உண்ட மாந்தர் போல்   புரண்டு விழும்

வெள்ளிநிலா   அதன் மேலே  உலாவரவும்   சுழ்ந்திடும்  பேரழகு     மலைதனிலே

கள்ளமற்ற  அருவிநீர்  பாய்ந்துவரும்  சுழ்ந்திடும்  ஆற்று  சிறு குன்றும்

பச்சை தரை விரிப்பு விரித்ததுபோல்      பாசி படர் கரையும்  வழுக்கிடுமே

விலங்கினம்  களிப்புடனே  ஒய்வாக   அமர்ந்திடும்   தரைபோல் மலைக்குன்று
விலகிட இடமில்லா    கல்பாறை  வியந்திடும்  உருவில்  கண்டிடலாம்

மலை குன்ற   வெளி தனிலே  வானமது  வரையா ஒவியமாய்  திகழ்ந்திடவும்
மாந்தர் வியப்புடன் அமர்ந்து அங்கே   கொள்ளை யிடும்  அழகை   ரசித்திடுவர்

இயற்கையாய் அமைந்த இந்த பேரழகு  இயல்பாய் போற்றிட வேண்டுமன்றோ

அழிவுறு மாந்தர்  அழகைவிட அழிவுறா    இயற்கை  பேரழகு தான்

------------------------------------------------------------------------------------------------


ஆலயம்

ஆன்மா லயப்படும் இடமாகி
ஆத்மா அழ்குற விளை யாடும்
ஆலயம்  இடம்தோறும் விளங்கிடவே
ஆவலுடன் மாந்தர் அமைத்திடுவர்

மனித சமூகம் அவனியிலே மேம்படவே
மகிமைசேர்   கலை பல கண்டிடலாம்
மக்களின் மாண்புறு  சிறப்புதனை
மங்காது காத்திடும் ஆலயங்கள்

மாக்களை மக்களாய் வழிப்படுத்த
 மானிடகலைகளை நெறிப்படுத்த
பயிற்சிகள் பாவனைகள் பல அங்கு
பாரினிலே தாங்கின ஆலயங்கள்

பரத முனி காட்டிய பரதகலை
பாவ ராக தாளமாகி நயமுடனே
தரணியது பாவனைகள் பலவாக
தார்மீக கலை காட்டும் ஆலயங்கள்

கற்சிலை காட்டினவே  சிற்பக்கலை
காவியமாய் காட்டின ஓவியங்கள்
நாவிதழ்கள் ஓதின  புராணங்கள்
தேடி தேடி  காட்டின ஆலயங்கள்

கோவில் இல்லா ஊரினிலே குடிகல் வேன்டாம்
பாவியில்லா ஊரினிலே பண்பு வாழும்
நாங்கலுடனே தரணியிலே வாழ்ந்திடவே
தேடி தேடி வண்ங்கிடவே ஆலயங்கள்

-----------------------------------------------------------------------------------

புதுமைகள்
---------------
வெள்ளத்தனையது மலர் நீட்டம்
  மாந்தர் சிந்தனை அளவு வள்ர்ச்சியன்றோ
கள்ளமற்ற நெஞ்சங்கள்  தான் உலகில்
காரியங்கள் பலவற்றை  தோற்றியது

பாரதி கம்பன் இளங்கோ போல்
தமிழை வளர்த்தனர்  பெரியொர்கள்
பாரதி கண்ட கனவன்றோ நம்மில்
புதுமைகள் பல இங்கு  புகுந்தனவே

பெண்கள் அடிமைகள்   என்று  கருதினர்
இன்று புதுயுகம் படைத்தது பெண்களன்றோ
பெண்ணடிமை நீங்கிடில்  உலகிலே
தன் நிகரில்லா சமுதாயம்  தோன்றிடுமே

விஞ்ஞானம்   விண்வெளி என்றும்  உலகிலே
 விந்தைகள் பல பல நேர்ந்தனவே
அஞ்ஞான இருளாம் பெண்ணடிமை  இங்கு
   நீங்கிடின்  உருவாகும்  எம் பெருமை

