Thursday, March 12, 2015

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள்

சங்க நூல்கள்  .
 திருக்குறள்   ,இதிகாசங்கள்  ,ஐம்பெரும் காப்பியங்கள்,  பன்னிரு திருமுறைகள்  திரு மந்திரம்.எனெ பலவகை நூல்கள்  எம் தமிழ்  சமுதாயத்தில் உண்டு. இவை இன்றும்  வழிப்படுத்தும் நூல்கள்.  பல்வேறுபட்ட  அறிஞர்கள்  .புலவர்கள்.,பண்டிதர்கள் வித்துவான்கள், பெரும் பங்கு ஆற்றிஉள்ளனர்.  இதனைவிட இசைத்தமிழ்  எனும் வடிவம் உண்டு.  தற்போதை  தலை முறைகள்   நுனிப்புல் மேய்வது போல்  சங்க இலக்கியங்களை தொட்டுச் செல் கின்றனர்.
இவை  பெரிய அளவில் நடைமுறைக்கு வந்தால்  சமுதாயத்தில்   பல பாரிய மாற்றங்கள்   வரும் எனலாம்


  ஐம்பெருங்காப்பியங்கள்

 சிலப்பதிகாரம்
 மணி மேகலை
 சீவக சிந்தாமணி
 வளையாபதி
 குண்டலகேசி


   மனித வாழ்வுக்கு   பொழுது பொக்கு அம்சங்கள்   அவசியமானது.  அவை மனித மனங்களை  ஆரொக்கியப்படுத்த வேண்டும்   வாழ்வில் உடல் ஆரோக்கியதைவிட மன ஆரொக்கியம்  மிக முக்கியமானது.
 சங்க இலக்கியங்கள்    கூறும்  கவிதைகள்    நாட்டு பாடல்கள்  நாடகங்கள்   மனித மனங்களை  ஓரளவு  வழிப்படுத்தின .  ஆனால்  இன்று  கற்பனை  வளங்கள்   சில சிறுமைப்படுத்தப்படுகின்றன
 கோவிலில்   கற்பகிரகத்துக்கு   திரையிட்டு   அலங்காரங்கள்  முடிந்து  பின்னர்தான்   பூஜைகள்   ஆரத்திகள்  நடைபெறுகின்ரன.  ஆனால் இன்றைய  வாழ்வுமுறைகளில்  எல்லா  காரியங்களுக்கும்  வெளிப்படையாகவே  சபையில்  காட்டப்படுகின்றன  .  பேசப்படுகின்றன  ஒரு வயது முதல்  எல்லாவயதினரும்  ஒரேசம்பவம் செயல்களை  வயது வேறு பாடு  இல்லாது   அறியப்படுகிறார்கள்.  இதனால்   நல்லது கெட்டது சரி பிழை  புரியாது  மனித சமுதாயம்  திணறுகின்றது.  எனவே  தற்காலத்துக்கு   சங்ககால   வாழ்வியல்  அறம் அன்பு   சரிபிழை  புரிந்துணர்வு  .தற்கால  வாழ்வுக்கு  வழிகாட்டியாக  உதவ வேண்டும்  . இது ஆரொக்கியமான சமுதாய வளர்ச்சிக்கு   அவ்சியமாகிறது 


