Wednesday, September 4, 2013

தமிழ்க் கடவுள்




தமிழர் கடவுள் முருகன். தமிழர் உள்ள இடமெல்லாம் முருகன் இருப்பான்.  முத்தமிழின் தெய்வம் முருகன் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்திருப்பான் மொழி ஒரு பவித்திரமான செல்வம். அதை கையாளுகிறவரும் கையாளப்படுகிற பொருளும் உயர்தரமாக அமைந்துவிட்டால் பிறக்கும் இலக்கியமும்  சிறப்பாகும். முருகன்  குறிஞ்சிக் கடவுள் என்பர்  மலையும் மலை சார்ந்த இடங்களில் வசிப்பவன்.  முருகன் குடிகொண்ட  ஆறு படை வீடுகள்   பழனி,  சுவாமிமலை,  திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி,  பழமுதிர்சோலை என்பன.  அழகும் வீரமும் ஞானமும் முத்தியும் தரும் கடவுள் முருகன்

கந்தபுராணம்      உற்பத்திக்காண்டம்  தட்ச காண்டம்,  அசுர காண்டம்,   தேவ காண்டம்,  மகேந்திர காண்டம், யுத்த காண்டம்  என  ஆறு காண்டங்கள்    கொண்டது.   இந்நூல்    திருக்கைலாயம்    தொடக்கம்  வள்ளி திருமணம் வரை  141 படலங்களும் 14345   பாடல்களும்   கொண்டது  கந்தபுராணம்.   
கந்தபுராணம்,  "திகட சக்கர"  என முருகனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டது.   கச்சியப்ப சிவாசாரியாரால்   இயற்றப்பட்டது  . இந்நூல்  கந்தப்பெருமானைப்  பற்றிய புராணம்  ஆகும்.

தேவர்கள்   அசுரர்களினால் துயருகின்றனர். தேவர்கள் தலைவன் இந்திரன்  தனது தேவகணங்களுடன் தாரகாசூரனால்  ஏற்படும் துன்பகளைச் சிவனிடம் சென்று  அழுது முறையிடுகின்றனர். சிவனும் தேவர்கள் துயர் துடைக்க ஆற்றலும் திறமையும் கொண்ட கார்த்திகேயனைத்  தோற்றுவிக்கிறார்.

கார்த்திகேயன் பிறப்பிற்காகச் சிவ பார்வதி திருமணம் நடக்கின்றது. பார்வதியை உலக சிருஷ்டியை  உருவாக்கும்  சக்தி உடைய ஆதிசக்தியாக உருவாக்குகிறர் சிவன். பார்வதியாகிய நிலையில் சிருஷ்டியின் சக்தியை பார்வதியால்  இயலாது எனவேதான் சிவன் பார்வதியை ஆதிசக்தியாகிய ஆதிபராசக்தியாக  உருவக்கினார் சிவன். ஆதி சக்தியின் ஆசியுடன் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து அனல்பொறி உருவாகி அது அக்னிப் பிழம்பபாக, சிவன் கங்காதேவியிடம் கொடுத்துக் குளிர்விக்க அதனைக் கங்காதேவி  பூமாதேவியிடம் கொடுத்தார். அதுவே பூமியில்  ஆறு துண்டங்களாகிச்  சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலரில் ஆறு பாலகர்களாகின.

இந்த ஆறு குழந்தைகள் கிரித்திகா லோகத்துக் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்படுகின்றனர். கார்த்திகைப் பெண்களால்  அன்புடனும் பெருமையுடனும் சீராட்டித் தாலாட்டி  வளர்க்கப்படுகிறார் இந்த சிவமைந்தன் கார்த்திகேயன்.

