Monday, September 23, 2013

தமிழ் கூறும் அறிவுரை


தமிழ் கூறும் அறிவுரை



சாதுக்கள் அமைதியானவர்கள் அன்பானவர்கள் என்றும் சந்திரனின் நிழல் போல் பிறரைக் குளிர்விப்பவர்கள்
இளமை செல்வம் ஆயுள் ஆகிய மூன்றும் தாமரை இலைமேல் நீர்த்துளிபோல நிலை யற்றது.

விவேகம் உடையவன் சூழ்நிலைசந்தர்ப்பங்களைஎதிர்பார்த்துவிழித்திருப்பான்.


உலவாழ்க்கையில் பிறர்க்கும் தனக்கும் துன்பம் உண்டாகாது வாழும் வாழ்க்கை சிறப்புடையதாகும்

.
தாம் கற்ற கல்வியை தனக்கும் பிற்ர்க்கும் பயன் படாது வீணாக்குபவன் வாழ்வு ஜடத்துக்கு சமமாகுவான்
.
எல்ல மனிதருக்கும் பிடித்தமானது அவர் உயிரும் தன்மானம் கௌரவம் ஆகியன.
போதும் என்ற மனம் இல்லாமை தொடர் துன்பங்க்ளை தரும்
.
எம்மைவிட சிறிய மனபாங்குடையவரிடம் உதவி கோருவது அற்பமான செயலாகும்
.
ஒருவரிடம் அடிமைப்பட்டு விலங்குபோல் பேச்சு உரிமை செயல் உரிமை இலாது இருப்பவர்கள் வாழ்வு நரகத்தை விட கொடுமையானது

பிறப்பு இறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுபடுவது நல்ல அறிஞருக்கு அழகு
.
நம்மை ஆசையானது சம்சார சாகரத்தில் சிக்க வைக்கிறது
.
நம்முடைய உண்மையான பகைவன் முயற்சியின்மையே
.
தர்மசிந்த்னை உள்ள மனத் தூய்மை
உள்ள ஆத்மா புண்ய ஆத்மா என்பர்
எத்தகைய இக்கட்டிலும் பிறரிடம் உதவி கோராது இருப்பது மிகச் சிறந்தது
.
சாதுக்களின் உபதேசமானது அமுதம் போல் காதுக்கு இனிமையானது

.
உலகில் நல்லது கெட்டது பிரித்தறியும் வாழ்க்கைநெறி உடையவர்கள் நல்ல அறிவாளிகளாவர்
.
கர்மாக்களால் பெற்ற நல்ல அறிவைப் பெற்றவன் மோட்சத்துக்கு வழி அமைக்கிறான்
.
அனைவராலும் விரும்பப்பட்டு தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வதில் ஆர்வமுடையவராக இருப்பது உத்தமமான கொள்கையாகும்
.
தத்துவங்கள் சாத்திரங்கள் ஆகியவற்றில் புலமை பெற்று சீடனின் நன்மையில் நாட்டம் உள்ளவர் நல்ல குருவாவர் 
 
 நாம் என்றும் ஏழை மக்களிடம் கருணையும் நட்பும் கொண்டவர்களாக இருக்கவேன்டும்
உண்மை பேசுபவனாகவும் அன்பும் அடக்கமும் உடையவன்  எல்லா உயிர்களையும் தன்வசப்படுத்த முடியும்


கருணை உள்ளம் கொண்டவனை தேவர்களும் விரும்பி வணங்குவர்

சத்யம் பொறுமை கொண்டவன் எல்லா வெற்றிகளையும் பெறுவான்  தீய சிந்தை உடையவன் வாழ்வில் தாழ்வினை  பெறுவான்

மூடன்  நிம்மதியற்றவன்   செய் நன்றி மறந்தவன் சந்தேகப்பிராணி  ஆகியோருடைய ஆத்மா இறக்கும் தறுவாயில் துய்மைப்படுத்த முடியாது பலராலும் நிந்திக்கத்தக்க செயல் களை செய்யக்கூடாது

 பெற்றோர் வழிகாட்டலை  ஆசிரியர்  வழிகாட்டலை  முதியவர்கள்   வழிகாட்டலையும்  சமுதாயத்து இளைஞ்ர்கள்  பின்பற்ற வேண்டும். பெரியவர்களது அனுபவங்கள்  வாழ்வின் அரிய் பொக்கிசங்களாகும்
 
  
கருத்தரிப்பதெல்லாம்   பிள்ளைஅல்ல   கருத்தறிந்து    நடப்பதுவே   பிள்ளையாகும்

சிலர்  நாணல்    போல்   எல்லாருக்கும்   சலாம்   போட்டு   வாழ்வர்  சிலரோ   தென்னைமரம்  போல்   வளையாது   வாழ்நாள்   முழுவதும்    பிறருக்கு  உரமாய் இருந்து    தலைநிமிர்ந்து
பிறர்  பயன்பட  வாழ்வர்


உயர்ந்த   நோக்கோடு   தான்   கற்ற  அரிய கலையினை  மனித  சமுதாயத்தின்  ஆரோக்கிய வளர்ச்சிக்கு   பயன்படுத்தலே  மனிதனின்  அடிப்படை ஆவலாக  இருத்தல் வேண்டும்


*அருளாளர்கள்  தன்னை அறிந்தவர்கள்.  விருப்பு வெறுப்பு அற்றவர்கள் சிவத்தன்மை பெற்றவர்கள்.
 .திருவருளை அடைந்த தன்மையால்  தன்னை அடைந்தவர்களின் நலனைக்காக்கும் தன்மை பெற்றவர்கள் தன்னை அறிந்த  தத்துவ அறிஞர்கள். 
 பக்தர்களின்   நலனை க்காப்பதுடன்  அவர்களை பிடித்த வினைகளை தீர்ப்பதுடன் இனி புதிய வினைகள் அணுகாது காத்திடர்

மனிதன்     தான் செய்யும்     தவறுகளை     திருத்தாவிடில்     வாழ்க்கையில்   பெரும்    தோல்விகளை    சந்திக்கத் தோன்றும்



மானம்
----------
தன்மானம்   காத்திட்ட தலைவர்கள் 
தமிழராய் பூமியில் பிறப்பதுண்டு
மானம் காத்த வீரனின் பெருமை
மலை போல் அவனியில்  நிலைத்திருக்கும்

பெண்பெற்ற பெற்றோருக்கு   மானமென்பது
பாரினில்   போவதும் வருவதுமாக இருக்கும்
சன்மானம்  தேடி ஓடிடும்    மானுடமே
தன்மானம் காத்து வாழ்ந்திடுவாய்



