Saturday, September 14, 2013

கற்பகதரு

கற்பகதரு
பொதுவாக வினாயகர் இடம் சுழியாகதும்பிக்கை உடையவர் ஆனால் பிள்ளையார்பட்டி வினாயகர் வலம்சுழிதும்பிக்கை  உடைய வராக இருப்பர் இந்த வினாயகர் கண்களாலே காட்சம் கொடுப்பவர் எனவே தான் கற்பகவினாயகர் என  அழைக்கப்படுகிறார் கற்பகதரு போல் கேட்டவரம் எல்லாம் அளிப்பவராக இருக்கிறர். அவரை வணங்குபவர்க்கு அவரது கனிவும் தெஜசும் பக்தர்களுக்கு அருளுகிறார்
பிள்ளையார் பட்டி வினாயகர் கோயில் குடவரைக்கோயில் .மலையைக்குடைந்து பல்லவமன்னால் கட்டப்பட்டது. அழகிய சிற்பங்கள் கோபுரங்கள் மண்டபங்கள் தூண்கள் கொண்டு கட்டப்பட்டது வடக்கு நோக்கிய வினாயகராக அருள் பாலிக்கிறார்
மகாபாரதம் எனும் இதிகாசம் வேத வியாசர் சொல்லச் சொல்ல வினாயகரால் எழுதப்பட்டது வேத வியாசர் வினாயகரை மகா பாரதம் எழுதச் சொல்ல வினாயகர் ஒரு வேண்டுகொள் விடுத்தார் கதையை நிறுத்தாது சொல்ல வேண்டும் என்றும்  நிறுத்தினால் அத்துடன் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்றதற்கு வியாசர் எழுதும்போது பொருள் விளங்கி எழுதும்படி கூறினார். வினாயகரும் ஒப்புக்கொண்டு பொருள் விளங்க எடுக்கும் நேரத்தில் கதையை சிந்தித்து  தொடர்ந்துசொல்லி கதையை வினாயகர் எழுதி முடித்தார் என்பர்
இப்படி வினாயகர் கதை எழுதும்போது வினாயகரின் எழுதுகோல் முறிவடைந்தது எழுதுவது தடைப்படக்கூடாது என்று தனது தந்தங்களில் ஒன்றினை முறித்து எழுதுகோல் ஆக்கினார் வினாயகர்
  எனவேதான்  இன்றும் வினாயகரின் தந்தத்தில் ஒன்று முறிவடைந்த நிலையில் இருக்கிறது இப்படியாக வினாயகர் மகாபாரதக்கதையை எழுதி முடித்தார்
வினாயகருக்கு அனேக நாமங்கள் உண்டு  எனினும் பிள்ளையார் எனும் நாமம் பிரசித்தமானது எல்லோரலும் விரும்பப்படுவது எம் கூப்பிட்ட குரலுக்கு குழந்தைபோல் ஓடி வரும் தெய்வமாக பிள்ளையார் விள்ங்குகிறார்
சிறுவர் முதல் முதுமை அறிஞ்ர் வரை விரும்பும் தெய்வமாக ஆற்றங்கரை அரசமரம் வீதிகள்தோறும்  விரும்பும் இடமெல்லாம் அமர்ந்து அருள் பாலிக்கிறார் சிவ பார்வதி மைந்தன் கீர்த்தி தரும் தெய்வமாக எம்மால் பொற்றி வணங்கப் படுகிறார் 
புதுக்கோட்டைக்கும் காரைக்குடிக்கும் இடையில் பிள்ளையார் பட்டி கோயில் அமர்ந்துள்ளது
வினாயகரை வேழமுகத்தோன் கணங்களுக்கு தலைவன் ஆகையால் கணபதி விக்கினங்களை நீக்குவதால் விக்கிநேச்வரன் தும்பிகை உடையமையால் தும்பிகையோன் என போற்றப்படுகிறார்
வினாயகர் துயரங்களால் தவிக்கும் பக்தர்களுக்கு வழிகாட்டும் குருவாகி பக்தர்களின் பக்திக்கு வசப்படும் தெய்வமாகி விளஙுகுகிறார் .நாமும் வழிபட்டு வளமும் பல நலமும் பெற்று  வணங்குவோமாக

வினாயகர்  துதி

ஒம்   என்னும்  பிரணவரூப   நாயகா
உமையாளின்   பாலனே  வினாயகா

தேவர் மூவர்  போற்றும்  தேவ   நாயகா
தேவாதி     தே  வனே    வினாயகா

வல்வினைகள்     நீக்கும்      சக்தி   நாயகா
வேண்டும்   வரும்    தந்திடும்    வினாயகா

மோனத்தின்     முழுப்பொருளே     விநாயகா
முக்கண்ணன்   மைந்தனே    விநாயகா

No comments:

Post a Comment