Saturday, January 25, 2014

கவிதை

கவிதை 
கவிஞ்னாகிய பெருமை  கவிஞ்னுக்குரியது   கவிஞ்ர்களை பொறுத்தவரை  அது ஒரு சிந்தனாபீடம் .  வார்த்தைகள்  நர்த்தனமாகும்  களம்  மூளைதான்.  இதன் பிரதிபலிப்பு  கவிதை. கவிதையும் ஒரு  பிள்ளைப் பேறு போல . ஒர் ஆத்மானர்த்தமான  பிரசவம். மனசுக்குள்  உருவாகிய  மத்தாப்புக்களால் உருவாகும்  வெளிப்பாடே  கவிதை. கவிதைகளின்  களம் இந்த பூவுலகில்  இருந்து  கூரிய அம்புகளாக  மூளையை தைக்கும்.  இந்த அம்புகளை  அடுக்கி  ஒழுங்காக்கி  மனிதமனங்களை  வருடும்  ம்யிலிறகாக   கவிதையாக  பரிண்மிப்பதே  கவிஙனின்     வடிகால்  கவிதைகள்.
மண்ணைப்பற்றி  மனிதர்களைப்பற்றி சமூகத்தைப்பற்றி நம் சமூகம்  நம் மனிதர்கள்  அவர்களிடம் கண்ட  ரசித்த  நிலைகளை வடிவமைத்து  தர கவிதைகளை தவிர வேறு களம் கிடையாது  கவிதை பாடல்கள்  மனிதமனங்களை  மகிழ்விக்கும்  ச்முதாய   களமாகும்

கலைகள்
கலைகளின் வளர்ச்சி  கலச்சார வளர்ச்சியுடன்  இணைந்து.  குளுகுளு  அறையில் இருந்து  வெறுமனே  ரசிப்பதற்கு அல்லாமல்  மக்களின் அத்ம திருப்திக்கும்  கலச்சார  உயர்வுக்கும்  பயனபடுமாறு  கலைகள்  உருவாக்கப்படவேண்டும்
செல்வம்  வளங்கல் 
செலவத்தை  பொருளை தேடுவது   சுலபமான காரியம்  அல்ல. அப்படி  சேர்த்த பொருளை  பாதுகாப்பதும்  இலகுவல்ல  .அப்படி சேர்த்த செல்வத்தை  திறமையாக  கையாண்டு   நல்ல வழியில்   செலவழிப்பது  ரொம்ப சிரமம்.
செல்வத்தை  நன்கு  போற்றி  பாதுகாத்தால்தான்  அது நம்மிடம் தங்கும்  சக மனிதர்களை  மதிப்பதுபோல்  பொருளையும்  மதித்து  கவுரவப்படுத்தினால்  அது நம்மை விட்டு நீங்காது
கனவுகள்
வாழ்கையில்  கனவு காணவேன்டும்.    கனவு என்பது  நடத்தவேண்டிய  ஆசைப்படுகின்ற  வாழ்க்கைப்பயணத்தின் மாதிரி உருவம்  கனவுகள்தான்  பயணத்தின் பாதையை   வழிமுறையை  கண்டு பிடிக்க உதவும்.  கனவுகள்  நியம்மாக  கடுமையாக உழைக்க வேண்டும்
மனித வாழ்க்கையில் பொறாமை கூடாது  சக மனிதர்களிடம்  விட்டு  கொடுத்து  ச்மாளித்து  நன்மைகள் வேண்டி 
செயல் பட்டால்  யாவரும் சாதிக்க முடியும்




  கவிதை  என்பது சொல்களின் கலை வடிவம்
   தமிழ் கவிதை   மரபு மிக நீண்டது .  அது குறித்த சிந்தனை மிக  நெடியது  .பண்டிதர்கள் போற்றும்  மரபுக் கவிதை  சங்க காலங்களில்  பல இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டது
தமிழில்  நான்கு வகை கவிதைகள்  உன்டு
   
ஆசுகவி  -------  தேவைக்கேற்ப  உடனே  கவிதை பாடுபவர்கள்   -------ஆசுகவி  கல்லடி வேலுப்பிள்ளை
மதுரம் -------  இனிமை  ,  சொற்சுவை  பொருட்சுவை  அமையப் பாடுபவர்கள்-------  மதுர  கவி  கம்பர்
விஷ்தாரம்   -----  விஷ்தாரமென்றால்    விரிவு  என்பது  .  ஒரு  பொருளை  விஷ்தாரமாக  பாடுபவர்   
    
                      விஷ்தாரக்கவியாவார்   ---- அமிர்த கவிராயர்
சித்தாரம்  ---------  சித்திர கவி  சித்திரமும்  கவிதைஉம்  ------ஓவியமும்  கவிதையும்   இணைந்திருப்பது 
                       இதனை ஓவியக்கவிதைஎன்றும் கூறுவர்  ---------- 
                                                                                  புலவர் நாயகம்
                                                                              சிவ முருகெச செட்டியார்
                                                                             முத்தையா
                                                                              அப்துல் கபூர் சாகிப்
   சித்திர கவிதை  தொகுப்பு   ---௧  .  முரச பந்தம்
                                         2  .  நாக பந்தம்
                                         3   .  ஆறரை சக்கரம்
                                         4    .  எண்ணரைச் சக்கரம்
                                         5   .  கோமூத்திரி

    முரச  பந்தக் கவிதை   - ஈரமான   மலரிய  மாபதமே
                                                      தீரமான   மலரிய  மாபதமே
                                                     சீரமான   மலரிய  மாபதமே
                                                      தார மான  மலரிய  மாபதமே

  மரத்துள்   மறைந்தது  மாமதயானை
  மரத்தி      மறைந்து   மாமதயானை