பூகம்பம்
  பூமியும்  பொறுமை இழக்கும்
  பூமியும் சில மனிதர்களை போல   வெளித்தோற்றம்  அமைதியாக இருக்கும் . சலனம், அற்று   கவிஞர்களின் பாடலில்  அகழ்வாரைத்தாங்கும் நிலம் போல எனெ பாடுவர் .ஆனால் பூமியின்  நிகழ்வுகளை பார்க்கும் போது  இதனை எற்றுகொள்ளமுடியாது .  பூமியும் உள்ளெ  குமுறிக்கொண்டும்  கொந்தளித்துக்கொண்டும் தான் இருக்கிறது .பொறுமை இழந்த நிலையில்  கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  பூகம்பமாக வெடித்து  தனது  கோபத்தை வெளிப்படுத்துகிறது. எரிமலையாக வெடித்து  அதிஉயர் வெப்பதுடன் கூடிய  எரிமலை ஆறாக ஓடுகிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல   இயற்கையாகிய பஞ்ச  பூதங்களாகிய  பூமி காற்று  நீர்  தீ வானம் ஆகியவையும்  பொறுமை இழக்கும்
கடலின்  வேதனையை கடல்  சிறிய அளவில்     இடை இடையே     காட்டும்  .  பொறுமை இழக்கும் நிலையில்   சுனாமியாகி   தனது  கோரத்தண்டவத்தை காட்டிவிடும்  .மனிதர்களை  கடலுக்குள் இழுத்து  பின்னர் கரையில் தள்ளிவிடும்
சுனாமி எற்பட்டபோது  கடல் கரையில்  தான்  எவ்வளவு மனித குவியல் கள்  மீன்குவியல் போல
வானம்    பொறுமை இழந்தால் மழை  அளவு மீறி பொறுமை இழக்கும் போது  பெரு மழையாகா  பூமியை  பெரு வெள்ளமாக  புரட்டிப் போடுகிறது
காற்றும் இது போல  தென்றாலாகவும்  குளிர் காற்றகவும்  மனிதனுக்கு  இன்பம் கொடுத்த  காற்று  சூறாவளியாக   பூமியில் பெரும் அழிவுகளை  காடும்  . 
தீ  மனிதன் நல்ல காரியங்களுக்கு  பயன் படுத்தும் போது  மகிழ்சியடையும் மனிதன்  சிலவேளை  தீமைக்கும் பயன் படுத்துகிறான்.  பொறுமை இழக்கும் வரை  அமைதியாக இருக்கும்.  ஆனால் பொறுமை இழக்கும் போதுதான்  காட்டுத்தீயாக  பூமியை பதம் பார்க்கிறது
இயற்கையே பொறுமை இழக்கிறது எனில்  மனிதன்  எப்படி பொறுமை  காப்பான்.  நல்ல மனித மனங்களை  காயப்படுத்தீர்கள்.  தீமையும் நன்மையும்  சேர்ந்திருக்கும்.  ஆனாலும்  முடிந்தவரை  நல்ல மனித இதயத்தை   காயப்படுத்தாதீர்கள்  .  நல்ல  உள்ளங்களின்  பொறுமையும்  இழந்தால்  பேரழிவுதான் .
 நல்ல மனிதர்   ஒருவர்  போதும்  மானுட  சமுதாயம்  வளர்ச்சிஅடையும்  . 
தீண்டாதே தீண்டாதே  நல்ல மனதை  தீண்டாதே
வாழ்த்துங்கள்  வாழ்த்துங்கள்  நல்ல  செயலை வாழ்த்துங்கள்
நன்மைகள்  கூடவும்  தீமைகள்  குறையவும்   பாடுபடுவோம்
எந்த ஒரு  தப்பான செயலுக்கும்  மனிதன்  இறப்புக்குள்  தண்டனை  அடைவான். சிலப்பதிகாரம்  கூறும்  உண்மையும் அதுவே . .அறம்  ,தர்மம் , அன்பு  நிலையானது.  பூமியைவிடவும்  நிலையானது  ,உறுதியானது.

Saturday, September 14, 2013

கற்பகதரு

கற்பகதரு
பொதுவாக வினாயகர் இடம் சுழியாகதும்பிக்கை உடையவர் ஆனால் பிள்ளையார்பட்டி வினாயகர் வலம்சுழிதும்பிக்கை  உடைய வராக இருப்பர் இந்த வினாயகர் கண்களாலே காட்சம் கொடுப்பவர் எனவே தான் கற்பகவினாயகர் என  அழைக்கப்படுகிறார் கற்பகதரு போல் கேட்டவரம் எல்லாம் அளிப்பவராக இருக்கிறர். அவரை வணங்குபவர்க்கு அவரது கனிவும் தெஜசும் பக்தர்களுக்கு அருளுகிறார்
பிள்ளையார் பட்டி வினாயகர் கோயில் குடவரைக்கோயில் .மலையைக்குடைந்து பல்லவமன்னால் கட்டப்பட்டது. அழகிய சிற்பங்கள் கோபுரங்கள் மண்டபங்கள் தூண்கள் கொண்டு கட்டப்பட்டது வடக்கு நோக்கிய வினாயகராக அருள் பாலிக்கிறார்
மகாபாரதம் எனும் இதிகாசம் வேத வியாசர் சொல்லச் சொல்ல வினாயகரால் எழுதப்பட்டது வேத வியாசர் வினாயகரை மகா பாரதம் எழுதச் சொல்ல வினாயகர் ஒரு வேண்டுகொள் விடுத்தார் கதையை நிறுத்தாது சொல்ல வேண்டும் என்றும்  நிறுத்தினால் அத்துடன் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்றதற்கு வியாசர் எழுதும்போது பொருள் விளங்கி எழுதும்படி கூறினார். வினாயகரும் ஒப்புக்கொண்டு பொருள் விளங்க எடுக்கும் நேரத்தில் கதையை சிந்தித்து  தொடர்ந்துசொல்லி கதையை வினாயகர் எழுதி முடித்தார் என்பர்
இப்படி வினாயகர் கதை எழுதும்போது வினாயகரின் எழுதுகோல் முறிவடைந்தது எழுதுவது தடைப்படக்கூடாது என்று தனது தந்தங்களில் ஒன்றினை முறித்து எழுதுகோல் ஆக்கினார் வினாயகர்
  எனவேதான்  இன்றும் வினாயகரின் தந்தத்தில் ஒன்று முறிவடைந்த நிலையில் இருக்கிறது இப்படியாக வினாயகர் மகாபாரதக்கதையை எழுதி முடித்தார்
வினாயகருக்கு அனேக நாமங்கள் உண்டு  எனினும் பிள்ளையார் எனும் நாமம் பிரசித்தமானது எல்லோரலும் விரும்பப்படுவது எம் கூப்பிட்ட குரலுக்கு குழந்தைபோல் ஓடி வரும் தெய்வமாக பிள்ளையார் விள்ங்குகிறார்
சிறுவர் முதல் முதுமை அறிஞ்ர் வரை விரும்பும் தெய்வமாக ஆற்றங்கரை அரசமரம் வீதிகள்தோறும்  விரும்பும் இடமெல்லாம் அமர்ந்து அருள் பாலிக்கிறார் சிவ பார்வதி மைந்தன் கீர்த்தி தரும் தெய்வமாக எம்மால் பொற்றி வணங்கப் படுகிறார் 
புதுக்கோட்டைக்கும் காரைக்குடிக்கும் இடையில் பிள்ளையார் பட்டி கோயில் அமர்ந்துள்ளது
வினாயகரை வேழமுகத்தோன் கணங்களுக்கு தலைவன் ஆகையால் கணபதி விக்கினங்களை நீக்குவதால் விக்கிநேச்வரன் தும்பிகை உடையமையால் தும்பிகையோன் என போற்றப்படுகிறார்
வினாயகர் துயரங்களால் தவிக்கும் பக்தர்களுக்கு வழிகாட்டும் குருவாகி பக்தர்களின் பக்திக்கு வசப்படும் தெய்வமாகி விளஙுகுகிறார் .நாமும் வழிபட்டு வளமும் பல நலமும் பெற்று  வணங்குவோமாக

வினாயகர்  துதி

ஒம்   என்னும்  பிரணவரூப   நாயகா
உமையாளின்   பாலனே  வினாயகா

தேவர் மூவர்  போற்றும்  தேவ   நாயகா
தேவாதி     தே  வனே    வினாயகா

வல்வினைகள்     நீக்கும்      சக்தி   நாயகா
வேண்டும்   வரும்    தந்திடும்    வினாயகா

மோனத்தின்     முழுப்பொருளே     விநாயகா
முக்கண்ணன்   மைந்தனே    விநாயகா

Wednesday, September 4, 2013

பெரியோர் அனுபவம்



சிவன் கோயில்
 தன்னைத்தானே புரிந்துகொண்டவன் தரணியைப் புரிந்துகொள்வான்
இயற்கையே பாதி இரவு பாதி பகல் அதுபோல் உலகில் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும் வாழ்க்கையில் சோகம் துக்கம் துயரம் மகிழ்சி நன்மையெனெ வரும்.