உலகில்  தக்கன தகாதன   என செயல்கள் உண்டு.   சில விடயங்கள்  நேரடியாக கூறாது  நாகரீகம் கருதி  பொருள் படக் கூறுவது உண்டு.சில விடயங்கள் மறைக்க வேண்டும்  நான்கு சுவருக்குள்  நடப்பது என்பார்களே  அது போல.  எல்லாருக்கும் எல்லாம் தெரியும். எனினும்  நாகரீகமாக  பேசவும்  வெளிப்படைத்தன்மை  தேவைக்கேற்ப  சொல்வது கருதுவது  உண்டு.
கற்காலங்களில்  மனிதசமுதாயம்  நாகரீகம்  மனித மேம்பாடு தெரியாத நாட்களில்  வெளிப்படைத்தன்மை   கடைப்பிடித்தனர்
இன்று  மக்கள்  நாகரீகம்  அறிவு  விஞ்ஞானம்  தொழில் நுட்பம்  என பேரறிவு பெற்று விட்டார்கள்   எனவே  கற்கால நடவடிக்கை  தற்காலத்துக்கு அவசியம் இல்லை.  ஆரோக்கியமான சமுதாயத்துக்கு  நன்மையும் இல்லை
கற்காலங்களில்  தப்பு என கருதும்  விடயங்கள்   ஒரு குறிப்பிட்ட பகுதியை  அல்லது  குறிப்பிட்ட  பிரதேசத்ததை  பாதிக்கும்
ஆனால் இன்று   டெலிவிசன்   இன்டெர்னெற்  என  குளோபலைசேசன்  என உலகம்   வளர்ச்சியடைந்துவிட்டது
எனவே  மனிதசமுதாயத்தை  பாதிக்கும் அல்லது  அவசியமற்ற  ,  பாதிப்புக்கு உள்ளாக்கும்  விடயங்களை  களைந்து   அடுத்தபடிக்கு  எப்படி  கொண்டு செல்லலாம் என  கருதலாம். 
தற்கால  வசதிகள்  வாய்ப்புகள்  அறிவுகளை  எப்படி வளப்படுத்தலாம்  எனும் யோசிக்கும் காலம்  வந்துவிட்டது.
இன்னிலை வந்தால்  மனித சமுதாயம்  உயர்நிலை நோக்கி  செல்லும்



 சங்க இலக்கியங்கள்   பண்டைய காலத்தில்  மனித சமுதாய    வளர்ச்சியில்  பெரும் பங்கு உடையது
அதில் காணப்படும்  கவிதைகள்  கலை  வெளிப்பாடுகள்,  சொற்சுவை பொருள்சுவை  கவிநயம்    மனித வாழ்க்கையின்  
நன்மைகள் தீமைகள்   ,அறிவுறைகள்  இன்றும் போற்றலுக்குரியவை. 
சங்கநூலகள்   ஐம்பெரும் காப்பியங்கள்   இதிகாசங்கள்  ,அறவழிகள்  அறநூல்கள், ஆன்மீக வழிமுறைகள்  தற்காலத்திலும் கடைபிடிக்க வேண்டியன.
 தற்கால தொழில் நுட்பங்கள்  வளர்ச்சிகளும்  ஏற்றவைதான்  எனினும்  தற்போதைய வளர்ச்சிகள்  வாழ்வுக்கு உதவ வேண்டுமே தவிர  அவை  வாழ்க்கை அல்ல
சங்க நூல்கள்  வாழ்வுமுறைகளையும்   வாழவேண்டிய  நோக்கங்களையும்   கூறுவன 
தற்கால விஞ்ஞான   வசதிகள்    கருவிகள்  வாழ்வின் செயல் பாடுகளை  இலகுவாக்குவன.  வாழும்  முறைகளையும் 
வாழ்வின் நோக்கங்களையும்   போதிக்க மாட்டா
வாழ்வுக்கு கருவி முக்கியமில்லை  .  வாழ்வின் நோக்கமும் வாழு முறைகலும்  .,  மனித நாகரீக செயல் பாடுகளும் 
  பேசும் விதங்களும்  , பிற மனிதனிடம்  பழகும் பண்பாடும்  கூறுவதற்ற்கு சங்க இலக்கியங்கள்   வழிகாட்டிகள்
தீமைகள் தீயது  ,  தேவைஅற்றது எவையென  பகுத்து ஆராயும்  அறிவினை போதிப்பது  சங்க இலக்கியங்கள் 
அவை நம்ம் முன்னோர்  வகுத்து தந்த  பொக்கிசம்.  இவற்றின் வழிகாட்டலுடன் தற்கால வசதி  ,அறிவையும்  சேர்த்து 
மனித நாகரீகம்  மேம்பாடு அடைந்தால்  தற்காலம் சிறக்கும்.
சங்கநூல்களின்  வழிமுறைகள்  தற்காலத்தில்  பாவனைக்கு  கொண்டுவர  இன்றைய  அறிவாளர்கள்  வழிகாட்டி  எம்மால் ஆன பங்கினை   செலுத்துவது அவசியம்
சந்க காலத்திலும்  பொழுது போக்கு அம்சங்கள்   உண்டு.  ஆனால் மனித  மனங்களை  பாதிக்காது அப்படி பாதித்தாலும்   ஒரு சிறு பகுதியை அல்லதுசிறு பிரதேசத்தைத்தான்  பாதிக்கும்  ஆனால் இன்று  வாழ்க்கையுடன்   சேர்ந்து   சாப்பாடு போல்  பொழுது போக்கு  அமைந்து விட்டது  தேவைக்கு  பாவிப்பது போலன்றி  தேவை இல்லாதும்  வாழ்வின் ஒரு   பகுதி ஆகிவிட்டது
எனவேதான்   வசதி  வாய்ப்புகளை   வாழ்வின் மேம்பாட்டுக்கு   ஏற்ப  நெறிப்படுத்தி  வளப்படுத்த  சந்க இலக்கியங்கள்   துணைபோக உதவும் எனலாம்




