இசை கோலங்கள்
கணபதி துணை
விக்னம் தீர்க்கும் விக்ன வினாயகா
வினைகளை நீக்கி நின்னருள் தாதா
மானிட துயரங்கள் மடியவே என்றும்
மண்ணில் நல்லருள் பொழிந்திடுவாயே
கலியுக வேதனை கலக்கிடும் மாந்தரை
கலிதனை நீக்கி கருணை புரிந்திடு
நலிவுறு மாந்தரின் வலியுறு துயரங்கள்
பொலிவிழந் திட்டிட போக்கியே அருள்க
பார்மிசை மாந்தர் படர் துயர் அகல
பஞ்ச கரத்தினை காட்டி அழைத்திடு
சோர்வுற்றிட்ட பக்தர் மனங்களில்
சோபை ஒளியினை காட்டி அருள்க
பன்னிரு கரமுடை வேலவன் முன்னே
அண்ணலாய் வந்து அவனியில் உதித்த
இன்புடன் வாழும் வழிநெறி காட்டும்
ஆனைமுகத்தோனே திருவடி சரணம்
----------------------------------------------------------------------------
இசை ஒரு முத்து
----------------------------
வாவியில் தோன்றிட்ட மலர் மொட்டு
வானத்தில் நிலவின் வரவினால்
மாதாவைக் கண்ட மழலை போல்
ஆவலுடன் இதழை விரித்தன
தேனுண்ண வந்திடும்வண்டினம்
தேனுண்டு மயங்கிக் களித்தன
மயங்கிடும் வண்டினம் எழுந்தும்
சுயமாக ரீங்காரம் இசைத்தன
ரீன்கார இசை ஓசை நயமாகி
ஒங்கார வடிவாகி இனித்தன
நயமான இசையும் பாவமாய்
நயமாகி சந்ததை அணைத்தன
இனித்திடும் எம் அருமை செந்தமிழும்
இசையுடன் கூடிக் களித்தன
இசை சுவரங்களின் சேர்க்கையால்
அசைவுடன் தோன்றிடும் முத்துசரம்
--------------------------------------------------------
இசை இன்பம்
--------------------
இசையின் இன்பம் அறிந்திட
விசையுடன் பாரினில் பறந்திடும்
தேடி அலைபவர் இதயத்தில்
தேனாய் தித்திக்கும் அமுதமாய்
காதலர் உள்ளம் களித்திட
காவிய கானமாய் தோன்றியே
பாமரமக்களும் இசைத்திட
பாசுர பாவமாய் பரவின
வலையுரு மனதின் அலையினை
கலையா நீரின் அருவியாய்
தாளா தாகமாய் மீட்டிட
மீளா இன்பங்கள் அளித்திடும்
----------------------------------------------------
-இசையில் பல வகை
--------------------------------
கர்னாடக இசை
மெல்லிசை
கிராமிய இசை
திருமுறைகள்
தேவாரம் திருவாசகம் திருப்பல்லாண்டு புராணம் திருப்புகழ்
இவைகளை பஞ்ச புராணம் என்பர்
சுலோகம்
சிறுவர் பாடல்கள்
--------------------------------------
ராகங்கள்
கர்னாடக சங்கீதத்தில் 72 மேளகர்த்தா ராகங்கள் உண்டு இவை சம்பூர்ண ராகங்கள் .தாய் ராகங்கள்
இவற்றிலிருந்து சேய் ராகங்கள் பிறக்கின்றன. இவை ஜன்னிய ராகங்கள் என்பர். இந்த ஜன்னிய ராகங்கள் உபாங்க ராகம் பாசாங்க ராகம் வக்ர ராகம் வர்ஜ ராகம் எனெ பலவகைப்படும். சேய் ராகங்களில் எட்டு சுரங்களிலும் குறைவான சுரங்கள் காணப்படும்.
