தை பூசம்
___________
தைப்பூச திருநாள் முருகப்பெருமானுக்கு உகந்த திருநாள். முருகன் சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து அக்னி குழம்பாய் தோன்றியமையால் அக்னி போல் ஜொலித்துக் கொண்டிருக்க்கிறான்.
நல்லூர் கந்த சாமி கோவில்
இலங்கையில் வடபால் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லூர் கந்தன்
அலங்காரப்பிரியன். வேண்டுவார் வினை தீர்ப்பதுடன் மனக்கவலையும் போக்க வல்லவன்.
நல்லூரின் நடு நாயகமாக அமைந்து மக்கள் துயர் துடைப்பவன்..
சதா சர்வ காலமும் சண்முகப்பெருமான் நல்லுர் இராசதானியில் செங்கோல் ஆட்சி புரிவதுபோல் உள்ளது.
படை யெடுப்புக்களிலும் இடிபாடுகளுலுக்கு இடையில் இன்றும் கம்பீரமாக ஐந்து நிலை கொண்ட வானுயர்ந்த கோபுரங்களும் பக்தர்களை வா வா என கை நீட்டி அழைப்பது போல் அமைந்திருக்கிறது
பக்தர்கள் பசுவைத்தேடும் கன்று போல் ஆவலாய் பாய்ந்து வருவதுபோல் அடியார்களும் அவல்முற்ற மக்களும் கையை சிரம் மேல் குவித்து அபயம் அபயம் என கூவியபடி அந்த நல்லுர் கந்தனது பாதங்களை சரணடைகின்றனர்
அப் பெருமானின் திருவருளால் மோட்சம் உலக சுகபோகம் கிடைக்கவும் கவலை துன்பம் நீங்க அருளுகின்றான்
அன்பு பாசம் நேசம் பொறுமை பணிவு இன்மொழி தன் நம்பிக்கை தளராத மனம் கொண்டு அப் பெருமான் நல்லூர் கந்த கழலை அடைய வேண்டும்
முருகன் ஒரு அழகன் கொன்றை சூடிய பெருமானுக்கு கொஞ்சு தமிழிலில் ஒம் எனும் மந்திரத்தை முருகன் உணர்த்தியமையால் சுவாமிநாதன் எனும் பெயர் கொண்டார்
பழமையான கோவில் களின் கட்டுமான தொழில்னுட்பத்தை இப்போது எதனுடனும் ஒப்பிட முடியாது
அவை அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்குள் ஒரேமாதிரியான வெப்பனிலை இருபது போல் இருப்பது ஆச்சரியம்.
நமது கோவில் களை வெறும் கட்டிடங்களாக பார்க்கமுடியாது அவற்றால் எத்தனையோ ப்யன்பாடுகள் உள்ளது.
கோவில்கள் மக்களின் அறிவு வளரும் இடமாக உல்ளது
ஆரம்ப காலங்களில் கலை கலச்சாரம் வளர்க்கும் இடமாகவும் பக்தி நெறி காட்டும் இடமாகவும் இருந்திருக்கிறது
தமிழ் நாட்டில் 35 ஆயிரம் கோவில்கள் இருந்திருக்கின்றன அவை எல்லாம் ஒரு நிறுவனமாக இயங்கி உள்ளன
கலை கூடமாகவும் புராண இதிகாச விரிவுரை மண்டபமாகவும் மக்களின் ஒன்றுகூடும் இடமாகவும் திகழ்ந்தன
பழைய கோவில் கட்டுமானம் இன்றைய கட்டுமானங்களுடன் ஒப்பிட முடியாத அளவு ஆச்சரியமும் அற்புதமும் வியப்பும் கொண்டவையாக இருக்கிறது
பத்துமலை முருகன் ---------- மலேசியா
______________________________________________
தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள் எல்லாமுருகன் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது பால் குடம் ஏந்தி மஞ்சள் சிவப்பு வெள்ளை என கலர் கலராய் உடை அணிந்து முருகனுக்கு தமது பிரார்த்தனையையும் நன்றியினையும் பக்தர்கள் செலுத்தவர்
எல்லா முருகன் கோயிலிலும் சிறப்பு வாய்ந்த உற்சவம் தைப்பூசம் எனினும் மலேசியாவில் உள்ள கோலாம்பூர் பத்துமலை முருகன் கோயிலில் மிகசிறப்பு வாய்ந்தது அரசாங்கமே விடுமுறை அளித்து தைப்பூச விழாவின பெருமைப்படுத்துகின்றனர் கிட்டத்தட்ட 15- லட்சம் மக்கள் கூடுவர்
தைப்பூச நாளுக்கு ஒரு வாரம் முன்பாகவே மக்கள் தமது வழிப்பாட்டை தொடங்கிவிடுவர்
பத்துமலை முருகன் கோயிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிற்பம் 142 அடி உயரத்தில் உண்டு முருகன் குறுஞ்சிக் கடவுள் என்றுமே மலைமேல் குடிகொண்டவர் .
பத்து மலை முருகன் கருவறை முருகன் வள்ளி தெய்வானை சமேதராய் மலைமீது 272 படிகள் கொண்ட உயரத்தில் குகையினுள் இயற்கையாய் வீற்றிருக்கிறார். மிகமிகப் பழமை வாய்ந்த தலம் மிக மகிமை பொருந்திய தலம் .மலேசியா மக்கள் இன மத வேறுபாடுகளுக் அப்பால் முருகனையும் அத்தலத்தினையும் பெருமைப் படுத்துகின்றனர்.
பத்துமலை முருகன் சிலை உலகிலேயே மிகமிக உயரமான சிலை என கின்னஷ் குறிப்பு கூறுகின்றது.இந்த பத்துமலை முருகன் சிலை மலேசியாவின் அடையாளம் எனக்கூறுவர் சுற்றுலாப்பயணிகளை கவரும் உலகப்பிரசித்தி பெற்ற முருகன் பத்துமலை முருகன் .முருகன் பெருமை பக்தர்கள் அறிவர்
முருகன் என்றாலே அழகு இளமை வீரம் புகழ் பழமையான தெய்வம் . தமிழ் கடவுள் முருகன்
மு ----- இடையினம்
ரு ------ மெல்லினம்
க ------ வல்லினம் மூன்றும் சேர்ந்து தமிழ் எனவேதான் முருகன் தமிழ் கடவுள்
உலகின் தென்பகுதிக் குரிய காக்கும் கடவுளாவர்
முருகன் மலைமேல் குடி கொண்டவர்
முருகன் இந்தியாவில் ஆறுபடை வீடுகளில் வீற்றிருந்து மக்களுக்கு காட்சி தருபவன்
ஆறுபடை வீடுகளாவன
திருப்பரங் குன்றம் --------இந்த முருகன் சந்தோசமாக இருப்பவன்
திருச்செந்தூர் ----------- இந்த முருகன் சோகமாக காட்சி தருபவன்
பழனிமலை ----------- இந்த முருகன் யோநிலையில் காட்சி தருபவன்
சுவாமிமலை ---------- ஆசிர்வதம் தருவதுபோல் காட்சி தருபவன்
பழமுதிர்சோலை -------- குறும்புகள் நிறைந்தவனாக காட்சி அளிக்கிறார்
குன்று தோறாடல் ------ விளையாட்டு தன்மை நிறைந்தவனாக
காட்சி அளிக்கிறார்