தமிழ்  வாழ வழிவகுத்த இலக்கியங்கள்
 தமிழன்  பெருமை பரப்பிவிடும்  உலகிலே
தமிழ் இலக்கியங்கள் காட்டும் வழி நெறிகள்
 காட்டிடுமே சமுதாய வளர்ச்சியினை

---------------------------------------------------------------------------------

தாய்  நிழல்
-------------------
தாயின் நிழல் தேடி  தாகமாய் அலைந்திட்டு
சேயின் குறைதீர குறைவில்லா பக்தியுடன்
பாகாய்  உருகி பாடினேன் பராசக்தி
பாகமாய் சிவனுக்கு உடனுறை சிவகாமியே

தரணியின் சுகங்களை சகலதும் அளித்திட்டு
தரணியின் துயர்களை கூடவே காட்டிட்டு
பரணிகள் பாடும் பாங்கினை அளித்திட்ட
பூரணியே உனை துதிதேன் அனுதினம்

மழலையில்  தாயின் அருள்கரம் காட்டி
கழலினை  நினைந்திட வழி நெறி காட்டி
புவிதனில்  தோன்றிடும் புகழ்பல காட்டி
கவிதனை பாடிட்டு துதிதிட வைத்தாய்

நினைத்திட நினைத்திட உருகுது மனமே
துதிதிட துதிதிட  பறந்தன துயற்கள்
படித்திட தந்தன    நின் பரவச தோற்றம்
மறக்கலும் இயலுமா நின்கழல் துணையினை

-----------------------------------------------------------------------

தமிழ் தாய் வணக்கம்
-----------------------------------

மரபுகள்  தாண்டிட பத்தினியாக
வரம்பு தீண்டினால்  தப்பிதம் என்று
மேடையில் முழங்கின செந்தமிழ்  இலக்கணம்
நீரோடையாய் தெளிந்த மாசில் புலமைகள்

புசித்திட  புரிந்திட  தவித்து நிற்கையில்
ரசித்திட்டோம்  களித்திட்டோம் அறிஞர் அவைதொறும்
நாவலர் நாவினில்   நர்த்தனமாகிய
நலம் பல  நிறைந்த  மறத்தமிழ் அன்னையே

ஆவலாய் நின்புகழ் பேசிட முயல்கையில்
ஆலாபனை செய்து மகிழ்ந்திட நினைக்கையில்
தவித்தோம் சொல்லொண்ணா சங்கடம் பலவாய்
தேடியே களைந்தாய் திரையிடும் போர்வையை

எளிமையாய் தோன்றின நினது தோற்றம்
களிகூர வைத்தன நினது சேயினை
மகிழ்ந்திட வைத்தன  நின் எழில் அழகு
புகழ்ந்திட வைத்தன  பொலிவுறு எளிமையை

தமிழ்  ஏடுகளில்  பரவிய நினது சிறப்பு
செழுமையுடன் கணனியில் தோன்றிட பதிதோம்
படித்திட கேட்டிட  சலித்திடும் மக்களை
தடுத்து நிறுத்தியே கேட்டிட வைத்தன

தமிழ் தாயே  உனக்கு      கோடி வணக்கங்கள்
தமிழ்தாயே   உன்புகழ் என்றும்      நிரந்தரம்
தமிழ்கவி  போற்றிடும்  இனிய தமிழ் மொழி
தமிழர்   வாழும்வரை   வாழும்  புகழுடன்


---------------------------------------------------------------------------
மேன்மைகொண்ட மனம் 

பாறைக்குள்  நீர்  சுனை இருக்கும்
பாலைவனத்துள் பசும் சோலை இருக்கும்
பாறாங்கல்லிலும்  மென்மை இருக்கும்
கல்னெஞ்னுள்ளும்    கனிந்த மனம் இருக்கும்
மென்மையான மனம்  மெலிந்திடும்
மென்மையான மனம்  தவித்திடும்
மென்மையான உள்ளம் சோர்ந்திடும்
மென்மையானமனம் படைத்தோர்  உயர்ந்தோர்
அன்பு கொன்ட உள்ளம் என்றும்
அடைக்க முடியாத வெள்ளமே
அன்பின்றி வாழும் மாந்தர் அவனியிலே
மண்னைவிட்டு போதல் என்றும் நன்று நன்று
அன்பு கொன்ட உள்ளம் பண்பின் சிகரம்
அன்புகொன்ட உள்ளம் வெள்ளை உள்ளம்
அன்புதான் உலகின் வழிகாட்டி
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்