சங்கப் பாடல்


  சிறு வெள்ளாம்பல் சிரித்தது
____________________________________


சூளாமணி காவியத்தை இயற்றிய  தோலாமொழித்தேவர்  செஞ்சொற் புலவர் இயற்றிய ஒரு செய்யுள்


காதலர் அகன்ற போழ்தில்  கற்புடை  மகளிர்போலப்
போதெல்லாங் குவிந்த  பொய்கைத் தாமரை  பொலிவு நீங்க
மீதிலாந் திகிரி வெய்யோன் மறைதலும் சிருவெள்ளாம்பல்
தாதெலாம் மலர நக்குத் தம்மையே மிகுந்த வன்றே


மலர்கள்  பூத்தன என்று  சொல்லோவியம்  தீட்டுகின்றார்   தோலாமொழிப்புலவர்

குளிர்ந்த  நீருள்ள  பொய்கையிலே  தாமரைக் கொடிகளும்  ஆம்பற் கொடிகளும்  படர்ந்து  தாமரைப்பூக்களையும்  ஆம்பற்பூக்களையும்  ஏந்தி நிற்கின்றன  ஆனால்  தாமரைப் பூக்கள்  பகலில் மலர்ந்து  மாலை நேரத்தில்  மூடிக் குவிகின்றன
ஆம்பற்பூக்கள்  மாலை நேரத்தில்  மலர்ந்து  சிரிக்கின்றன  இதனை  புலவர் பெருமான் கூறுகிறார்  காதலனுடன்  மகிழ்ந்திருக்கும்  காதலி  ,காதலனை பிரிந்தபோது  முகம் வாடுகிறாள் .அவளுடைய  முகவாட்டத்தைக் கண்டு  சிறுமனம்  படைத்தோர்  சிரிப்பதுபோல்  சூரியன்  மறைந்தபோது இதழ் குவித்த  தாமரை பூக்களைப்பார்த்து  சிரிப்பதுபோல  வெள்ளாம்பல்  மலர் சிரிப்பதாக உவமை கூறுகிறார்  இவ்வகையான பல பல பாடல்கள்  சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன 




  அங்கொளி விசும்பில் தோன்றும்
               அந்திவான்  அகட்டுக்  கொண்ட
 திங்களங் குழவிப்  பால்வாய்
            தீங்கதிர்  அமுதம்  மாந்தித்
 தங்கொளி விரித்த ஆம்பல்,
                தாமரை  குவிந்த  ஆங்கே
  எங்குளார் உலகில்   யார்க்கும்
               ஒருவராய்   இனிய  நீர் ஆர்

தோலாமொழித்தேவர்   முன்பு கூறிய  தாமரைக்குளத்தின்  அழகுக்கு  அழகு  செய்வதாய்  மாலை நேர  இயற்கைக்காட்சியினை   கண்டு ரசிக்கிறார்.  அங்கு கண்ட  வெண்னிலவினை  பார்த்து கேட்கிறார்  எப்படி உலகில் உள்ள  யாவர்க்கும்   விரும்பக்கூடிய  கவிகளின்  இன்பத்துக்கு உரியவராய்  உள்ள நீர் யார்  எனெக் கேட்கிறார்  இது அவர்  தீட்டிய  அழகான  சொல்லோவியம்.


