நுண் கலைகள்
அழகுக்கலைகள் கவின் கலைகள், எல்லாம் நுண்கலைகளை குறிக்கும்
அழகுக் கலையை விரும்பும் மனிதனை அறிவு நிரம்பியவனாகவும் , அறிவும் நுண் அறிவும் கொண்டவனாகவும் கூறுவர். அழகுக் கலைகள் மனித நாகரீகத்தின் பண்பாடாக விளங்குகிறது
கவின் கலைகள் அழகு இன்பம் தருவதாகவும் கற்பனை வளத்தை கூட்டுவதாகவும் இருக்கிறது. இந்த கவின் கலையானது நாட்டுக்கு நாடு வேறுபடும். அந்த நாடுகளின் தட்ப வெப்பநிலை ,இயற்கை, பழக்க வழக்கங்கள், மொழி இயல்பு, சமயக்கொள்கைகள்,சுற்றுப்புற இயல்பு என்பனவற்றுக்கு ஏற்ற மாதிரி வேறுபடுகிறது
இதனால்தான் பரதநாட்டுக்கலைகள் ,ஏனைய சீன ஜப்பான் ,கிரேக்க ரோம் நாட்டு கலைகள் வேறுபட்டுக் காண்கின்றது . ஆனால் எல்லா நாட்டுக்கலைகளும் இன்பமும் வியப்பினையும் ,மகிழ்ச்சியினயும் தருகிறது.
அழகுக்கலைகளை ஐந்து பிரிவுகளாக கூறலாம். கட்டிட கலை , ஓவியக் கலை, இசைக்கலை, காவியக்கலை. கவின் கலையை கண்ணால் கண்டும் காதால் கேட்டும், மனதால் உணர்ந்து கற்பனை உலகில் பறக்கவும் செய்து மன உணர்வுகளை தூண்டி மகிழ்ச்சிப்படுத்தும்.
உணவிலே எப்படி சத்துவ ராஜச தாமச குண உணவுகள் மனித உணர்வுகளை பாதிக்கின்றதோ அதுபோல
கவின் கலைகளும் மனிதமனங்களை பாதிப்புக்கு உள்ளாக்கின்றது.
பழங்காலத்தில் தமிழை மூன்று பிரிவுகளாகப் வகுத்தார்கள்
இயல் இசை நாடகம் என முத்தமிழை பிரிவுகளாகக் கொண்டார்கள் தமிழ்நாட்டை ஆண்ட அரசர் களும் மூவெந்தர்கள் எனெ சேர சோழ பாண்டியர்கள். தமிழ் இயல் இசை நாடகம் எனெ மூன்று பிரிவுகளாலேதான் இதனை முத்தமிழ் எனெ கொண்டனர். இயற்றமிழ் என்பது காவியக்கலை ஆகும் இசைத்தமிழ் என்பது இசைக்கலை யாழ் குழல் முழவு தாளங்கள் இணைந்து செயல் படுவது ஆகும். நாடகத்தமிழ் என்பது நாடகம் நாடகத்தில் நடிகர்கள் நடித்து கண்ணால் பார்த்து ரசிப்பது ஆகும்
இயல் இசை நாடகம் மூன்றும் இணைந்து எழுதப்பட்ட காவியம் சிலப்பதிகாரம், இதனால் சிலபதிகாரத்தை முத்தமிழ் காவியம் என்பர்.
கவின் கலைகளை தமிநாட்டிலும் பாரத தேசம் எங்கும் மக்கள் வளர்ப்பதில் கற்பதில் பெரும் இன்பம் அடை கிறார்கள்.. உலக நாடுகளிலும் அவரவர்க்குரிய பண்பாட்டு கலைகளை கொண்டாடி இன்புறுகிறார்கள்.
இந்த அழகுக்கலை கலை நாமே பயில்வதாலும் அல்லது கண்டு கேட்டு ரசிப்பதாலும் மகிழலாம்.
