Monday, September 23, 2013

தமிழ் கூறும் அறிவுரை


தமிழ் கூறும் அறிவுரை



சாதுக்கள் அமைதியானவர்கள் அன்பானவர்கள் என்றும் சந்திரனின் நிழல் போல் பிறரைக் குளிர்விப்பவர்கள்
இளமை செல்வம் ஆயுள் ஆகிய மூன்றும் தாமரை இலைமேல் நீர்த்துளிபோல நிலை யற்றது.

விவேகம் உடையவன் சூழ்நிலைசந்தர்ப்பங்களைஎதிர்பார்த்துவிழித்திருப்பான்.


உலவாழ்க்கையில் பிறர்க்கும் தனக்கும் துன்பம் உண்டாகாது வாழும் வாழ்க்கை சிறப்புடையதாகும்

.
தாம் கற்ற கல்வியை தனக்கும் பிற்ர்க்கும் பயன் படாது வீணாக்குபவன் வாழ்வு ஜடத்துக்கு சமமாகுவான்
.
எல்ல மனிதருக்கும் பிடித்தமானது அவர் உயிரும் தன்மானம் கௌரவம் ஆகியன.
போதும் என்ற மனம் இல்லாமை தொடர் துன்பங்க்ளை தரும்
.
எம்மைவிட சிறிய மனபாங்குடையவரிடம் உதவி கோருவது அற்பமான செயலாகும்
.
ஒருவரிடம் அடிமைப்பட்டு விலங்குபோல் பேச்சு உரிமை செயல் உரிமை இலாது இருப்பவர்கள் வாழ்வு நரகத்தை விட கொடுமையானது

பிறப்பு இறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுபடுவது நல்ல அறிஞருக்கு அழகு
.
நம்மை ஆசையானது சம்சார சாகரத்தில் சிக்க வைக்கிறது
.
நம்முடைய உண்மையான பகைவன் முயற்சியின்மையே
.
தர்மசிந்த்னை உள்ள மனத் தூய்மை
உள்ள ஆத்மா புண்ய ஆத்மா என்பர்
எத்தகைய இக்கட்டிலும் பிறரிடம் உதவி கோராது இருப்பது மிகச் சிறந்தது
.
சாதுக்களின் உபதேசமானது அமுதம் போல் காதுக்கு இனிமையானது

.
உலகில் நல்லது கெட்டது பிரித்தறியும் வாழ்க்கைநெறி உடையவர்கள் நல்ல அறிவாளிகளாவர்
.
கர்மாக்களால் பெற்ற நல்ல அறிவைப் பெற்றவன் மோட்சத்துக்கு வழி அமைக்கிறான்
.
அனைவராலும் விரும்பப்பட்டு தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வதில் ஆர்வமுடையவராக இருப்பது உத்தமமான கொள்கையாகும்
.
தத்துவங்கள் சாத்திரங்கள் ஆகியவற்றில் புலமை பெற்று சீடனின் நன்மையில் நாட்டம் உள்ளவர் நல்ல குருவாவர் 
 
 நாம் என்றும் ஏழை மக்களிடம் கருணையும் நட்பும் கொண்டவர்களாக இருக்கவேன்டும்
உண்மை பேசுபவனாகவும் அன்பும் அடக்கமும் உடையவன்  எல்லா உயிர்களையும் தன்வசப்படுத்த முடியும்


கருணை உள்ளம் கொண்டவனை தேவர்களும் விரும்பி வணங்குவர்

சத்யம் பொறுமை கொண்டவன் எல்லா வெற்றிகளையும் பெறுவான்  தீய சிந்தை உடையவன் வாழ்வில் தாழ்வினை  பெறுவான்

மூடன்  நிம்மதியற்றவன்   செய் நன்றி மறந்தவன் சந்தேகப்பிராணி  ஆகியோருடைய ஆத்மா இறக்கும் தறுவாயில் துய்மைப்படுத்த முடியாது பலராலும் நிந்திக்கத்தக்க செயல் களை செய்யக்கூடாது

 பெற்றோர் வழிகாட்டலை  ஆசிரியர்  வழிகாட்டலை  முதியவர்கள்   வழிகாட்டலையும்  சமுதாயத்து இளைஞ்ர்கள்  பின்பற்ற வேண்டும். பெரியவர்களது அனுபவங்கள்  வாழ்வின் அரிய் பொக்கிசங்களாகும்
 
  
கருத்தரிப்பதெல்லாம்   பிள்ளைஅல்ல   கருத்தறிந்து    நடப்பதுவே   பிள்ளையாகும்

சிலர்  நாணல்    போல்   எல்லாருக்கும்   சலாம்   போட்டு   வாழ்வர்  சிலரோ   தென்னைமரம்  போல்   வளையாது   வாழ்நாள்   முழுவதும்    பிறருக்கு  உரமாய் இருந்து    தலைநிமிர்ந்து
பிறர்  பயன்பட  வாழ்வர்


உயர்ந்த   நோக்கோடு   தான்   கற்ற  அரிய கலையினை  மனித  சமுதாயத்தின்  ஆரோக்கிய வளர்ச்சிக்கு   பயன்படுத்தலே  மனிதனின்  அடிப்படை ஆவலாக  இருத்தல் வேண்டும்


