Saturday, August 17, 2013

அறிமுகம்

கருணாகரப் பிள்ளையார் கோயில்


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா


வளரும் இளம் சந்ததிகள் சமுதாயம் எனும் அழகுக் கோவிலின் ஒவ்வொரு செங்கற்கள். அவர்கள் மனங்கள் சிந்திக்க, சிந்தனை செய்ய, அவற்றை நல்வழிப்படுத்த சைவமும் தமிழும் தமிழ் சமுதாயத்தின் வழிகாட்டிகள். எனவே நமது சமுதாயத்தின் இளம் சிறார்களின் உற்ற துணையாகவும், உந்து சக்தியாகவும் தொழிற்பட இந்த நாவுக்கினியன் செயல்பட்டால் அது நம் முயற்சியின் வெற்றியாகும். நன்றி