
உண்மையான அன்புக்கு ஏமாற்றத் தெரியாது ஏமாறத் தான் தெரியும்
புத்தகங்கள் கண்களைத் திறக்கும் திறவு கோல்
உன்னை செதுக்கும் உளி உன்னிடம் உளது
பிரார்த்தனை கடவுளிடம் சேர்க்கும் சேவை செய்ய கடவுள் அருகே வருவார்
ஆயுதத்தால் அல்ல வெற்றி ஆன்மாவின் உத்வெகத்தால் வெற்றி கிட்டும்
உள்ளத்தின் அச்சத்தை வெல்பவனால் எதிரியை வெல்ல இயலும்
கருணை உள்ள உள்ளம் வெற்றியை பெற முடியாது
வீரனால் மட்டும் தான் பிறர்க்கு உதவ முடியும். வெற்றி பெற முடியும்
விதியைப் படைபபவன் இறைவன் எனினும் துணிவு உன்னுள்ளே தானே இருக்கிறது.
ஒருவனுக்கு பொருள் பணம் புகழ் அல்ல பெரிது அவனைப் புரிந்துகொண்ட அதற்க்கு தீனி போடும் திருப்தி அடையச் செய்யும் மனநிலை உடையவர்களது அன்பும் ஆதரவும் நட்பும் வாழ்த்துக்களுமே பெரியதாகும்.
வசந்தகாலத்தின் மரத்தின் இலைகளின் பொய்வேசம் இலை உதிர் காலத்தின் அடிச் சுவடு அதுபோல் இளமை என்பதும் முதுமையின் அடிசுவடு
பிறர் நலம் காண வாழத்தொடங்கும் போதுதான் மனிதர்கள் வாழத்தொடங்குகிறார்கள்
அலை ஒய்ந்த கடல் எங்கும் இல்லை அதுபோல் நோக்கமின்றி ஏற்பட்ட உலக சிருஷ்டி எதுவும் இல்லை. எல்லா சிருஷ்டி வாழ்வின் இறைவனால் இயற்கையில் எற்படுத்தப்பட்டது
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை மனதில் பதியுமாறு சொல்லவல்லவர் கற்றவர் எல்லாரிலும் மேலானவரென மதிக்கப்படுவர்
அறிஞர்கள் அவையில் நாம் கற்றவற்றை எடுத்துக்கூறி நம்மைவிட அதிகம் கற்றவரிடம் இருந்து மேலும் கற்றவெண்டும்
பகைவற்கு அஞ்சாத வீரம் பெறும் ஆண்மை அந்த பகைவற்கு ஒரு துன்பம் வரும் போது உதவுவது ஆண்மையின் உச்சம் என புகழ்ப்ப ம்
ஆராய்ந்து பார்க்காமல் கொண்ட நட்பு அந்த ந்ட்பிலிருந்து விடுபட முடியாட அளவுக்கு கேடுகளை தரும்
பழிவந்து சேரக்கூடாது என்ற பண்புடைய குடியில் பிறந்தவர்களுடைய நட்பை பெற்றிருப்பது பெரும் சிறப்புடையதாகும்
அறிவில்லாத ஒருவருடைய நட்பை துற்த்தல் ஒருவரின் நற்பயனாகும்
சிரித்துப்பேசி நடிப்பவர்களின் நட்பைக்காட்டிலும் பகைவர்களால் எற்படும் துன்பம்மிக்க நன்மை தரும்
மனித வாழ்வின் உயர்வு அவர் மனதில் கொண்டுள்ள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்
வெள்ளத்தனய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாக முடிக்கவேண்ட இல்லையெல் அது அரைக் கிணறு தோண்டிய கதையாக இருக்கும்
தன்னலம் விரும்பாமல் தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகிறவன் தன்னைச் சுற்றியுள்ளோர் நண்பர்கள் நாட்டுமக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து
அவர்களை தாங்கும் தூண் ஆவார்
முடியும் என்பது முன்னேறத் துடிப்பவர்களின் முதல் எழுத்து
முடியாது என்பது சோம்பேறிகளின் தலை எழுத்து
பாறங்கல்லின் தேவையற்ற்பகுதிகளை நீக்க அழ்கிய சிலை உருவாகும்
மனிதமனங்களின் தேவையற்ற சிந்தனைகளை நீக்க நல்ல மனிதன் உருவாகுவான்
எல்லா இனத்துக்கும் அதற்குரிய முகத்தையும் முகவரியையும் கொண்டது
கற்பூரம் எரிந்து பிறர்க்கு ஒளியைக் கொடுக்கும் மெழுகுவர்த்தி எரிந்து தன்னை அழித்தபின் பிறர்க்கு ஒளி கொடுக்கிறது அதுபோல் உயர்ந்த மனிதர்கலெல்லம் தம்மை இழந்து சமுதாயத்துக்கு ஒளியாகி வாழ்ந்து கொண்டிருகிறார்கள்
மனிதனைவிட மரம் செடிகள் சிறந்தன
செடிகள் தமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என எரியுமே த்விர பிற்செடிகளுக்கு தண்ணீர் கிடைக்கிற்தென எரிந்துவிடுவது கிடையாது
வான் சுருங்கியதாக வரலாறு கிடையாது அதுபோல் மனித சிந்தனைகளும் மனிதனும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும்
விசம் கொண்ட போத்தல்களில் லேபல் இருக்கும் ஆனால் மனிதர்களில் விசம் எது அமுதம் எது என காணமுடியாது மனிதவர்க்கங்கள் தடுமாறிக்கொண்டு இருக்கிறது
No comments:
Post a Comment