ஒருவர் மீது பொறாமை கொள்வதெனில் அவர் மீது திறமை, பெருமை, உயர்வு, நிச்சயமாக இருக்கும்.

நமது திறமைக்குச் சவாலாக இருக்கும்போது எதிர்ப்புக்கள் வரும் .அதனைக்கண்டு மனம் தளரக்கூடாது நிமிர்ந்துநின்று சவாலைச் சமாளிக்கவேண்டும்.

மனிதநேயம் உள்ளவரை மதிக்கப்படும்வரை மனிதநேயமுள்ள மனிதன் பெருகும்வரை மனிதநேயம் மனித சமுதாயத்தை காக்கும்.


கலைஞன் வெளித்தோற்றம் வேறு. நிஜம் வேறு கலைஞன் நல்ல களம் இடம் சூழல் வரவேற்பு இருந்தால் நன்கு சாதிப்பான்.

சிரிப்பு ஒரு அழ்கான கவிதை பூக்கள் மலர்வது சிரிப்பது போன்றது எனவேதான் பூக்கள் அழகாக இருக்கின்றன.

மானுடவாழ்க்கை இன்னல் நிறைந்தது எனவேதான் மானுடன் பிறக்கும் போது அழுது கொண்டே பிறக்கிறான்.

சிற்பிக்குள் வாழவிரும்பாத நீர்த்துளி ஒருபோதும் முத்தாவதில்லை.
பறப்பவன் சுவடுகள் எற்படுத்துவதில்லை நிலத்தில் நடப்பவன் தான் சுவடுகள் எற்படுத்துகிறான்.

பிரஜாபதி சகல மக்களையும் காப்பவன் பிரஜாபதி அவர் அரசன் கடவுள் பிரஜாபதி என அழைக்கப்படுவார்.
.
தமிழ் கலைகள் தமிழனின் முகவரி கலைகள் அழகின் இன்பத்தின் உறைவிடம் சுற்றி வர முட்கள் இருந்தும் ரோஜா சிரிக்கின்றது துன்பம் நேருகையில் வீணை எடுத்து மீட்டுவாயாக.

சொர்க்கம் சேர்க்கும் வழி பிறர் சொத்துக்கு ஆசைப் படாமை, பொய் சொல்லாமை, உதவி செய்யும் நிலை வந்தும் செய்யாமல் விடல், தண்டனைக்கு ஆழாக்கும்.

மனித சமுதாயம் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்
சத்தியம், பணிவு, கேள்வி ஞானம், ஒழுக்கம், ஆசார சீலம், பலம், வீரம். மனோபலம், தனம், தைரியம், பேச்சு வன்மை.

பூமியில் அடிக்கடி புயல் வரும் அதேபோல் வாழ்க்கையிலும் புயல் வரும் யாரையும் கேட்டுப் புயல் வருவதில்லை எமது சுய கட்டுப்பாடு தன்னம்பிக்கை நம்மைக் காக்கும்

குரு  இலட்சணம்   பகவானை அடையத்துடிக்கும்  பக்தர்களுக்கு வழி காட்டுபவர்.

பகவான் பக்தர்களின்  பக்திக்கு  வசப்படுவார்  தன்னம்பிக்கை உடைய எவரும் பிறரிடம் மண்டியிடத் தேவையில்லை. 

வெயிலின் அளவு கூடக்கூட நிழலின் அளவு குறையும்.  வலைகளின் அளவு கூடுவதால் மீன்களின் அளவு குறைவதில்லை. 

ஆன்மா லயிக்கும் இடம்  ஆலயம் இறைவன் குடிகொண்ட இல்லம் கோவில் என்பர். கோ என்றல் கடவுள், அரசன்.  இல் என்றால் இல்லம் கோவில் இறைவன் குடி கொண்ட இடம்.

பக்தருக்கு  இதயம் கற்கண்டு மாதிரி இருக்கவேண்டும்.  பார்க்க இறுக்கமாக இருந்தாலும் இனிப்பாக பாகாய் கரைந்து இளகிய மனம் கொண்டவர்களாய் இருக்கவேண்டும்

.பாலைவனத்தில் ஒட்டகம் வாழும் மிருகம் . அங்கு நீர் பற்றக்குறையை தவிர்க்க  அது நீரை சேமிக்கும் இயல்புடையது. அதுபோல் மானுடர்களாகிய நாமும் அறிவுத்திறனை தேடித்தேடி வளர்த்து எமது மூளை எனும் கொம்பூயூட்டரில் சேகரிக்க வேண்டும்  
உலகவாழ்வு ஞானேந்திரிய்ம் கர்மெந்திரியம் என்பனவற்றின் பாதிப்புக்கு உள்ளாகின்றது ஐம்புலன்களாகிய கண் காது மூக்கு வாய்  மெய் எனும் ஐம்புலன்களாலும் , அழுக்கு அவா வெகுளி இன்னச் சொல் மனம் சிந்தனை கோபம் போன்றவைகளால்  வாழ்வு சிதறுகின்றது. உலகில் இவையெல்லாம் இருந்துகொண்டுதான் இருக்கும்                
 படகு கடலில் மிதக்கின்றது .உப்பு நீராகிய கடல்நீர் படகுள் போகாது இருக்கும் வரை படகு மிதக்கும். ஆனால் கடநீர் சிறிது உள்ளேபோகுமானல் அது சிறிதுசிறுதாக கூடி இறுதியில் படகு கடலினுள் முழ்கிவிடும். அதுபோல் எம்மனதினுள்ளும் தீய சக்தி சிந்தனைகளை   புகவிடக்கூடாது புகவிட்டால்  அது படகு முழ்கியதுபோல் எம்மையும் அழித்துவிடும்  எம்மை சூழ்ந்து  நல்லது தீயது இருப்பினும் நல்லவற்றை மட்டும் எடுக்கப் பழகவென்டும்


தமிழ் மொழி ஆளுமை  சொல்வளம்  ஆழம் நிறைந்தது  தமிழ்  இலக்கியம் என்பது வாழ்க்கையின் இயல்பு செயல்பாடு  பேச்சுஇயல்பு  ஆகியவற்றை ஒரு தலை முறையிலிருந்து அடுத்த வரும் தலை முறைக்கு எடுத்து செல்பவை. இவை சமுதாய வளர்ச்சியிலும் ஒழுக்கத்திலும் அக்கறை காட்ட வேண்டும். இலக்கியமானது மானுட சமுதாயத்தை சிரிக்கவும் சிந்திக்கவும்  உதவ வேண்டும் வாழ்க்கை ஆகிய விஷத்தை அமுதமாக்குவது  கலைகளாகும்  வர்ணக்கலவைகளால் செய்யும் காவியம் . ஒவியம்.  வார்த்தைகளால் செய்யும் காவியம் கவிதை .  அங்கங்களின் நளின அசைவுக்ளால் செய்யும் காவியம் நடனம்.  கலைகள் மானுட சமுதாயத்துக்காக ஏற்ப்பட்டது பூக்களின் வாசம் பூக்களின் இயல்பை வெளிப்படுத்தும்  அதுபோல் நல்ல   கலைகள்   மானுட சமுதாயத்தின் இயல்பை     வெளிப்படுத்தவல்லன
பனித்துளியும் கடலை போய் சேருவதுதான் அதன் இலட்சியமாக கொண்டது  அதுபோல்  மனிதசமுதாயத்தை  இலக்கியங்க்ள்  வழிப்படுத்த வேண்டும்

