ஆறுமுக நாவலர்
------------------------------------
சீறீ ல சீறீ ஆறுமுக நாவலர்
இலங்கை அரசாங்கம் 1971 - 10 - 29 ஆம் திகதி சீறீ ல சீரீ ஆறுமுக நாவலரின்
150 ஆவது பிறந்தநாள் நினைவு தினத்து ஞாபகமாக விசேட முத்திரை வெளியிட்டது. இவர்
நமது மொழி சமயம் நாடு முதலியனவற்றிற்கு அளப்பரிய சேவை செய்துள்ளார்
சைவ சமயத்துக்காக பாரிய தொண்டு புரிந்துள்ளார்
இவரது காலம் 1822---!879 வரை
-----------------------------------------------------------
சைவ சித்தாந்த வழியினை போதிக்க நடை முறையில் வாழ்ந்து காட்டியவர் ஆறுமுக நாவலர் நாவலர் பெருமான் 19 ஆம் நூற்றண்டில் சைவசமயத்துக்கும் தமிழுக்கு செய்த தொண்டு அளப்பரியது அவரை ஒரு அவதாரம் எனலாம் அவரை சமயகுரவர் வரிசையில் ஐந்தாம் குரவர் என்பர்
சைவமே நிறுத்துஞ் சைவாச்சாரியார் நால்வரோடு , கைவ்ரு மெந்த நூலுங் கண்டுரை கற்றோற்கின்பம் செய்வகை எழுத வல்ல ஆசிரியர்கள் நால்வரோடு இவராமென்ன யார்க்கும் அதிசிய அதிகமாக என்று சேற்றூர் அருணாசலக்கவிரயர் (நாவலர் சரித்திரம் 30 ஆவது பாட்டு) கூறுகிறார்
சிவசம்புப் புலவர் --
" ஆரூரனில்லைப் புகலியர் கோனில்லை யப்பனில்லை
சீருரு மாணிக்க வாசகனில்லைத் திசையளந்த
பேருரு மாறுமுக நாவலனில்லைப் பின்னிங்கியார்
நீரூரும் வேணியான் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே"
நாராயண சுவாமி முதலியார்--
" தமிழ் ஆசிரியர்களுள் சென்ற நூற்றாண்டிலே சிவசித்தாந்தத்துக்கு மறு உயிர் கொடுத்தவர் திரு. ஆறுமுகா நாவலர்
புலோலி நா. கதிரைவேற்பிள்ளை---
' உலகமுவப்பத் தோன்றிய பரசமய கோளரி"
சே. வே. ஜும்புலிங்கபிள்ளை. , கரண்ணீகார் வேதி. சென்னை--
நாவலர் உருவப்படத்தை யான் பூஜை செய்வதோடு அவர் குருபூஜைத்தினத்தையும் இத் தேசத்தவனாகிலும் கொண்டடுவதுவழக்கம்".
சி.வை தாமோதரம்பிள்ளை அவர்கள்
" நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லு தமிழ் எங்கே சுருதி எங்கே - எல்லவரும்
ஏத்து புராணமகா கமக்களேங்கேப் பிரசங்கமெங்கே
யாத்தனறிவெங்கே யறை