ஆனால்  தாயாகிய ஆதிசக்தி தனது குழந்தையை நினைந்து கவலையுற்று சிவனிடம் வினவுகின்றார்.  சிவனும் ஆதிசக்தியின் கவலை போக்கக்  கார்த்திகை பெண்கள் மூலம் குழ்ந்தைகளை கொண்டுவந்து தாயாகிய ஆதிசக்தியிடம்  காட்டுகின்றனர். தாயாகிய ஆதிசக்தி அக்குழந்தைகளை ஒன்றாக அணைக்க ஆறு குழ்ந்தைகளும் ஒருகுழந்தை ஆகின. அக்குழந்தையே ஆறுமுகனாகியது அதற்கு சிவன், குகன் என பெயரிட்டார்.  கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டமையால்  கார்த்திகேயன் எனவும் அழைக்கப்படுவார் எனக் கூறினார். எனவே  குமரக் கடவுளுக்கு ஆதிசக்தி, கங்காதேவி, பூமாதேவி, ஆறு கார்த்திகைப் பெண்களென  ஒன்பது தேவியர் தாயாகினர்.

இந்தக் குமரக்கடவுள்  தேவர் குறை தீர்க்க ஆதிசக்தியால் தோற்றுவிக்கப்பட்டவர். எல்லா சிருஷ்டியுமே ஏதாவது காரணத்துக்காகவே உருவக்கப்படுகின்றது. பஞ்ச பூதங்களுக்கும் சிவனே அதிபதி .இயற்கையின் படைப்பு பஞ்ச பூதங்களின் கலவையாக உள்ளது. இயற்கை பஞ்ச பூதங்களாகிய நிலம் நீர் காற்று ஆகாயம் அக்னி  என  ஐந்தும் சமநிலையில் இருக்கும். இதில் ஏதாவது குறைவு எற்பட்டாலும் சமநிலை பாதிக்கும். இயற்கையின் சிருஷ்டி பஞ்ச பூதங்களை கடந்து எதுவும் இல்லை.

குமாரக் கடவுள்  கார்த்திகேயனுக்குச் சிவனின் ஆணைப்படி நந்தியெம் பெருமானால் யுத்தக்கலை போதிக்கப்படுகிறது. ஆதிசக்தியானவர் மகனின் யுத்த பயிற்சியின் திறமை கண்டு பெருமை அடைகிறார். மகனின் ஆற்றலில்  திருப்தியுற்றுத்  தேவர்களைத் தாரகாசூரனின் பிடியிலிருந்து காக்க ஆசி வழங்குகிறார். குமார கடவுளுக்கு  சொர்க்க லோகத்தை அசுரர் பிடியிலிருந்து விடுவிக்க குமரக்கடவுள் யுத்தத்துக்கு தயார் ஆகின்றார்.
யுத்தத்துக்கு தயாரான கார்த்திகேயனுக்குச்  சிவனின் ஆச்சாரியர்களால்  தேவசேனாதிபதி பட்டம் கட்டப்படுகிறது சிவச்சாரியர்களால் அபிசேகம் செய்து முடி சூட்டப்படுகிறது.  பின்னர் பிரமனால் தண்டாயுதமும், சிவனால் படைக்கலமும், விஷ்ணுவால் மணிமுடி கவசங்களும்  கொடுக்கப்படுகிறது தேவேந்திரனால் மயில் வாகனமும் அளிக்கப்படுகிறது.

வேல் ஆற்றலின் இருப்பிடம். இதனை ஆதிசக்தி அன்னை மைந்தன் கார்த்திகேயனுக்குக் கொடுத்து யுத்ததில் வெற்றி பெற  ஆசீர்வதிக்கிறர் தேவியின் வேலாயுதம் சக்தியும் ஆற்றலும் திறமையும் மிக்கது  தாரகாசூரனை வெல்வதற்குத் தேவகணங்களுடன் செல்லும் கார்த்திகேயனை  ஆசி வழங்கி அனுப்பிவைக்கிறார்.
உள்ளத்தினில் எழும் வினாக்களுக்கு விடை காணவும் சங்கடங்களுக்குரிய தீர்வையும் உன்னுள் இருக்கும் ஞானத்தால் உணரவேண்டும். யாரும் உனக்கு உதவ முடியாது என ஆசி வழங்கிக் கார்த்திகேயனை வெற்றியுடன் வரும்படி ஆசீர்வத்திது "விஜயீபவ" என ஆசி அருள்கிறார்  அன்னை ஆதிசக்தி.