தொழில் நுட்பம்  கண்டுபிடிப்பு என மக்கள் இன்று கூறுவது வள்ர்ச்சி என்பன  எம்  முன்னோர்கள் கூறியவை
இதயம் ஈர்ல் சிறுநீரகம்  நுரை ஈரல்  மாற்று சிகிச்சை   தொழில்னுட்பம் என்பர்  அன்றே சிவன்  விநாயகனின் உருவில் தலையையே யானை தலை ஆக்கினார்.  சூரன் வதை யில் தலைகளை மாற்றி  போரிட்டனர்
 இன்று செயற்கைமுறை  கருக்கட்டல்  சோதனைக்குழாய்  குழந்தை என்கிறார்கள் சாதனை  என்கிறார்கள்
அன்றே பாரதத்தில்  காந்தாரி  செயற்கை முறை 100  குழந்தைகளை  பெற்றெடுத்தனர
------------------------
1வைரமும்  கரியும் ஒரே  பூம்யில்தான் கிடைக்கின்றது  எனினும்  நீண்டனாள்  அமைதியாக  உறைந்து பொறுமை காத்த வைரம்  மானுடர் மகிழ்வுற  யொலிக்கின்றது
ஆனால்  கரியானது  அவதிப்பட்டு அமைதிஅற்று பொறுமையின்றி  அல்லல்பட்டமையால்   கரியாகி வெளிவந்து  நெருப்பினலும் விழுந்து எரிந்து தன் சுயரூபத்தை இழந்து அழிகின்றது
பொறுமைஉள்ள மனிதன் மின்னுகிறான்
பொறுமைஅற்ற் மனிதன்   அவலப்பட்டு அழிகின்றான்
2மரமானது  வெட்டுபவனை தாங்கி நீண்ட ஆணிவேரினால் நிலத்தில் நிலை கொள்கின்றது
அப்படியே நல்ல உயர் மனிதர்களும் பொறுமையாக இருந்து நிலையாக வாழ்கின்றனர்
3மரத்தின் கிளை வேர்களை பார்த்து நகைத்தது
நிலத்துள் மறைந்து
தண்ணீருக்கும் காற்றிற்கும் அவதிப்படுகிறாய் என்று
பூமியில் புயல் ஒன்று உருவாகியது
மரக்கிளைகள் ஆடியது ஆடியது
பின்னர் ஆடமுடியாது ஒடிந்து முறிந்தது
ஆந்த நேரத்தில் தென்றலையும் பெருமையையும்
 கூறிய மரக்கிளையின்  வாழ்க்கை முடிந்தது
அந்த நேரத்தில் வேரானது மரக்கிளையும் பார்த்து கூறியது  ஆணவம் செல்வச்செருக்கு கொண்ட பெருமை பேசும்
மக்களைப்போல உன் வாழ்க்கை முடிந்தது என்றது
என்னைப் பார் ஆடம்பரம் இல்லை எதோ கிடைக்கும் சிறிது உணவும் நீரும்  போதும் என்று பொறுமையுட்ன் மரத்தை தாங்கியவண்ணம் உடையாது முறியாது  மண்ணில்  நிலை கொள்ளச் செய்கின்றேன்
என்மரம் தொடர்ந்து வாழும்
இப்படியே பெரிய மனிதர்களின் தியாகம் சாதனை பொறுமை தன்சமுதாயத்தை தொடர்ந்து வாழ வைக்கிறது

--------------------------
எமது  பிள்ளைகளின் பிள்ளைப் பருவம்    முட்டைப் பருவம்
பிள்ளைகளின்  பள்ளிப்பருவம்  ம்யிர் கொட்டி
பிள்ளைகளின்   கல்லூரிப் பருவம்   கூட்டுப் புழு பருவம்
கல்லூரியினை விட்டு   வெளியேறும்போது  கூட்டுப் புழு சக்தி யெல்லாம் திரட்டி  உடைந்து வெளியேரும் பருவம் 
வண்ணத்துபூச்சியாக வெளியேறும்
வெளியேரும் வண்ணத்து பூச்சி பூங்காவினை அழகுபடித்துவதுபோல
மாணவர்கள் கல்லுரியினை விட்டு வெளியேறி உலகினை  அழகு படுத்த சமுதாயத்தை மாற்றி அமைக்க
உருவாகும்  மனிதசமுதயத்து  வண்ணத்துப்பூச்சிகள்
மென்மையாய் சுதந்திரமாய் பூவுக்கு பூ தாவி ஆடும் இளம் பட்டாம் பூச்சிகளே  எம்  குழந்தைகள்


துயரம்
-----------
துயரங்கள்  இயற்கை. சந்தோசம் மகிழ்ச்சி எப்ப்டி முக்கியமொ அதுபோல் துயரமும் நிலை யானது எல்லா இரவின் முடிவிலும் ஒரு   விடியல் வரும்..அதேபோல் விடியலும் அஷ்தமிக்கும் எனவே மனஙகளை மகிழ்ச்சி துயரம் கஷ்டம் இய்ற்கை நிஜதிகளென எல்லா நிகழ்விலும் இருபக்கங்கள் உண்டு  கடும் கும்மிருட்டு   கடந்து பின் கருக்கல்  கூடிய விடியல் வருவது போல விடியல் வரும் உச்சபோர் இறுதி கட்டப் போர் என்பன வந்தபின் கட்டாயம் அமைதி வரும் கோவில்களில்  சாமி வடக்கு வீதியில் வரும் போது திருவிழா நிறைவுறுவதுபோல  துயரங்கள் நிலையில்லாதது மனதை பிழிந்து வாட்டும் துயரங்கள் நிலைப்பதில்லை
எனவே மனித சமுதாயம்  துயரங்களில்  துவண்டுவிடாது   நிமிர்ந்து நிற்கும்   என துணிந்து கூறலாம்


நகை சுவை
---------------------
ஏளனம்  நகைப்பு  கவுரவகுறைவாக நடத்தல் நடப்பித்தல்   இவை தேவை இல்லாதது  ஆனால் நகைச்சுவையுணர்வுடன்  பேசும் நகைச்சுவை பிறரை சந்தொஷப்படுத்துமானால்  அந்த ந்கை ச்சுவை நன்மை உருவாக்கும்
 ஆனால் பிறரை புண்படுத்தும்  கஷ்டப்ப்டுத்தும் நகைச்சுவை  சமுதாயத்துக்கு  விஷ்மேயாகும்
முடிந்தவரை நன்மை பயக்கும் செயலை செய்ய வேண்டும்  நல்ல காரியங்கள் செய்யும் போது  பக்கவிளைவாக  தேவை இல்லாதது வரும்  சமையலின் போது புகை வரும் போது அதனை புகைகுழலால் வெளியெற்றவேன்டும் இல்லாவிடில்  புகை அறையினுள் பரவி கஷ்டப்படுத்தும்
அதுபோல்  நகைச்சுவை  மனித மனத்தை வேதனை ப்படுத்தக்கூடாது
 மனிதமனம்  ஒரு அனிச்ச மலர்   மனித இதயங்களை  அன்பு பண்பு அழகு மரியாதை பணிவு  போன்ற கவர்ச்சி நூலால் தைத்து  சமுதாயத்தின் உடலை மூடுங்கள்  அது  அணிபவர்க்கும்  பார்வையாளர்க்கும் சந்தோஷம் தரும்
மகிழ்ச்சி தரும்  மனிதமனங்களை  ஊசி கொண்ட குத்துவதாக  நகைச்சுவை  இருக்காது சமுதாயாதத்தை திருத்து  வழிகாட்டியாக இருக்கவேன்டும்