*அருளாளர்கள்  தன்னை அறிந்தவர்கள்.  விருப்பு வெறுப்பு அற்றவர்கள் சிவத்தன்மை பெற்றவர்கள்.
 .திருவருளை அடைந்த தன்மையால்  தன்னை அடைந்தவர்களின் நலனைக்காக்கும் தன்மை பெற்றவர்கள் தன்னை அறிந்த  தத்துவ அறிஞர்கள். 
 பக்தர்களின்   நலனை க்காப்பதுடன்  அவர்களை பிடித்த வினைகளை தீர்ப்பதுடன் இனி புதிய வினைகள் அணுகாது காத்திடர்

மனிதன்     தான் செய்யும்     தவறுகளை     திருத்தாவிடில்     வாழ்க்கையில்   பெரும்    தோல்விகளை    சந்திக்கத் தோன்றும்



மானம்
----------
தன்மானம்   காத்திட்ட தலைவர்கள் 
தமிழராய் பூமியில் பிறப்பதுண்டு
மானம் காத்த வீரனின் பெருமை
மலை போல் அவனியில்  நிலைத்திருக்கும்

பெண்பெற்ற பெற்றோருக்கு   மானமென்பது
பாரினில்   போவதும் வருவதுமாக இருக்கும்
சன்மானம்  தேடி ஓடிடும்    மானுடமே
தன்மானம் காத்து வாழ்ந்திடுவாய்



பூகம்பம்
  பூமியும்  பொறுமை இழக்கும்
  பூமியும் சில மனிதர்களை போல   வெளித்தோற்றம்  அமைதியாக இருக்கும் . சலனம், அற்று   கவிஞர்களின் பாடலில்  அகழ்வாரைத்தாங்கும் நிலம் போல எனெ பாடுவர் .ஆனால் பூமியின்  நிகழ்வுகளை பார்க்கும் போது  இதனை எற்றுகொள்ளமுடியாது .  பூமியும் உள்ளெ  குமுறிக்கொண்டும்  கொந்தளித்துக்கொண்டும் தான் இருக்கிறது .பொறுமை இழந்த நிலையில்  கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  பூகம்பமாக வெடித்து  தனது  கோபத்தை வெளிப்படுத்துகிறது. எரிமலையாக வெடித்து  அதிஉயர் வெப்பதுடன் கூடிய  எரிமலை ஆறாக ஓடுகிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல   இயற்கையாகிய பஞ்ச  பூதங்களாகிய  பூமி காற்று  நீர்  தீ வானம் ஆகியவையும்  பொறுமை இழக்கும்
கடலின்  வேதனையை கடல்  சிறிய அளவில்     இடை இடையே     காட்டும்  .  பொறுமை இழக்கும் நிலையில்   சுனாமியாகி   தனது  கோரத்தண்டவத்தை காட்டிவிடும்  .மனிதர்களை  கடலுக்குள் இழுத்து  பின்னர் கரையில் தள்ளிவிடும்
சுனாமி எற்பட்டபோது  கடல் கரையில்  தான்  எவ்வளவு மனித குவியல் கள்  மீன்குவியல் போல
வானம்    பொறுமை இழந்தால் மழை  அளவு மீறி பொறுமை இழக்கும் போது  பெரு மழையாகா  பூமியை  பெரு வெள்ளமாக  புரட்டிப் போடுகிறது
காற்றும் இது போல  தென்றாலாகவும்  குளிர் காற்றகவும்  மனிதனுக்கு  இன்பம் கொடுத்த  காற்று  சூறாவளியாக   பூமியில் பெரும் அழிவுகளை  காடும்  . 
தீ  மனிதன் நல்ல காரியங்களுக்கு  பயன் படுத்தும் போது  மகிழ்சியடையும் மனிதன்  சிலவேளை  தீமைக்கும் பயன் படுத்துகிறான்.  பொறுமை இழக்கும் வரை  அமைதியாக இருக்கும்.  ஆனால் பொறுமை இழக்கும் போதுதான்  காட்டுத்தீயாக  பூமியை பதம் பார்க்கிறது
இயற்கையே பொறுமை இழக்கிறது எனில்  மனிதன்  எப்படி பொறுமை  காப்பான்.  நல்ல மனித மனங்களை  காயப்படுத்தீர்கள்.  தீமையும் நன்மையும்  சேர்ந்திருக்கும்.  ஆனாலும்  முடிந்தவரை  நல்ல மனித இதயத்தை   காயப்படுத்தாதீர்கள்  .  நல்ல  உள்ளங்களின்  பொறுமையும்  இழந்தால்  பேரழிவுதான் .
 நல்ல மனிதர்   ஒருவர்  போதும்  மானுட  சமுதாயம்  வளர்ச்சிஅடையும்  . 
தீண்டாதே தீண்டாதே  நல்ல மனதை  தீண்டாதே
வாழ்த்துங்கள்  வாழ்த்துங்கள்  நல்ல  செயலை வாழ்த்துங்கள்
நன்மைகள்  கூடவும்  தீமைகள்  குறையவும்   பாடுபடுவோம்
எந்த ஒரு  தப்பான செயலுக்கும்  மனிதன்  இறப்புக்குள்  தண்டனை  அடைவான். சிலப்பதிகாரம்  கூறும்  உண்மையும் அதுவே . .அறம்  ,தர்மம் , அன்பு  நிலையானது.  பூமியைவிடவும்  நிலையானது  ,உறுதியானது.

No comments:

Post a Comment