  மாலை நேரத்தில்  சூரியன்  மறைந்தவுடன்  குளத்தில் உள்ள  தாமரை  பூக்கள் இதழ் குவிகின்றன  தாமரைப்பூக்களுக்கு  சூரியன் மறைந்தது   சோகமானது.  அதேநேரத்தில்  ஆம்பல்  மலர்  மொட்டுக்கள்  இதழ் விரித்து  சிரிக்கின்றன.  ஏனெனில்  வானவெளியில்  வெண்ணிலவு  உதிக்கின்றது.  கவிஞர் போல்  இந்த ஆம்பலும்  மகிழ்வுடன்  வெண்ணிலவினை  வரவேற்று மகிழ்கின்றது  இந்த அழகான  மாலைநேர  இயற்கை காட்சியின்  மூலம்   உலகியல் உண்மையுடன்  இயற்கையை  வியந்து ரசிக்கிறார்  .இது  இக்கவிஞன் என்ன ரசிகன் எனத்தோன்றுகிறது
இங்கு  வெண்ணிலவுக்கு  எப்படி  உல்கில்  உள்ள  எல்லாருக்கும்  இனிய ஒருவராய்  இருக்கமுடிகிறது நீர் யார் என  வினவுகிறார்  .  என்ன  கற்பனை  என்ன அழகு உணர்ச்சி

  மாலை  நேர பெண்ணின் நிலமையை   சீத்தலை சாத்தனார் எனும் புலவர்  விளக்குவது

" அமரக மருங்கில்  கணவனை  இழந்து 
  தமரகம்  புகூம்  ஒரு மகள்   போலக்
  கதிராற்றுப்படுத்த  முதுராத்துன்பம்மொடு
  அந்தி என்னும்  பசலை  மெய்யாட்டி
  வந்திருந்தனளால்  மானகர்  மருங்கென் ''


இந்த மாலைநேரக் காட்சியினை   சீத்தலைச்சாத்தனார்  எனும் புலவர்  துயரத்தோடு  கற்பனை செய் கின்றார்.
மாலை நேரம்  .  சூரியன்  மேற்கே  சென்று மறை கின்றான்.  அந்தநேரம்    வானமானது  சிவந்து  செவ்வானமாக   பரந்து  விரிகின்றது.  இதனை   போர்களத்தில்  செவ்விரத்தம்  படிந்து காணப்படுவதுபோல  தோன்று கின்றது.சூரியன்  மெல்ல மெல்ல  மேற்கே  மறைகின்றான்.  காரிருள்  ஊருக்குள்  சூழ்ந்தது.போர்களம் போல  காணப்பட்ட  செவ்வானம்  மறைந்தது  கருநிற போர்வை போர்த்துபோல்  இருள் சூழ்ந்தது. இதனைப்பார்க்கும் போது  போற்களத்திலே  தனது கணவனாகிய  சூரியனை  இழந்து விட்ட  பெண் ஒருத்தி  துயரத்தோடு  தாய்வீடு  திரும்பியது  போல கற்பனை செய்கின்றார்  புலவர்
ஒரே மாலைநேரம்  ஒரேஇயற்கை  காட்சி  .  உலகில்  இயற்கையின்  அழகு   மனித மனங்களை  பல்வேறு  மனப்பாங்கினை  நவரசங்களை    உணர காட்சிப்படுத்துகிறது 

_____________________________________________________________________

நெல்  வயலின்  காட்சியினை  காவியக்கலைஞர்  திருத்தக்க தேவர்  கண்டபோது   அவர் மனதில்  தோன்றியது.
கல்விசேர்  மாந்தர்  பெருமையினை கூறுவது போல்  திருத்தக்க தேவர் மனதில்  அக் காட்சி புலப்படுகிறது


" சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம் போல்
  மெல்லவே  கருவிருந் தீன்று,  மேலலார்
 செல்வமே  போல்  தலை  நிறுவித்,  தேர்ந்த நூல் 
கல்வி  சேர்  மாந்தரின்  இறைஞ்சிக்  காய்த்தவே"


கருக்கொண்ட  நெற்பயிர்  கதிர் வெளிப்பாடாதிருக்கும்  நிலையில்  சூல் கொண்ட  பச்சை பாம்பின்  தோற்றம்  போல்  காணப்படுகிறது.  கதிர் வெளிப்பட்டு  பூத்து  தலை நிமிர்ந்து  இருப்பதும்  காற்றில் சுழன்றாடுவதும்  அறிவில்லாத கீழ் மக்கள்  சிறிது  செல்வம் கிடைத்தவுடன்  பிறரை மதிக்காமல்  இறுமாந்து  தலை கால் புரியாது   வாழ்வது போன்றது  மணி முற்றின  நெற்கதிர்கள்  சாய்ந்து நிற்கும் காட்சியானது   கற்றறிந்த மக்கள்  அறிஞர்கள்  அடக்கமாக  பொறுமையாக   வாழ்வது போலாகும்  என திருத்தக்க தேவர்  அழகும் இனிமையும்  கூடிய உண்மையை கூறுவதுபோல்   வயல் காட்சியினை அவர்  சொல் ஓவியமாக   பாடியுள்ளார் 
இயற்கையையும்  வாழ்க்கையையும்  கவிஞர்  அழகுற பாடிஉள்ளமை  மிக அழகான சொல்லோவியம்