தலைமை
----------------
யுக புருசர்க்ள்  மத ரீதியான   தலைவர் களால்  உலகில்  மாற்றதை உருவாக்க முடியாது  பிறவிப்புத்திசாலிகளால்தான்  உருவாக்க முடியும். நேர்மையும்  அச்சமின்மையும்   எதிர்ப்பு குணங் லும்  ரத்தத்திலே  ஊறவேண்டும்  புத்திசாலிப் படைப்பாளிகளால்  தான் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கமுடியும்
சமுதாய மாற்றத்தை கொண்டு வரக்கூடியவர்கள்  அதி புத்தி சாலித்தனம்  நிறைந்த  தலைமைத்துவம்-

விதை
-----------
கட்டான் தரையில்  கல்   மண்  போன்ற நிலப்பரப்பில்   பயிர் செய்ய விதையை இட்டு  நேரத்தையும் விதையையும் வீனாக்குவது போல புரிந்துணர்வு அற்ற் மானிடனிடம்  உனது திறமை விதைகளை  போட்டு  மன வேதனை அடையாது 
பண்பட்ட போட்டதும் விளையக்கூடிய மண்ணை  ஒத்த  மானிடனிடம்  உனது திறமைகளைக்கூறி அவனை மேம்படுத்த உனது  அறிவை பயன் படுத்துவது  கேட்பவனுக்கும் ஆனந்தம்  அதைவிட  கூறுபவனுக்கு பேரானந்தம்
-----------------------------------------------------------------------------------------------

ரசிகன்
----------
இயற்கையின் ரசிகனும்  சிருஷ்டியின் சிருங்காரத்தின் ரசிகனும் தான் எழுத்தாளன்  கலைஞன் கவிஞன் .
இவர்கள் சாதாரண மனிதனிடம் இருந்து  ஒரு படி மேலே போனவர்கள்
உணர்வுகள்தான்    கற்பனையை உருவக்குகின்றது கற்ப்னை என்பது  மனஒட்டத்தின்  கனவு கற்பனைகதை களும்  பல உண்மைகளை அடக்கியது
ஆழ் கடலில்  அலைகள் எழுவதுபோல் மனம்  எனும்  ஆழ் கடலில் இருந்து  எண்ண அலைகள்  அலை அலையாக  பின்னிப் பிணைந்து திர்க்கமுடியாத சிக்கலாய்  உருவாகின்றது

      குளத்தில்  ஒரு கல்லை  போட்டதும்  எற்படும்  அலை பல அலைகளை  எழுப்பிவிடும்  அது போல் மக்கள் மனங்களில் விதைக்கும்  ஒரு சிந்தனை  பல எண்ணங்களை உருவாக்கும்  
யுகம் யுகமாய் மானிட வர்க்கத்தின் இயல்பை  மாற்றுவதி  செல்வத்திற்கு  பெரும் பங்குண்டு. செல்வம் பணம் பொருள்   மனித மனங்களை பெரிதளவு மாற்று கின்றது        

---------------------------------------------------------------------------------------
உலக நிதர்சனஙகள்

எந்த ஒரு துயரத்தையும்  குழப்பத்தையும்  துடைக்கும் சக்தி  இயற்கைக்கு உண்டு

உறக்கம் மனிதனுக்கு இன்பமும் சாந்தியும் அளிக்க வல்லது

கடல் அலை சர் சர் என கரையை நோக்கி அடிக்கும் லாவண்யம்  இயற்கை  எமக்கு அளிக்கும் இன்ப நிகழ்வு

இயற்கையும் ஒரு பொற்கொல்லன். மஞ்சள் நிற உடலில் தவளும் நீர் முத்துக்கள் தங்கத்தட்டில் வெண்முத்துக்களை பொருத்திய  அழகு அந்த உடல்  மின்னும் என்பது என்ன ஒரு கற்பனை

பெண்ணுக்கு சுதந்திரம்  அவள் அழகை  கெடுக்கிறது அடக்கம் அவள் அழகை கூட்டுகிறது அடக்கத்தில் சுதந்திரத்தை இழக்கும் பெண்களுக்கு மகத்தான  பெருமைஉறு சக்தி உருவாக்கின்றது


ஆட்களின் தொகையினால் மட்டும் ஒரு நகரம்  பாதுகாக்கப்படுவகில்லை அவர்களின் துணிவு  எச்சரிக்கை இவைகளால் காக்கப்ப்டுகிறது
வாழ்க்கையின் பெரும் பொறுப்புகளை எற்பவன்  தான் தலைவனாக முடியும்
பெரும் சாதனைகளின் அச்திவாரமே தியாகம் தான்
எந்த ஒரு கலைஞ்னுக்கும்  தொழிலாளிக்கும்  அவனது க்லைக்கும்  கடும் உழைப்புக்கும் வரவேற்பு கிடைக்கும் போது திருப்திஅடையும் போது அவனுக்கு அதை விட பெரிய ஊதியம் எதுவும் இல்லை
தீர்க்கதரிசிகளின் உத்தரவுகளும் சொல்லும் ஒரு வித இனம் புரியாத  சக்தியை அதாவது அபூர்வ சக்தியை கொண்டிருக்கும்

மனிதனை மனிதன் நம்ப வேண்டும்  நம்பாவிட்டால் வாழ்வது கச்டம் எனினும்  நம்பத்தகாத மனிதர்களும் உலகில் உண்டு

ஒருவருக்கு ஒருவர் சிந்தனைகள் வேறு அதை உணர்ந்து கொள்வதுதான் விவேகம்


அறிவு  விவெகத்தை  அளிப்பதில்லை தர்மத்துடன் கூடிய  அறிவுதான்  வளர்ச்சிஅடைகிறது

அறிவின் தெளிந்த ஒளிதான் விவேகம்
அதர்மம் அநீதி செயல்களை உடைய மனிதன்  ஒளி பெறுவதில்லை

வஞ்சகனாய் இருப்பவன் பெரு கோழையாக இருப்பான் அவன் பெரும் வஞ்சக செயல்களும் விவேகம் என நம்புகிறான்
அதர்மத்துக்கு  ஆரம்பம் வெற்றிதான் ஆனால் தர்மத்துக்கு வெற்றி மிக நிதானமாக வரும் அந்த நிதானம்  நிரந்தர சாதனைகளை தருகிறது
இதனை உலகம் புரிவதில்லை  புரிந்தால்  உலகம் மிக நன்றாக இருக்கும்


*மனிதன் அமைதிப்புறாவாக இருக்க வேண்டும்   வாழ்க்கை  தென்றலாகவும்  சுவையாகவும்  இனிமையாகவும் இருக்க வேண்டும்
*மனிதன் குழந்தை சிரிப்பும்  மென்மையான பேச்சும்  மிக நிதானமாகவும் இருக்க வேண்டும்
*மனதில்  எரிமலையும்  முகத்தில் குற்றால குளிர்ச்சியும்   ஆக இருப்பதற்கு  வாழ்க்கையின் சுமையும்  இடர்களும் தான்  காரணம்  வாழ்க்கை என்பது  ஒரு தெரியா புரியா  ரகசியம்
*வாழ்க்கை சில வேளைகலில்  கொடுமையாகவும்  சில வேளைகளில்  வியத்தகு  இன்பமாகவும் இருக்கிறது   இப்படி  புரிந்தும் புரியாமலும்   இருப்பதால்  இதுவே  பெரும்பாலான  திர்க்கதரிசிகளின் தேடலாய் இருக்கிறது

*இளம்  சிறாற்கள்  நாளைய சமுதாயத்தின்  முன்னோடிகள்
முதியோர்கள்   இளம் சிறார்களுக்கு  உரமாகவும்  வழிகாட்டியாகவும்  விளங்க வேண்டும்