--------------------------------------------------------------------------

மானம்

தன்மானம் காத்த   தலைவர் அவன்யில்
சிலர் உலகினில் பிறப்பதுண்டு
மானம் காத்த வீரனின் பெருமை
மாண்புடன் அவனியிலே நின்று பேசும்

பெண்பெற்ற   பெற்றோர்  மானம் என்றும்
அடிக்கடி போகும்  வரும்   உலகினில்
சன்மானம் தேடி அலையும்   மானிடமே
தன்மானம் தேடி வாழ்ந்திடுவோம்

---------------------------------------
கிள்ளாதே
பசும்தளிர் மேனி  பஞ்சிளர் மதலையை
பாசமுறு  சொல்லால் கதை பல கூறி
கற்பனை காவிய அழகிய உலகில்
பற்பல செயல்தனை செய்திடும் வேளையில்

சிற்பமாய் பல கலை வடித்திடும்  கலைஞனை
கடும்மொழி கூறி கலைய வைத்திடும்  மக்களே
இனிய சொல் பேசி இன்பமாய் வாழ்த்தியே
இனிய உலகினை ப்டைத்திட முயல்கையில்

கிள்ளாதே மனிதா  மனதை  கிள்ளாதெ

தந்திர மொழியுடன்  தாலாட்டு பாடும்
மந்திர மொழியுடன்  மகிழ்ந்திடும் மனிதினை
பற்பல செயல்களினை புரிந்திடும் வேளையில்
பாடி ஆடி களித்திடும்   இளம் தளிரினை

கிள்ளாதே மனிதா  மனதை  கிள்ளாதே
தேனித்ழ் மொழியால்  சிந்தை களித்திட
கற்பனை உலகில் களித்திடும் வீரரை
இன்புறும் மொழிதரும் இனித்திடும் சிந்தையை
வன்சொல் நீக்கியே  வாழ்த்துக்கள் பாடிடு


---------------------------------------------------------------------------

அழகு  அழகு 

அழகு அழகு என வியந்திடும்  உலகிலே
அழகு என போற்றிட  உலகில் எத்தனை அழகுகள்
அழகு தமிழில் பேசிட  அதில் ஓர் இன்பம்
அழகு இயற்கையை ரசித்திட அது ஓர் இன்பம்

தெளிந்த நீரோடையில் பாயும் அருவிகள் ஓர் அழகு
தெவிட்டாத நறுமண பூஞ் சோலை சாரலில்
தென்றல் வீசிட அலைந்திடும் மரக்கிளையில்
தத்திதத்தி பறந்திடும் புள்ளினம் ஓர் அழகு

வருடிச்செல்லும் தென்றல் ஓர் அழகு
பாய்ந்துவரும் நதி ஓர் அழகு
பச்சை கம்பளம் விரித்ததுபோல் மலைச்சாரல் ஓர் அழகு
யானைக்கூட்டம் போன்று  அசைந்த முகில் கொண்ட வானம் ஓர் அழகு

நறுமணம் கமிழ் அகில் புகை  ஓம குண்டம்
 அங்கு எழும் யாகத்தீ  ஓர் அழகு
வானுயர் நவீன கட்டட  கூட்டம் ஓர் அழகு
பூத்து குலுங்கும்  மலர் கிளைகள் ஓர் அழகு

 இயற்கை வகுத்த பேரழகு பல கோடி
செயற்கை தந்த அழகோ சில கோடி
இய்ற்கை வனப்பில்  உலக சிருட்டி
இயற்கை படைத்த அழகு பலபல கோடி
--------------------------------------------------------------------


தாய் நிழல்

தாயின் நிழல் தேடி தாகமாய் அலைந்திட்டு
சேயின் குறைதீர குறையில்லா பக்தியுடன்
பாகாய் உருகிப் பாடினேன் பாரசக்தி
பாகமாய் சிவனுக்கு உடன் உறை சிவகாமி

