
திருக்குறள்
வான்புகழ் வள்ளுவனை உலகினுக்கே தந்து பெருமைஉற்றது தமிழ்நாடு
தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வோர் பயன் தெரிவர்
மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
நிற்க அதற்குத் தக
நகையீகை இன்சொல் இகழாமை நான்கும்
வகை யென்ப வாய்மைக் குடிக்கு
நன்றறி வாரிர் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியோடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து
பிறர் பழியும் தம்பழியும் நாணுவர் நாணுக்
குறை பதி யென்னும் உலகு
---திரு வள்ளுவ மாலை---------
வான்புகழ்வான்புகழ் வள்ளுவனை உலகினுக்கே தந்து பெருமைஉற்றது தமிழ்நாடு றள் பற்றிய பிற இலக்கியவாதிகளின் கணிப்பு
அணுவைத் துளைத்து ஏழ் கடல் புகட்டி
குறுகத் தறித்த குறள் ஔவையார்
கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
எல்லாப்பொருளும் இதன்பால் உளதென்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்--ஸொல்லால்
பரந்த பாவால் என்ன பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத்துணை
ஆயிரத்து முன்னூற்று முப்பத்தருண்கு றளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின்போய் ஒருத்தர்
வாய் கேட்க நூல் உளவோ மன்னு தமிழ்ப்புலவராய்
ராய்க்கேட்க வீற் றிருக்கலாம்
திருக்குறள் வள்ளுவ பெருந்தகையினால் உலகுக்கு அளிக்கப்பட்ட புதையல்
பல்வேறு புலவர்கள் அறிஞர்கள் திருக்குறளுக்கு உரை விளக்கம் எழுதினார்கள் காலம் கடந்தும் இன்று 21 ஆம் நூற்றாண்டிலும் அதன் பெருமை பேசப்படுகிறது .பரமேலழகர் பரிப்பெருமாள் காளிங்கர் மணக்குடவர் போன்றோர் உரை எழுதி மக்களிடம் திருக்குறளினை கொண்டு சேர்த்த பெருமை உடையவர்கள்
திருக்குறள் 1330 குறள்களைக்கொண்டது
அறத்துபால் பாயிரம் , 1-௪ அதிகாரம் எனவும்
இல்லறவியல் 5---௨4 அதிகாரமும்
துறவறவியல் 25---௩7 அதிகாரமும்
ஊழியல் 38 என ஒரு அதிகாரமும் கொண்டது
பொருட்பால் அரசியல் 39-------௬3 அதிகாரமும்
அமைச்சியல் 64--------௭3 அதிகாரமும்
அரணியல் 74---------௮1 அதிகாரமும்
நட்பியல் 82------௯5 அதிகாரமும்
குடியியல் 96-------௰8 அதிகாரமும்
கொண்டதாகவுள்ளது
காமத்துப்பால்
களவியல் 109-------- 115 அதிகாரமும்
கற்பியல் 116------- 133 அதிகாரமும் கொண்டதாக
திருக்குறள் 133 அதிகாரமாகவும் ஒரு அதிகாரம் பத்து குறளாக 133 அதிகாரமும் 1330 குறள் களையும்
கொணடு கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு மேலாக மக்களிடையே வழிகாட்டியாக மக்கள் சமுதாயத்தை சமுதாய அமைப்பினையும் வாழ்வுமுறையையும் எழுதாத சட்டங்களாக
மக்கள் சமுதாயம் பின்பற்றுகின்றது
திருவள்ளுவர்
___________________
தமிழ்மறை எனும் தமிழனின் வாழ்வு முறையினை வழிப்படுத்த திருக்குறளை தந்த தெய்வப்புலவர்
மைலாப்பூரில் பிறந்து மதுரை தமிழ் சங்கத்தில் பங்கு கொண்டு தமது நூலால் பலருடைய பாராட்டைப் பெற்றவர்
கடவுள் நம்பிக்கையுடையவர் என்பதை காட்ட கடவுள் வாழ்த்தினை பத்து குறளால் திருக்குறளை ஆரம்பிக்கிறார்
ஊழ்வினை பழவினை முன்யென்ம வினை என நம்பிக்கை கொண்டு ஊழியல் எனும் அதிகாரத்தினையும் திருக்குறளில் பாடிஉள்ளார்
இல்லறம் அதன் பின்னர் துறவறம் எனெ வாழும் முறைகளையும் திருக்குறளில் பாடிஉள்ளார்
அறம் வலியது அறம் இல்லாவிடில் அறம் கூற்றுவன் ஆகும் எனும் பொருள்பட அறத்தினை நன்கு விளக்கி கூறிஉள்ளார்
அரசன் அமைச்சன் அரசாங்கம் எப்படி அமைய வேண்டுமென குடி மக்கள் எப்படி வாழ்வேண்டுமென பொருட்பாலில்
39-௰8 வரை உள்ள அதிகாரங்களில் நன்கு காட்டிஉள்ளார்
அவர்க்குரிய அரசியல் பொருளியல் உளவியல் சமூகவியல் கருத்துக்கள் இன்றும் பின்பற்றக்கூடியனவாகவும் உண்மைகளையும் கொண்டுள்ளன
அன்பு என்பது ஒரு பெரிய தமிழ் மறை .அந்த தூய அன்பு மட்டும் மக்களிடையே தொற்றுக்கிருமி போல் பரவிவிட்டால் பூவுலமே சொர்க்கம் ஆகிவிம் என்பதுபோல் அன்புடைமையை விளக்கியுள்ளார்