*அறிவு இன்பம் இரண்டும் சேர்ந்தது வேதாந்தம். இன்பமற்ற  அறிவு கொண்ட வேதாந்தம் வறட்டு வேதாந்தம்

*ஆபத்து ஆள்பலத்தால்  மட்டும் சமாளிக்கப்படுவதில்லை  அறிவுப்பலத்தால் மட்டும் சமாளிக்கப்படுகிறது

*வாழ்க்கை  பரந்த கடலைப்போல  .சில வேளைகளில்  இன்பமாகவும்   பின்பு துன்பமாகவும்     அடிக்கடி மாறும்
கடலின் நிலைமையும்  சிலவேளை  கடல் சஞ்சாரத்துக்கு ஏற்றதாகவும்  சிலவேளை சொல்ல முடியாத கொந்தளிப்பையும்  தரும். கடல் அலை  
அடிக்கடி மாறும் தன்மை யானது  அதுபோல் வாழ்வும்  எப்படியும் மாறும்

*கவிஞன்    கவிதைக்கு இலக்கணம் வகுப்பவன்   உலகினை ரசிப்பவன் எவனும் கவிஞன் தான்  உணர்வுகள் கொந்தளிக்கும் மனப்பாங்கு  மனிதனை கவிஞாக்கிறது   அழகிகள் கவிகளின் இலக்கியம்  
பெண்ணின் அழகு   நதி அழகு  கடல் அழகு  மலர் அழகு  இயர்கையின் அழகு  கவிதை கூறத்தூண்டும் 

*வானமெனும் கூரையிலும் தரை எனும்  தரைக் கம்பளத்திலும்   இடையே  இயற்கையெனும்  எழில் கொண்ட  உலகம் உலவு கிறது  இந்த உலகில்தான்  என்னென்ன  காட்சிகள் கருமங்கள் கடமைகள்  செயல் வைபவங்கள்  மாறுபாடுகள்
இயற்கையின்  சிரிஷ்டி  மனித கற்பனை எண்ணங் களுக்கு அப்பாற்பட்ட  ஒரு அற்புதம்

*கனவு காண்பது  மனித இயற்கை அதனை உடைப்பது விதியின் இயற்கை இதுவே வாழ்வின் போக்கு

*மனிதசமுதாயத்துக்கு நம்பிக்கை வேண்டும்  நம்பிக்கை   அந்த பலம்  சித்ததுக்கும் சிந்தனைக்கும்  சக்தியை   கூட்டுகிறது
*மனித முயற்சிகள் பிரயத்தனங்கள்  பலவீனமானது இல்லை     ஆனால்  விதியின் வலிய கரத்துக்கு முன்னால்  அவை  அற்பமானது





*இசைக்கருவிகளும்   வாழ்வின் இயல்பை உணர்த்துவன  
நாதசவரம்  வாழ்க்கையில் ஓட்டை உள்ளவன் பிரகாசிக்கிறான்  நாதச்வரத்தின் ஓட்டைகளே காற்றின் துணைகொண்டு
னல்ல இசையை வழங்குகிறது
*தவில்  மேள வாத்தியம்  சம்பந்தமே இல்லாது சில மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்
அதுபோல் தவில்   .நிரபரதி  அடிபட்டுப்போகிறான்
ஒத்து வாத்தியம்  என்றுமே எல்லா இடமும்  ஒத்து போவது நல்லது  .அது தான்  சமுதாயத்தின் சமூக அமைப்பாகும்

*கனவுகள்
-------------
தூக்கத்தில் வருவது   துக்கத்தை கலைப்பது கனவல்ல
மனிதனை தூங்கவிடாது துரத்திக்க்கொன்டே இருப்பதுதான்  கனவு
மனித லட்சியத்தின்  விடியல்தான்  கனவு  .லட்சியமில்லா விடியல்கள்  வாழ்வின் தொலைந்த  பக்கங்கள்



மண்புழுவின்  இரத்தம்   வெள்ளை
பூச்சி இனங்களின்   இரத்தம்   கலர் இல்லை
ஆனால் மனித இரத்தம் கலர் சிவப்பு எல்லா மனித இரத்தில்  நிறம் சிவப்பாகையால் எல்லா மனிதனும்   அபத்தானவர்கள்  நாம் என்றும் எதிலும் எச்சரிகையுடன் இருக்கவேடும்







பூகம்பம்

  பூமியும்  பொறுமை இழக்கும்

  பூமியும் சில மனிதர்களை போல   வெளித்தோற்றம்  அமைதியாக இருக்கும் . சலனம், அற்று   கவிஞர்களின் பாடலில்  அகழ்வாரைத்தாங்கும் நிலம் போல எனெ பாடுவர் .ஆனால் பூமியின்  நிகழ்வுகளை பார்க்கும் போது  இதனை எற்றுகொள்ளமுடியாது .  பூமியும் உள்ளெ  குமுறிக்கொண்டும்  கொந்தளித்துக்கொண்டும் தான் இருக்கிறது .பொறுமை இழந்த நிலையில்  கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  பூகம்பமாக வெடித்து  தனது  கோபத்தை வெளிப்படுத்துகிறது. எரிமலையாக வெடித்து  அதிஉயர் வெப்பதுடன் கூடிய  எரிமலை ஆறாக ஓடுகிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல   இயற்கையாகிய பஞ்ச  பூதங்களாகிய  பூமி காற்று  நீர்  தீ வானம் ஆகியவையும்  பொறுமை இழக்கும்


கடலின்  வேதனையை கடல்  சிறிய அளவில்     இடை இடையே     காட்டும்  .  பொறுமை இழக்கும் நிலையில்   சுனாமியாகி   தனது  கோரத்தண்டவத்தை காட்டிவிடும்  .மனிதர்களை  கடலுக்குள் இழுத்து  பின்னர் கரையில் தள்ளிவிடும்
சுனாமி எற்பட்டபோது  கடல் கரையில்  தான்  எவ்வளவு மனித குவியல் கள்  மீன்குவியல் போல


வானம்    பொறுமை இழந்தால் மழை  அளவு மீறி பொறுமை இழக்கும் போது  பெரு மழையாகா  பூமியை  பெரு வெள்ளமாக  புரட்டிப் போடுகிறது
காற்றும் இது போல  தென்றாலாகவும்  குளிர் காற்றகவும்  மனிதனுக்கு  இன்பம் கொடுத்த  காற்று  சூறாவளியாக   பூமியில் பெரும் அழிவுகளை  காடும்  . 


தீ  மனிதன் நல்ல காரியங்களுக்கு  பயன் படுத்தும் போது  மகிழ்சியடையும் மனிதன்  சிலவேளை  தீமைக்கும் பயன் படுத்துகிறான்.  பொறுமை இழக்கும் வரை  அமைதியாக இருக்கும்.  ஆனால் பொறுமை இழக்கும் போதுதான்  காட்டுத்தீயாக  பூமியை பதம் பார்க்கிறது


இயற்கையே பொறுமை இழக்கிறது எனில்  மனிதன்  எப்படி பொறுமை  காப்பான்.  நல்ல மனித மனங்களை  காயப்படுத்தீர்கள்.  தீமையும் நன்மையும்  சேர்ந்திருக்கும்.  ஆனாலும்  முடிந்தவரை  நல்ல மனித இதயத்தை   காயப்படுத்தாதீர்கள்  .  நல்ல  உள்ளங்களின்  பொறுமையும்  இழந்தால்  பேரழிவுதான் .

 நல்ல மனிதர்   ஒருவர்  போதும்  மானுட  சமுதாயம்  வளர்ச்சிஅடையும்  . 