தரணியின் சுகங்களை சகலமும் அளித்திட்டு
தரணியின் துய்ர்களை கூடவே காட்டிட்டு
பரணிகள் பாடிடும் பாங்கினை  அளித்திட்ட
பூரணியே உனை நான்  துதித்தேன் அனுதினம்

மழலையில் தாயின் அருள் கரம் காட்டி
கழலினை நினைந்திட வழி நெறிகாட்டி
புவிதனில் தோன்றிடும் புகழ் பல காட்டி
கவிதனை பாடிட்டு துதிதிட வைத்தாய்

நினைத்திட நினைத்திட உருகுது மனமே
துதித்திட துதித்திட  பறந்தன துயர்கள்
படித்திட தந்தன நின் பரவச  தோற்றம்
மறக்கலும் இயலுமா நின்கழல் துணையினை

---------------------------------------------------------------------------

தமிழ் தாய் வணக்கம்

மரபு தாண்டாத பத்தினியாகியே
வரம்பு தீன்டினால் தப்பிதம் என்றே
மேடையில் முழங்கிய செந்தமிழ் மொழியது
நீரோடையாய் தெளிந்த மாசில் புலமையும்

புரிந்திடமுடியாது தவித்திட்ட வேளையில்
ரசித்திட்டோம் அவைதோறும்  இனிய தமிழினை
பண்டிதர் நாவினில் நர்த்தனமாகிய
பண்பாடு காத்திட்ட தாய் தமிழ் அன்னையை

ஆவலாய்  உன்புகழ் பேசிட முயல்கையில்
அழகிய பாடல் பாடி மகிழ்ந்திட நினைக்கையில்
தவித்தோம் சொல்லொணா சங்கடங்கள் அன்று
தாயே கலைந்தாய் திரையிடும் போர்வையை

எளிமையாய் தோன்றின நினழகுறு தோற்றம்
களிகூர வைத்தன நினது சேய்தனை
மகிழ்ந்திட வைத்தன நினது அழகும்
புகழ்ந்திட வைத்தன பொலிவுறு இளமையால்

தமிழ் ஏடுகளில்  பரவிய நினது சிறப்புகள்
செழுமையாய் கணனியில் தோன்றிட பதிதோம்
படித்திட கேட்டிட சலித்திடும் மாந்தரை
தடுத்து நிறுத்தியே  கேட்டிட  வைத்தன

தமிழ் தாயே எமது கோடி வணக்கங்கள்
தமிழ்தாய் என்றுமே நிரந்தரம் நிரந்தரம்
தமிழ் கவி போற்றிடும் இனிய தமிழ் மொழி
வளர்க வளர்க  அவைதனில் புகழுடன்

------------------------------------------------------------------------------------



தமிழ் தாய் பெற்றெடுத்த  தனயன்
----------------------------------------------------
தமிழ் தாய் பெற்றெடுத்த   ஞான முத்து
தமிழ் கவிஞர் போற்றும்   வைரமுத்து