இளமையை   தேடுவதுபோல்  ஒரு  காட்சியினை  கவிஞர் ஒருவர்  அழகாக
பாடுகிரார்


"  கம்பித்த காலன்  கோலன்
                கையன கறங்கு  தண்டன்
  கம்பித்த சொல்லன்   மெய்யைக்
                   கரையழி நரையுஞ் சூடி
  வெம்பித்  தன் இளமை  மண்மேல்
                     விழுந்தது  தேடு  வான்போல்
  செம்பிற் சும்பிளித்த  கண்ணன் 
                     சிரங்கலித் திரங்கிச் செல்வான்




முதிய கிழவர்   குனிந்த  உடம்பும்  திரைத்த தோலும்  நரைத்த தலையினையும்  உடையவாராக காட்
சி அளிக்கின்றார் அவரது கால் கைகள் நடுங்கு கின்றன அவரால் நிமிர்ந்து நடக்க முடிய வில்லை. கையில் கோல் ஊன்றி  வளைந்த  முதுகோடு  குனிந்து தரையை பார்த்தவண்ணம்  நடக்கின்றார். அவர் தரையில் எதனையோ தேடுவதுபோல் நமக்கு தெரிகிறது.அந்த முதியவர் எதனை தேடுகிறார் எனெ  எமக்கு புரியவில்லை.
ஆனால் கவிஞருக்குமட்டும்  அவர் எதனை தேடுகிறார்  என்பது புரிகின்றது
முதியவர்  தள்ளாடி குனிந்து  தரையில்  தனது விழுந்துபோன இளமைப் பருவத்தை  தேடுகிறார் எனெ கவிஞர்  கூறும் விளாக்கம்  ரசிக்கும் படியாயும் கற்பனை திரனையும்  சுவையாக சொல்லோவியமாக  தருகிறார் கவிஞர்






பாலை பாடிய  பெருங்கடுங்கோ  இவர் சேர மன்னர்  குலத்தவர்.  வரண்ட நிலத்தை பற்றி பாடுகிறார்  கலித்தொகையில்  பலை நிலத்தின்  வரட்சியினை மனித மனங்களுடன்   இணைத்து  உலகியல் உண்மைகளை  பாடலாகப் பாடிஉள்ளார்  . பாலை நிலத்தில் பட்டுப் போன மரத்தின் தன்மையை  பாடுகிறார்




 "  வறியவன் இளமைபோல்  வாடிய சினையவாய்ச்
   சிறியவன் செல்வம் போல்  சேர்ந்தாற்க்கு நிழலின்றி
   யார்கண்ணும்  இகந்து செய்து இசைகெட்டான்  இறுதிபோல்
   வேரோடு மரம் வெம்ப  விரிகதிர் தெருதலின்
   அலவுற்றச் குடிகூவ ஆறின்றி  பொருள்  வெக்கிக்
  கொலைஅஞ்சா  வினைவரால் கோல் கொடியவன் நிழல்
  உலகுபோல் உலரிய உயர் மர வெஞ்சுரம்''



பட்டுபோனமரத்தினை கண்டதும்  கவிஞரின்  மனதில் ஓடும்  எண்ண அலைகள் 
  பாலை வனத்தில்  வெப்பம்   காரண்மாக  மரங்கள் காய்ந்து கிடக்கின்றது.  இலைகள் கருகி உள்ளன.  மரத்தின்கீழ்  நிழல் இல்லை
இதனை  செய்யுள்ளாக  வெளிப்படுத்துகிறார்  வறுமை யுள்ளவன்  பொருள் இல்லாது  இன்பம் நுகர முடிய வில்லை
அதுபோல்  மரம் கருகி கிடக்கின்றது .  வறிய மனம் உள்ளவன்  தனது செல்வத்தை  பிறற்கு கொடுக்காது   இருப்பதுபோல் உள்ளது.
கொடுங்கோல் ஆட்சியின் கீழ்  மக்கள்  வாழ வழியில்லாது  வாடி இருப்பதுபோல்  பட்டமரங்கள் பாலை வனத்தில் காணப்படுகின்றது. இதுபோல் புலவருக்கு  பாலை நிலத்தின் தன்மையை   பாடுகிறார் 