தீண்டாதே தீண்டாதே  நல்ல மனதை  தீண்டாதே
வாழ்த்துங்கள்  வாழ்த்துங்கள்  நல்ல  செயலை வாழ்த்துங்கள்



நன்மைகள்  கூடவும்  தீமைகள்  குறையவும்   பாடுபடுவோம்
எந்த ஒரு  தப்பான செயலுக்கும்  மனிதன்  இறப்புக்குள்  தண்டனை  அடைவான். சிலப்பதிகாரம்  கூறும்  உண்மையும் அதுவே . .அறம்  ,தர்மம் , அன்பு  நிலையானது.  பூமியைவிடவும்  நிலையானது  ,உறுதியானது.




மனிதன் திருப்தியின்மையுடன் இருக்க  வடிவவமைக்கப் பட்டிருக்கிறான் 

எத்தனை சாதனைகள் வெற்றிகள்  மகிழ்ச்சி  உடையவனாக  இருந்தாலும்   மனிதன் திருப்தி அடைவதில்லை   தொடர்ந்து  வெற்றி பணம்  புகழ்   எனெ  தேடிக்கொண்டும்  ஓடிக்கொன்டும் இருக்கிறான்   இது மனித இயல்பு.  திருப்தி அடைந்தால் இறைவனாகி விடுவான்



நாம் என்றும் கனவுகளுக்காகவும்   இலட்சியங்களுக்காகவும்    ஓடவேண்டும்  நல்ல சுழலை உருவாக்கி நல்லபடி வாழ்வதற்கான  வழிமுறையை காட்டுவது  ஆன்மீகம் ஆகும்


. தோல்விகளையும் ரசிக்கப்பழகவேண்டும்  ஏனெனில்  மனித வாழ்வில்  வெற்றியைவிட தோல்வி தான்  அடிக்கடி வரும்  தோல்வியை கண்டு பயப்படாவிடில் தோல்வியால் துயரமோ  தடுமாற்றமோ  எமக்கு  வராது அதனையும் கடந்து  போய்விடலாம்



ஒரு வாழ்வு எப்படி அமைய வேண்டும்  எனெ கூறும் நூல்  சிலப்பதிகாரம். ஒரு சிறு தவறும்  வாழ்வை பாதிக்கும் எனக் கூறுகிறது.  அற வாழ்க்கை வாழவேண்டும்  அற வழி தப்பினால் அறம் கூற்றுவனாகும் எனெ   சொல்லப்படுகிறது



மனித  இனத்தில் உயர்வு தாழ்வு எனெ எதுவும் கிடையாது.   ஒருவனது நல்லசெயல்கள்  தீயசெயல்கள் தான் உயர்வு தாழ்வை  கணிக்கும் அளவு கோலாகும்.

அறம்  என்பது கூட்டல் கழித்தல் இல்லை
அறச்செயல்கள்  கூட செய்து  மறசெயல்  தீய செயல்    குறைய செய்து    அறம் கூடுவதனால்   தீயசெயலுக்குரிய தண்டனை கழிபடாது.  செய்த தீமைக்குரிய  தண்டனையும் செய்த நன்மைக்குரிய    நனமையையும் ஒருவன் அனுபவிக்க வேண்டும். 


மனிதன் தாழ்வு மனப்பாங்கை விட்டால்  பல அரிய செயல்களை செயலாம்.  திறமையுடன் கூடிய  முயற்சி   வெற்றியைத்தரும்  .தயக்கம்  தாமதம்   தாழ்வு  மனப்பான்மை   சோம்பல்   துக்கம் முயற்சியின்மை இவைதான்  மனிதன்  முன்னேற்றத்தடைகளாகும் இவை நம்மை கட்டிப்போடுகின்றன  .

தமிழ்க் கடவுள்




தமிழர் கடவுள் முருகன். தமிழர் உள்ள இடமெல்லாம் முருகன் இருப்பான்.  முத்தமிழின் தெய்வம் முருகன் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்திருப்பான் மொழி ஒரு பவித்திரமான செல்வம். அதை கையாளுகிறவரும் கையாளப்படுகிற பொருளும் உயர்தரமாக அமைந்துவிட்டால் பிறக்கும் இலக்கியமும்  சிறப்பாகும். முருகன்  குறிஞ்சிக் கடவுள் என்பர்  மலையும் மலை சார்ந்த இடங்களில் வசிப்பவன்.  முருகன் குடிகொண்ட  ஆறு படை வீடுகள்   பழனி,  சுவாமிமலை,  திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி,  பழமுதிர்சோலை என்பன.  அழகும் வீரமும் ஞானமும் முத்தியும் தரும் கடவுள் முருகன்

கந்தபுராணம்      உற்பத்திக்காண்டம்  தட்ச காண்டம்,  அசுர காண்டம்,   தேவ காண்டம்,  மகேந்திர காண்டம், யுத்த காண்டம்  என  ஆறு காண்டங்கள்    கொண்டது.   இந்நூல்    திருக்கைலாயம்    தொடக்கம்  வள்ளி திருமணம் வரை  141 படலங்களும் 14345   பாடல்களும்   கொண்டது  கந்தபுராணம்.   
கந்தபுராணம்,  "திகட சக்கர"  என முருகனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டது.   கச்சியப்ப சிவாசாரியாரால்   இயற்றப்பட்டது  . இந்நூல்  கந்தப்பெருமானைப்  பற்றிய புராணம்  ஆகும்.

தேவர்கள்   அசுரர்களினால் துயருகின்றனர். தேவர்கள் தலைவன் இந்திரன்  தனது தேவகணங்களுடன் தாரகாசூரனால்  ஏற்படும் துன்பகளைச் சிவனிடம் சென்று  அழுது முறையிடுகின்றனர். சிவனும் தேவர்கள் துயர் துடைக்க ஆற்றலும் திறமையும் கொண்ட கார்த்திகேயனைத்  தோற்றுவிக்கிறார்.

கார்த்திகேயன் பிறப்பிற்காகச் சிவ பார்வதி திருமணம் நடக்கின்றது. பார்வதியை உலக சிருஷ்டியை  உருவாக்கும்  சக்தி உடைய ஆதிசக்தியாக உருவாக்குகிறர் சிவன். பார்வதியாகிய நிலையில் சிருஷ்டியின் சக்தியை பார்வதியால்  இயலாது எனவேதான் சிவன் பார்வதியை ஆதிசக்தியாகிய ஆதிபராசக்தியாக  உருவக்கினார் சிவன். ஆதி சக்தியின் ஆசியுடன் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து அனல்பொறி உருவாகி அது அக்னிப் பிழம்பபாக, சிவன் கங்காதேவியிடம் கொடுத்துக் குளிர்விக்க அதனைக் கங்காதேவி  பூமாதேவியிடம் கொடுத்தார். அதுவே பூமியில்  ஆறு துண்டங்களாகிச்  சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலரில் ஆறு பாலகர்களாகின.

இந்த ஆறு குழந்தைகள் கிரித்திகா லோகத்துக் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்படுகின்றனர். கார்த்திகைப் பெண்களால்  அன்புடனும் பெருமையுடனும் சீராட்டித் தாலாட்டி  வளர்க்கப்படுகிறார் இந்த சிவமைந்தன் கார்த்திகேயன்.

ஆனால்  தாயாகிய ஆதிசக்தி தனது குழந்தையை நினைந்து கவலையுற்று சிவனிடம் வினவுகின்றார்.  சிவனும் ஆதிசக்தியின் கவலை போக்கக்  கார்த்திகை பெண்கள் மூலம் குழ்ந்தைகளை கொண்டுவந்து தாயாகிய ஆதிசக்தியிடம்  காட்டுகின்றனர். தாயாகிய ஆதிசக்தி அக்குழந்தைகளை ஒன்றாக அணைக்க ஆறு குழ்ந்தைகளும் ஒருகுழந்தை ஆகின. அக்குழந்தையே ஆறுமுகனாகியது அதற்கு சிவன், குகன் என பெயரிட்டார்.  கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டமையால்  கார்த்திகேயன் எனவும் அழைக்கப்படுவார் எனக் கூறினார். எனவே  குமரக் கடவுளுக்கு ஆதிசக்தி, கங்காதேவி, பூமாதேவி, ஆறு கார்த்திகைப் பெண்களென  ஒன்பது தேவியர் தாயாகினர்.