தாய் ராகங்களில் எட்டு சுரங்களும் அது ச ரி க ம ப த நி ச என கூறலாம். ஆனால் எட்டு சுரஷ்தானங்களும் வேறுபடுவதனால் 72 மெளகர்த்த ராகங்கள் உருவாகின்ரது
இந்த ராகங்களில் இரு விதமான மத்திமம் கானப்படுவதனால் அதாவது 36 சுத்த மத்திம ராகங்களும் 36 பிரதி மத்திம ராகங்களும் எனெ 72 ராகங்கள் உருவாகின்றது
சேய் ராகங்களின் சுரஷ்தானவேறுபாட்டுகு எற்ப அனேக ஜன்னிய ராகங்கள் உருவாகின்றது
ஜன்னிய ராகங்கள் சிலவற்றின் ராகங்களின் ஆரோகணம் அவரோகணம்
பூபாளம் ஆ--- ச ரி க ப த சா .. _________15 வது மேளகர்த்தா வின்
அவ --- ..ச த ப க ரி சா
மோகனம் ஆ --- ச ரி க ப த சா..
அவ ----..ச த ப க ரி சா____________29 வது ஜன்னியம்
சுத்த சாவேரி ஆ--ஸ ரி ம ப த சா .. ___________22 வது
அவ -- .. ச த ப ம ரி சா
மலகரி ஆ --ஸ ரி ம ப த சா.. ________ 15 வது
அவ --- ..ச த ப ம க ரி சா
கம்சத்துவனி ஆ --ஸ ரி க ப நி சா.. _________29 வது
அவ --- ..ச நி ப க ரி சா
மத்திய மாவதி ஆ ---- ச ரி ப ம நி சா.. ________28 வது
அவ ---..ச நி ப ம ரி சா
மந்தாரி ஆ --ஸ ரி க ம ப நி சா .. ________51 வது
அவ--- ..ச நி ப ம க ரி சா
பிலகரி ஆ --- ச ரி க ப த சா .. ________29 வது
அவ ---..ச நி த ப ம க ரி சா
காம்போஜி ஆ --- ச ரி க ம ப த சா .. ________28 வது
அவ ----..ச நி த ப ம க ரி சா
சிரீ ரஞ்ஜனி ஆ --ஸ ரி க ம த நி சா .. __________ 22 வது
அவ --- ..ச நி த ம க ரி சா
இசைக்கலை எட்டு சுரங்களால் ஆனது.அவை ச ரி க ம ப த நி ச.
அனேகமாக எல்லாப்பாடல்களும் எட்டு சுரங்கலினுள் அடங்கும். இதனை சட்ஜம் ரிசபம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் நிசாதம்
இதி ல் முதல் சட்ஜம் மத்திமச்தாயி சட்ஜம் என்பர். எட்டாவது சட்ஜம் மேல்ச்த்தாயி சட்ஜம் என்பர். பழைய காலத்தில் இந்த ஏழு சுரங்களையும் முறையே இளி விளரி தாரம், குரல், துத்தம், கைக்கிளை,உழை. என அழைப்பர்
இசையைப்பாடிய கலைஞர்கள் பாடலுடன் மேலும் இனிமை சேர்க்க இசைக்கருவிகளையும் பக்கத்துணையாக கொண்டு இசையை பாடினார்கள்.சங்க காலத்தில் மத்தளம் , யாழ். குழல் ஆகிய கருவிகளும் பாவனையில் இருந்தது. எனினும் யாழ் தான் நாட்டில் பெருஞ்சிறப்பு பெற்றது.பல இசைக்கலைஞர்கள் யாழ் பாடிகளாக சிறப்புப் பெற்றிருந்தார்கள். யாழ்ப்பாணம் எனும் பெயரே பாணன் ஒருவருக்கு பாடல் பாடி மகிழ்வித்தமையால் தமிழ் அரசரால் பரிசாக கொடுக்கப்பட்டது ஒரு நாட்டையே பரிசாகப் பெறும் பெருமை வாய்ந்தாக இசையின் பெருமை மக்களால் பொற்றப்பட்டது. எனலாம்
இசையின் ரசிகர்கள் இசையால் கவரப்பட்டவர்கள் இசையின் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பு அளித்தவர்கள்
இசை சுருதி லயம் நாதம் என்பவற்றின் அடிப்படையில்; இவை ஆதாரமாக உள்ளத . இசைக்கு சுருதி மாதா லயம் பிதா என்பர்.
சுருதியுடன் கூடிய இசையும் லயத்துடன் பாடல்களும் ரசிக்கக்ககூடியன

No comments:
Post a Comment