______________________________________________________________________


மணமில்லா பூக்களும் குணமில்லா செல்வந்தர்களும்   கொண்ட ஒத்த இயல்பினை  தோலா மொழித்தேவர் எனும் புலவர் தனது சூளாமணி எனும் நூலில்  காவியமாக பாடிஉள்ளார்.
வேனில் காலத்தில்  அரண்மனை பூஞ்சோலையில்  கோங்கிலவம் பூக்கள்
  பூத்தன மற்ற எல்லாபூக்களிலும்  நன்கு அழகாகவும் கண்கவர் நிறத்திலும் பூத்திருந்தன.அதனை பார்த்த அரண்மனை  பணிப்பெண்   அரண் மனையில் அதனை பற்றி  கூறுகிறார்  பொன்னிறமுள்ள  கொங்கு மலர்  கண்ணை கவரும் அழகும்  தங்கந்தான் கோங்காக பூத்ததோ எனெத் தோன்றுகிறது .இந்த மலர்  அழகாகவும்  எழிலாயும்  காணப்பட்டாலும்  மணமில்லையே மணமும் இருந்தால் எப்படி  சிறப்பாய் இருக்கும்  என கூறுகிறாள்
இதனை பாடலாகப் பாடுகிறார் புலவர்




"தேங்குலம் அலங்கல்  மாலைச் செரிகழல் மன்னர் மன்னா
பூங்குலாய்  விரித்தச்சோலைப் பொழிமது திவலைதூவக்
கோங்கெலாம்  கம்ழ மாட்டாக்  குணமில்லர் செல்வம் போல்
பாங்கெல்லாம்  செம்பொன் பூப்ப  விரிந்தது  பருவம்  என்றாள்




இதில்  இச் செய்யுள்வரி   


"கோங்கெலாம்  கமழமாட்டக்  குணமில்லாச் செல்வம் போல "
கொடையில்லா செல்வம்  மணமில்லா மலருக்கு  ஒப்பிடுகிறார்  புலவர்.  அழகும் எழிலும் கொண்ட மலருக்கு  மணம் இல்லை  பணம் பொருள் இருந்தும் கொடை இல்லாமையால்  செல்வந்தர் புகழ்  பெருமை அடையவில்லை எனெக் கூருகிறார்

புலவர்கள் கற்பனை சிந்தனை உலகியலுடனும் இயற்கையுடனும்    சேர்ந்து பயணிப்பர்.
முற்காலத்தில்  கற்றவரும் புலவர்களும்  சமுதாயத்தில் உயர்ந்த இடதில் கருதப்பட்டதால்  அவர்களது வார்த்தைக்கு சொல்லுக்கு  மரியாதை இருந்தது. சமுதாய சிற்பிகளாக கருதப்பட்டு  இந்த சொல்லோவியங்கள் அவர்களால் படைக்கப் பட்டன

================================================================================
கம்பர்  கவிச்சக்கரவர்த்தி.  கம்பர் கூறிய  கம்பராமாயணம்   மனித சமுதாயத்துக்கு கிடைத்த   இராமபிரானின் பெருமை பாடும்  கவிச்சுவை  சொட்டும்   காவியம் .



கம்பரின்  கவித்துவம்  


அறிவு இல்லாதவரை புல்லர் எனக்கூறூகிறார்.  ராமரின் அம்பு தாடகை மீது   நெஞ்சில் பாய்ந்து  உள்ளே சென்று  அப்பால் வெளியே  சென்றது .  கம்பன்  இதன் கருத்தை  கூறுகிறார்.  அறிவுடையோர் சொல்லும் நன்மொழி  அறிவில்லாதவர் மனதில் தங்காது  போவது போல ராமரின் அம்பு  தாடகை நெஞ்சில் ஊடுருவி வெளியேறியதுஎன்கிறார் கம்பன்.