அன்பு என்பது போல் கற்பும் மக்களிடையே உண்மையாய் இருக்கவேண்டும் கற்பு என்பது ஒழுக்கம் மட்டுமல்ல சொன்னபடி செய்தல் விதிக்கப்பட்ட ஓழுக்கங்களை பின்பற்றுதல் என திருவள்ளுவர் தமது நூலில் நன்கு
உறுதிபடக் கூறிஉள்ளார்
ஏழை யின் மீது கொண்ட இரக்கம் இரப்பவர் இரத்தல் என்பது மிக துன்பமானது என்பதால் மக்கள் ஏழை மீது இரக்கங் காட்ட வேண்டு மெனெ தெளிவாய் கூறிஉள்ளார்
மக்கள் இல்லறம் துறவறம் பின்பு வானுலக வாழ்வுக்கும் பூவுலுகிலேயே மண்னுலகில் நல்லபடி வாழ்ந்து பின்னர் வின்ணுலகம் செல்ல கடவுள் நம்பிக்கை மிக முக்கியம் என்பதனையும் மிக நயம் பட திறமையாக திருக்குறளில் வெளிப்படுத்திய தீர்க்கதரிசி திருவள்ளுவர். இவர் தமிழ் உலகத்து தவப்புதல்வர் ஆவார்
**
*எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு(423 அறிவுடமை )
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறு கொள்ளாமல் அப்பொருளின் மெய்ப்பொருள் காண்பதே அறிவாகும்
*வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறுபோல் கெடும்
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும் ( 435 குற்றம் கடிதல்)
*செய்தக்க அல்ல செயக்கெடும் ,செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
ஒருவன் செய்யத் தகாத செயல்களை செய்வதனால் கெடுவான்
செய்யத்தக்க செயல்களை செய்யாது விடுவதனாலும் கெடுவான்( 466 தெரிந்து செயல் வகை)
செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக் கீழ் தங்கும் உலகு -------௩89 - -இறை மாட்சி
குறை கூறுவோரின் சொற்களை செவிகைக்கும் நிலையிலும்
பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடை நிழலில் உலகம் தங்கும்
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் -------௨60 புலால் மறுத்தல்
ஓர் உயிரினையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழும் நெறியினை உடையவனை உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் கை கூப்பி வணங்கும்
குனம் நாடி குற்றமும் நாடி அவற்றுல்
மிகை நாடி மிக்க கொளல்
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து பின்னர் குற்
றங்களையும் ஆராய்ந்து ,மிகுதியானவை எவையென ஆராய்ந்து
மிகுந்திருப்பது எதுவென தெளிந்து கொள்ளல் வேண்டும்
கடிந்த கடிந்து ஓரர் செய்தாற்கு அவைதாம்
முடிந்தாலும் பிழை தரும் ---------௬58 ---வினத்தூய்மை
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை செய்யாது விடாமல் தொடர்ந்து செய்து முடித்தாலும் அச் செயலால் துன்பமே விழையும்
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் ---------௬37 - -----அமைச்சு
நாம் கற்ற நூலறிவால் செய்யும் வகைகளை அறிந்தும் ,எனினும் உலக இயல்போடு சேர்ந்து அதற்கு பொருந்துமாறு செயல்களை செய்ய வேண்டும்
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு -------௪26 ---அறிவுடைமை
உலகம் எப்படி செயல் படுகிறதோ அவ்வகையில் உலகத்தோடு பொருந்திய வகையில் செயல் படுவதுதான் புத்திசாலித்தனமாகும்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு
பிறருக்கு கேட்டைத் தரும் செயல்களை மறந்தும் ஒருவன் செய்யக்கூடாது. எண்ணவும் கூடாது. எண்ணினால் எண்ணியவனுக்கே கேடு விழையும் ( 204 தீவினை அச்சம்)
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சாமை வெல்படை வேந்தன்
வெருக்கையுள் எல்லாம் தலை ( 761 படை மாட்சி)
எல்லா வசதி கட்டமைப்பு நிறைந்ததாய் தடைகள் இடையூறு எதிர்ப்புகளுக்கு அஞ்சாத வெற்றி கொடுக்கக்கூடிய படைகளை கொண்டவனுடைய அரசனுக்கு இதனைவிட வேறு செல்வம் பெருமையில்லை. ஒரு அரசன் புகழடையக்கூடிய எல்லாச்செல்வங்களிலும் பெரும் செல்வம் வெற்றி தரும் இப்படை ஆகும்