எல்லாரும் எல்லாக்கலை கலையும் கற்க முடியாது. எதாவது ஒருகலையினை ஆர்வம் காட்டி அதனை வளர்த்துக்கொள்ளலாம்.,.இந்த கவின் கலைகள் வாழ்வின் வாழ்க்கை முறையை பண்படுத்தும் இன்பம் தரும் .
நுண்கலைகள் கட்டிடக் கலை , சிற்பக்கலை , ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என ஐந்து வகை.
கட்டிட கலை என்பது கண்ணால் கண்டு இன்புற வைப்பது . கோயில்கள் மாடமாளிகைகள் அரச மாளிகைகள்
இக் கட்டிடங்கள் உயர்ந்தும் மிகப்பெரியதாகவும் இருப்பதனால் கட்டிடங்களை மிக அருகில் இருந்து முழு அமைப்பையும் கண்ணால் பார்க்கமுடியாது. எனவே இக் கட்டிடங்கலை மிக தூரத்திலிருந்துதான் கண்டு ரசிக்க வேண்டும்
சிற்பக்கலையானது கட்டிட கலையை விட நுட்பமானது. கல் மண் மரம் உலோகங்களினால் வடிவமைக்கப்படுகிறது. கற்பனையாக அமைக்கப்பட்ட உருவங்களை அமைப்பது ஆகும் சிற்பக்கலையை கண்ணால் கண்டு மகிழக் கூடியது
ஓவியக்கலை சிற்பக்கலையை விட நுட்பமானது . கண்ணால் காணக்கூடிய உருவங்களையும் கண்ணால் காணமுடியாத கற்பனை காட்சிகளையும் பலவித நிறங்களால் இயற்கை அழகுடன் வரையப்படுகின்றவை
முற்காலத்தில் இந்த ஓவியங்கலை சுவர்கள் பலகைகள் துணிகளில் வரையப்பட்டன . படம் எனும் சொல் படாம் எனும் சொல்லில் இருந்து வந்தது படாம் என்பது துணியைக்குறிக்கும் . ஓவியக்கலையை அருகிலே இருந்து கண்டு மகிழ முடியும்
அடுத்து இசைக்கலை இதனை கண்ணால் காணமுடியாது. காதினால் கேட்டு இன்புறுவது. காலத்துக்கு கால்ம் கலைகளின் வளர்ச்சி மாறும். பல்லவ அரச காலத்தில் சிற்பக்கலை மிக வளர்ச்சிஅடைந்தது.
முகலாயர் காலத்தில் கட்டிட கலை வளர்ச்சி யடைந்தது. இசைக்கலை காலத்துக்கு காலம் வளர்ச்சி வேறுபடும் இசை வாய் பாடல்களாகவும் இசைக்கருவிகளூடா கவும் பரவியது இசைக்கருவிகளும் துளைக்கருவி தந்திக்கருவி கோட்டுவாத்தியம் என பலதரப்பட்ட கருவிகள் இசைக்கலை வளர பெரும் பங்கு வகித்தன
யாழும் குழலும் கெட்பதற்கு இனிமையானவை .திருவள்ளுவர் ஒரு குறலெ எழுதிஉள்ளார்
யாழ் இனிது குழல் இனிது என்பதம் மக்கள்
மழ்லைச்சொல் கேளாதவர் . என
பேருண்மை மழலை சொல்லை விட பெரிய இனிமையான இசை கிடையாது
வயலின் வீணா ,குழல் என கருவிகள் இசையை மேலும் அழகாக்கின்றன.இசையானது நடனம் நாட்டியம் கூத்து
இவைகளுடன் கண்டு கேட்டு மகிழ உதவுவன.
அடுத்து காவியக்கலை இது ஏனைய கலைகளை விட மிக நுட்பமானது. இதனை மனதால் பொருளை உணர்ந்து ரசிக்கக்கூடியது.காவியமும் நாடகமும் ஒருங்கு இணையும் போது காவியக்கலையை மகிழ்கிறோம்
கவின் கலைகளை கண்டும் கேட்டும் ரசிக்ககூடியன.இதனை எல்லோரும் ரசித்து வளர்க்க முனைவோம்.

No comments:
Post a Comment