இந்தக் குமரக்கடவுள்  தேவர் குறை தீர்க்க ஆதிசக்தியால் தோற்றுவிக்கப்பட்டவர். எல்லா சிருஷ்டியுமே ஏதாவது காரணத்துக்காகவே உருவக்கப்படுகின்றது. பஞ்ச பூதங்களுக்கும் சிவனே அதிபதி .இயற்கையின் படைப்பு பஞ்ச பூதங்களின் கலவையாக உள்ளது. இயற்கை பஞ்ச பூதங்களாகிய நிலம் நீர் காற்று ஆகாயம் அக்னி  என  ஐந்தும் சமநிலையில் இருக்கும். இதில் ஏதாவது குறைவு எற்பட்டாலும் சமநிலை பாதிக்கும். இயற்கையின் சிருஷ்டி பஞ்ச பூதங்களை கடந்து எதுவும் இல்லை.

குமாரக் கடவுள்  கார்த்திகேயனுக்குச் சிவனின் ஆணைப்படி நந்தியெம் பெருமானால் யுத்தக்கலை போதிக்கப்படுகிறது. ஆதிசக்தியானவர் மகனின் யுத்த பயிற்சியின் திறமை கண்டு பெருமை அடைகிறார். மகனின் ஆற்றலில்  திருப்தியுற்றுத்  தேவர்களைத் தாரகாசூரனின் பிடியிலிருந்து காக்க ஆசி வழங்குகிறார். குமார கடவுளுக்கு  சொர்க்க லோகத்தை அசுரர் பிடியிலிருந்து விடுவிக்க குமரக்கடவுள் யுத்தத்துக்கு தயார் ஆகின்றார்.
யுத்தத்துக்கு தயாரான கார்த்திகேயனுக்குச்  சிவனின் ஆச்சாரியர்களால்  தேவசேனாதிபதி பட்டம் கட்டப்படுகிறது சிவச்சாரியர்களால் அபிசேகம் செய்து முடி சூட்டப்படுகிறது.  பின்னர் பிரமனால் தண்டாயுதமும், சிவனால் படைக்கலமும், விஷ்ணுவால் மணிமுடி கவசங்களும்  கொடுக்கப்படுகிறது தேவேந்திரனால் மயில் வாகனமும் அளிக்கப்படுகிறது.

வேல் ஆற்றலின் இருப்பிடம். இதனை ஆதிசக்தி அன்னை மைந்தன் கார்த்திகேயனுக்குக் கொடுத்து யுத்ததில் வெற்றி பெற  ஆசீர்வதிக்கிறர் தேவியின் வேலாயுதம் சக்தியும் ஆற்றலும் திறமையும் மிக்கது  தாரகாசூரனை வெல்வதற்குத் தேவகணங்களுடன் செல்லும் கார்த்திகேயனை  ஆசி வழங்கி அனுப்பிவைக்கிறார்.
உள்ளத்தினில் எழும் வினாக்களுக்கு விடை காணவும் சங்கடங்களுக்குரிய தீர்வையும் உன்னுள் இருக்கும் ஞானத்தால் உணரவேண்டும். யாரும் உனக்கு உதவ முடியாது என ஆசி வழங்கிக் கார்த்திகேயனை வெற்றியுடன் வரும்படி ஆசீர்வத்திது "விஜயீபவ" என ஆசி அருள்கிறார்  அன்னை ஆதிசக்தி.



திகட சக்கரச் செம்முகம் ஐந்துள்ளான்
சகடச் சக்கரத் தாமரை  நாயகன்
அகடச்சக்கர விண்மணி யாவுரை
விகட சக்கரன் மெய்பதம் பொற்றுவோன்



கேட்டவரம்மெல்லாம் தருபவன் குமரக்கடவுளென்ற அழகிய நெறியினையும் எமது கருணாநிதியாகிய  குமரக்கடவுளிடம் இராமலிங்க சுவாமிகள் பிரார்த்தனை  செய்து பாடியபாடல் இது


ஒருமைஉடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்கவேண்டும்
பெருநெறி பிடித் துழுக வேண்டும்
மதமான  பெய் பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாது இருக்கவேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதிவேண்டும்
நொயற்ற வாழ்வில்நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தக்கொட்டத்துள் வளர்
தலமோங்கும் கந்தவேளெ
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே


தமிழில் அமைந்த முருகன்
பேசும் தமிழில் சொல்லும் சொல்லில் தமிழ்  உள்ளது
அழகு தமிழிலில் முருகன் .உள்ளான் முத்தமிழ் இருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான்
முத்தமிழ் முருகன் அழகன். என்வே தான் எம் தமிழில் படிக்க படிக்க சுவைக்க ரசிக்க இனிமை தரும்
சங்க இலக்கியங்களை படிக்கவும் அதன் கருத்துக்களும் எந்நிலையிலும் இன்புற வைக்கும்
ஆறுமுகன் முகங்கள் ஆறு  அதுபோல் வல்லினம்  கசடதபற ,  மெல்லினம் ஞயஜநமன ,  இடையினம்  யறரவலழ என்பதாகும்.
உயிர் எழுத்து 12  மெய்யெழுத்து 18  .அதுபோல்  முருகன்  கரங்கள் பன்னிரண்டு  சிரங்கள் ஆறு  சேர்ந்து  18 ஆகின்றது
முருகன்  சிவனின் ஆறுவகை முகங்களான  ஈசானம் ., தற்புருடம் .,.அத்வதம் ., சாமவேதம்..,சத்தியாசோதம், 
அத்துடன்   இறைவனின் அதோமுகம்   ஆக  ஆறுமுகத்துடன்  சரவணபவனாக  உள்ளார்  சிவன்  நமசிவாயா எனும்  பஞ்சாட்சரம்  எனவும்   முருகன்   சடாச்சரம்   எனவும் அழைக்கப்படுகிறார்கள்
முருகன் எனும் பெயரில்  மு  மெல்லினம் ,  ரு   இடையினம்,  க வல்லினம், எனும் முத்தமிழில் முருகன் பெயர் அழகு பெறுகிறது
இறைவன் அருளால் கிடைத்த மானிடப்பிறவியை   ஞானமும்
கல்வியும் அமர்ந்த ஞான வாழ்க்கை வாழ்ந்து  தானமும்  தவமும் இயற்றி  சமுதாயம் சிறப்புற வாழ்பவனுக்கு
வானவர்  நாடு  வழிதிறந்திடுமே
வாழ்க்கை என்பது ஒரு பெரிய சுரங்கம் அதனுள் எத்தனை பெரிய  தத்துவங்கள் நிறைந்தது  எப்ப்டியும் வாழலாம் 
எனினும் மனித சமுதாயத்தவக்கு  பயன்பெற வாழ்ந்து     உழைத்து   சீர்திருத்தம் பெற உதவ வேண்டுவஅ
வாழும் மனிதனின்  கடமையாகும்

நவராத்திரி
நவராத்திரி      ஒரு   அம்மனை  வேண்டி    சைவ   மக்களால்   வணங்கப்படும்
விழாவாகும்.   இது    ஒன்பது   நாட்கள்   வழிபட்டு   கடைசி நாள்    விஜயதசமி
என   வழிபடுவர்