கவிஞர் பெருமை  உலகு அறியும்  நின்
கவிதை  அழகும்  தமிழ்  அறியும்


தமிழினை  பேசிடும்   அழகிலும்
விகடமாய் சொல்லிடும் அழகிலும்


திகட்டாத செந்தமிழ் தேனாக
புகட்டுவீர்  கவிதை  தமிழினை


தேன் உண்டு மகிழும் வண்டுகளாய்
மானிடம் மயங்கின நின்கவியில்


தமிழ்தாய் பெற்றெடுத்த  வைரக்கல்
பாரத்தாய்  அணியும் பதக்கத்தில்


பிரமிக்க வைத்திடும்  பிரகாசமாய் 
உரசின மார்பினில்  கம்பீரமாய்


கண்டேன்  கண்டேன்  நினது கவிதையை
துவண்டேன்  நினது ஞான ஊற்றினில்


வழங்கிடும்  திறமை  புது புது கவிதையை
பாடிடு புதிய   நல்ல நன் நெறி சிந்தனை


படைத்திடும் நல்ல  கற்பனை  அழகுடன்
வளர்த்திடு  நமது  அருமை தமிழினை


தமிழ் தாய் வளர்த்திட காவியங்கள்
அமிழ்தாய் இனித்தன நின் பணியால்


சுவைத்திடேன்   கருத்து நிறை   கவிதையை
தவித்திட்டேன்  மீண்டிட இயலாது  இனிமையில்


உலகமே  எங்கும்  இன்பமயம் 
உலகமே கவிதை களஞ்சியம்


வாழ்க  நிவிர் பல்லண்டு வளமுடன்
வளர்க வளத்துடன்  வானளாவ


--------------------------------------------------------------


இறைவனின் படைப்பு
-----------------------------------
சமுதாயமும்  இயற்கையும்  ஒன்றை ஒன்று   பிணைந்தன
செயற்கையோ   இயற்கையை   மாற்றிட   முயன்றன

ஓடிவரும்  நதிகளோ கடலில் சங்கமிக்கும்
வீசிடும் தென்றல்  சுகத்தினை தோற்றிவிடும்
வானத்தில் சூரியன்  கிழக்கு மேற்காக வலம் வந்து பகலில் ஒளி தரும்
வென்ணிலவு வானத்தில்  வலம் வந்து  இரவினில் ஒளி தரும்

எதைக் கேட்டு  பூக்கள்  பூத்தன
யார்தான் பூவில்   நறுமண  மணத்தினை  வைத்தது
எதைக்கேட்டு பூக்கள்  காய் ஆகின
எப்படி காய்கள் கனி யாகின

இயற்கையாய் அமைந்த  இந்த பூவுலகில்
இனிமைகள் கோடி  இறைவன் வைத்தான்
வானத்துக்கு  சூரியன் அழகு
முகில் கூட்டத்துக்கு  வானம் அழகு
வெண்ணிலவு   வானத்தில்  பவனி வரும்
நீல வானம்   முகிலின்  வாழ்விடம்
சூரியனிடம்  பூக்களுக்கு  காதல்
வன்டினத்துக்கு   பூக்களில் காதல்
பூக்களும்  காயாக  மாறின   பின்பு
காய்கள்  கனியாகி கனிந்தன
கனிந்திடும்  கனிகளும்   மரத்தில்   நழுவிடும் அதுபோல்
கனித்திடும்  அன்பும்  இதயத்தில்   பெருகிடும்

சங்ககால முதலாக   சமுதாயம்  வளர்ந்தது
சங்ககால முதலாக  நட்பு   தொடர்ந்தது
சங்ககாலமுதலாக  அன்பு  வளர்ந்தது
சங்ககால முதலாக  மனித முயற்சிகள்  தொடர்கின்றன

விலை பேச முடியாதது    மனித நட்பு
விலை மதிக்க முடியாதது  மனிதநேயம்
----------------------------------------------------------

பண்பு கொண்ட மனம்
----------------------------------
பாறைக்குள்ளும்   நீர் ஊற்று இருக்கும்
பாலைவனத்துள்ளும்   பசும் சோலை இருக்கும்
பாறாங்கல்லிலும்   பலமிழந்த  வெடிப்பு இருக்கும்
கல் நெஞ்சிலும்  கனிந்த மனம் இருக்கும்

மென்மையான  உள்ளம்  தவித்திடும்
மென்மையான உள்ளம்  சோர்ந்திடும்
மென்மையான உள்ளம்  வருந்திடும்
மென்மைகொண்டமனிதன்  மேன்மையானவன்

அன்பு கொண்ட   மனித உள்ளம்  என்றுமே
அடிக்க முடியா  மடைதிறந்த   வெள்ளம்
அன்பில்லாமாந்தர் அவனியிலே    வாழ்வதிலும்
அவனியை விட்டு  போவது  நன்று நன்று

அன்பு கொண்ட உள்ளம்  வெள்ளை உள்ளம் 
அன்புகொண்ட உள்ளம்   பண்பின் சிகரம்
அன்புதான் உலகில்  வழிகாட்டி
அன்புக்கும் உண்டோ  அளவுகோல்