திகட சக்கரச் செம்முகம் ஐந்துள்ளான்
சகடச் சக்கரத் தாமரை  நாயகன்
அகடச்சக்கர விண்மணி யாவுரை
விகட சக்கரன் மெய்பதம் பொற்றுவோன்



கேட்டவரம்மெல்லாம் தருபவன் குமரக்கடவுளென்ற அழகிய நெறியினையும் எமது கருணாநிதியாகிய  குமரக்கடவுளிடம் இராமலிங்க சுவாமிகள் பிரார்த்தனை  செய்து பாடியபாடல் இது


ஒருமைஉடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்கவேண்டும்
பெருநெறி பிடித் துழுக வேண்டும்
மதமான  பெய் பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாது இருக்கவேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதிவேண்டும்
நொயற்ற வாழ்வில்நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தக்கொட்டத்துள் வளர்
தலமோங்கும் கந்தவேளெ
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே


தமிழில் அமைந்த முருகன்
பேசும் தமிழில் சொல்லும் சொல்லில் தமிழ்  உள்ளது
அழகு தமிழிலில் முருகன் .உள்ளான் முத்தமிழ் இருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான்
முத்தமிழ் முருகன் அழகன். என்வே தான் எம் தமிழில் படிக்க படிக்க சுவைக்க ரசிக்க இனிமை தரும்
சங்க இலக்கியங்களை படிக்கவும் அதன் கருத்துக்களும் எந்நிலையிலும் இன்புற வைக்கும்
ஆறுமுகன் முகங்கள் ஆறு  அதுபோல் வல்லினம்  கசடதபற ,  மெல்லினம் ஞயஜநமன ,  இடையினம்  யறரவலழ என்பதாகும்.
உயிர் எழுத்து 12  மெய்யெழுத்து 18  .அதுபோல்  முருகன்  கரங்கள் பன்னிரண்டு  சிரங்கள் ஆறு  சேர்ந்து  18 ஆகின்றது
முருகன்  சிவனின் ஆறுவகை முகங்களான  ஈசானம் ., தற்புருடம் .,.அத்வதம் ., சாமவேதம்..,சத்தியாசோதம், 
அத்துடன்   இறைவனின் அதோமுகம்   ஆக  ஆறுமுகத்துடன்  சரவணபவனாக  உள்ளார்  சிவன்  நமசிவாயா எனும்  பஞ்சாட்சரம்  எனவும்   முருகன்   சடாச்சரம்   எனவும் அழைக்கப்படுகிறார்கள்
முருகன் எனும் பெயரில்  மு  மெல்லினம் ,  ரு   இடையினம்,  க வல்லினம், எனும் முத்தமிழில் முருகன் பெயர் அழகு பெறுகிறது
இறைவன் அருளால் கிடைத்த மானிடப்பிறவியை   ஞானமும்
கல்வியும் அமர்ந்த ஞான வாழ்க்கை வாழ்ந்து  தானமும்  தவமும் இயற்றி  சமுதாயம் சிறப்புற வாழ்பவனுக்கு
வானவர்  நாடு  வழிதிறந்திடுமே
வாழ்க்கை என்பது ஒரு பெரிய சுரங்கம் அதனுள் எத்தனை பெரிய  தத்துவங்கள் நிறைந்தது  எப்ப்டியும் வாழலாம் 
எனினும் மனித சமுதாயத்தவக்கு  பயன்பெற வாழ்ந்து     உழைத்து   சீர்திருத்தம் பெற உதவ வேண்டுவஅ
வாழும் மனிதனின்  கடமையாகும்

நவராத்திரி
நவராத்திரி      ஒரு   அம்மனை  வேண்டி    சைவ   மக்களால்   வணங்கப்படும்
விழாவாகும்.   இது    ஒன்பது   நாட்கள்   வழிபட்டு   கடைசி நாள்    விஜயதசமி
என   வழிபடுவர்
 

No comments:

Post a Comment