 " சொல்லொக்கும் கடிய வேகச் சுடு சரங் கரிய செம்மல்"
  அல்லொக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிரக்குன்றக்
 கல்லொக்கும் நெஞ்சில் தங்கா தப்புறங் கழன்று  கல்லாப்
 புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றோ"


இங்கெ  அல்லொக்கும் நிறத்தினாள்  _________இருளை  ஒத்தா  கரிய நிறமுடையா தாடகை   என்கிறார்
வயிரங்குன்றக் கல் ஒக்கும் நெஞ்சில்   _________ என்பது  உறுதியான  பாறை குன்று  போன்ற கல்  நெஞ்ச்ம் உடைய   தாடகை  பொன்ற  கல்லாப் புல்லர்  அறிவற்றவர்கள் எனக்  கம்பன் பாடுகிறார்




_____________________________________________________


கம்பன் ராமபிரானின் அழகைப்பற்றி   வியக்கிறார். 



மிதிலையில் ராமன்  சென்றடைகிறான். ராமனைக்கண்ட மகளிர்  கூட்டம்  ராமனின் அழகினை பார்த்து வியக்கிறார்கள் .
ராமனது அழகினை அவர்களால் முழுமையாகா காண முடியவில்லை. அப்படி ஒரு அழகு .ராமனின் அவர்களது பார்வையில் முழு உருவும்  பார்க்க முடியவில்லை.கடவுளாக கருதப்படும் ராமபிரானின் முழு அழகையும்  சாதாரண மனிதர்களால் எப்படி வர்ணிக்கமுடியும்.  கம்பன்  மனதுள் ராமபிரானின் விச்வரூப தரிசனத்தை அல்லவா கண்டார், அதனைத்தான் கம்பன்  சொல்ல முற்படுகிறார். ராமனின் பாதாதி கெச வர்ணனை   கம்பனால்  கூறப்படுகிறது .தோளை கண்டார் தோளே கண்டார்.  புய அழகினை கண்டவர் புயத்தினையே கண்டார் .கருனை ததும்பும்  மந்தகாச வதனம் காண்டார்   கண்ணானது  வியந்து போய் மயங்கினர் .




கம்பன் சொல்லும் சொல்லொவியம்



"  தோள் கண்டார் தோளே கண்டார்
    தொடுகழல்  கமலம் அன்ன
தாள் கண்டார் த்ளே கன்டார்
   தடக்கை  கண்டாரும் அவ்வாறே
வாள்கண்ட  கண்ணார்  யாரே
    வடிவினை முடியக்கண்டார்
ஊழ்கண்ட  சமயத் த்ன்னான்
   உருவுகண்டாரை  யொத்தார்"


பலரும் பொற்றும் ராமனை கதையை ராமகாவியமாக   கவிச்சுவை   சொல்சுவை  கொண்ட  பாடல்களால் பாடிஉள்ளார்
கம்பர்

____________________________________________________________________________




கடவுளின் திருவருள் பெற்ற   கவிஞர்கள் பலர் .கடவுளின்   பார்வை பட்டமையால்  அவர்கள் பேரானத்தம் அடைந்தவர்கள்   .இப்படியாக சமய குரவர்களும்  இறைவன் மீது பாடல்களை பாடினார்கள். திருநாவுக்கரசர்  சமயகுரவர்களில் ஒருவர்.  இவரது கவிதைகளும்  சொல்லழகு பொருளழகு உடையன.

கடவுளின் பாதரவிந்தங்கள்  எப்படி நிழல்களாக பக்தர்களுக்கு  இருக்கும் என்பதை  அனுபவித்து  உணர்ந்து பாடுகிறார்



"  மாசில் வேணையும் மாலை மதியமும்
  வீசு தென்றலும்  வீங்கிள வேனிலும்
  மூசு வண்டரை  பொய்கையும் போன்றதே
  ஈசன் எந்தையும்  இணையடி நீழலே


  கவிஞர்  இறைவனது  நிழலானது


  இளவேனில் காலமும்  மாலைநேரமும்  தென்றல்  காற்றும்  , பால்போன்ற  நிலவின் ஒளியும்  ,  தாமரை குளத்தருகே  பசிய  புற்றரையும்  ,  வீணையின்  இசையின் இனிய நாதஒலியும்   ஒன்றாக இருக்கும் இடத்தில்  வாழ்வதுபோல ஒரு இன்பத்திலும் கூடிய  இன்பமும் அமைதியும் தருவதாகப் பாடல் படுகிறார்
இயற்கையின் அழகினை கடவுளின் கருணையும் அமைதியும்   இன்பமும் கொண்டதாக பாடுகிறார்  என்ன கவிஞரின் ரசிகதன்மை

No comments:

Post a Comment