---------------------------------------------------------------------

  
   பிஞ்சு உள்ளம்
------------------------------

பசும் தளிர்  பாலர் இளம்  மனதினை
கசத்திடும்  கருத்துக்கள் கூறிட  வேண்டாம்
கற்பனை  காவிய உலகினில்   மிதக்கையில்
பற்பல  லீலைகள்  செய்திடும்வேளையில்
சிற்பமாய்  உருக்கும்  அழகு சிலைகளை
கடும் மொழி  பேசி கலைய வைத்திடாது
தேடும்    இன்மொழி கூறி  வளர்த்திடு


தந்திர  மொழியுடன்  தாலாட்டு பாடலாய்
மயக்கிடும் மொழியால்   அணைத்திடு  பாலனை
பாரிய செயல்கள்  புரிந்திடும்  பாலனை
பற்பல  சாதனை  புரிந்திடும்  தளிரினை
செவ்விதழ் மொழியால்  சிந்தைகளித்திட
செம்மொழி கூறி  களித்திட வைத்திடு
இன்புறு மொழி தரும்  இசைந்திடும்  சிந்தையை
இன்சொல் கூறி  வளம்பெற வைத்திடு

இனிய உளவாக  இன்னாதுகூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தது  போலாகும்

--------------------------------------------------------------------------


பால் நிலவு
--------------------

இயற்கையை ரசித்திடும்   மனிதனும்
இயற்றிடும்  கவிஞ்னும்  உனை மறந்ததுண்டா

கனியென பறித்திட  மயங்கிடும் 
கனிமொழி  மழலையை  கவர்ந்தனை
விண்ணிலே  தோன்றிய   நிலவினை
விஞ்ஞான ஆராய்ச்சி    புரிந்திட்டு
வியத்தகு கணனியில்    தொகுத்திட்டு
ஆராய்ந்து  பகுத்திட  வேண்டிடின்
வாய்த்த  எம் கணனியே  விளக்கிடும்
கவிஞ்ன்  வியந்து போற்றிய வெண்ணிலவு
கணணியில்  வியத்திட வைத்தன

---------------------------------------------------------------




      புவியின் அழகு
------------------------------

வானில் தோன்றும்  மின்னலென
தேனின் இனிமைபோல் தோன்றி
கானன்னீரின்   வெறுமையினை
நானிலம்  உணர  வைத்திடுமே

வாழ்வு   என்றிடும் மாயமான் 
பாழும் மனதில்  மாரீசனாய்
வீழும் பாறை  தகர்த்துபோல்
நழுவி நழுவி ஓட்டிவிடும்

வாழ்க்கைச் சுழலில் சிக்கிகிட்டு
வாழ்வினை  உயர  வாழ்ந்திட்டு
வாழும் நெறிதனை காட்டிடும்
வாழ்ந்த மகாத்மாக்கள்  தோன்றினரே

கவர்ந்திடும்  நம்மை  காந்தமென
தகர்த்திடும் மனதை சிறு துகளாய்
நகர்ந்திடும்  சுழலுரு  புயலாக
வாழ்வோம் அழகு   வாழ்க்கையினை

விண்ணை தொட்டிட  முயன்றிடின்
மண்ணை அடைந்திட துரத்திவிடும்
வண்ணமுறு  மண்ணின்   மனித வாழ்வு
கண்ணை மறைக்கும்  மாயங்களால் 

-------------------------------------------------------------------
 
    சகிப்பு
-----------------

சகிப்பு  என்றிடும்  நாலெழுத்து
தவியாய்  தவித்திட  வைத்திடுமே

போக்கிடம் இன்றி  வேகமாய் 
புதைத்திட   அவனியில்  வைத்திடும்

பூமியில் வாழ்வு   கணந்தோறும்
பூபாளம் பாடிட  முயல்கையில்

வென்றிடு  தடைகளை  சகிப்புடன்
பெற்றிடு  உயர்ந்திடும்  வாழ்வினை

உயர்ந்த  நல் மாந்தர்   வாழ்வு
உயர்ந்திட வைத்தது   சகிப்புதான்


-----------------------------------------------