Sunday, May 17, 2015

நுண் கலைகள்

நுண் கலைகள்


அழகுக்கலைகள்   கவின் கலைகள்,  எல்லாம் நுண்கலைகளை குறிக்கும்
 அழகுக் கலையை விரும்பும் மனிதனை  அறிவு நிரம்பியவனாகவும்  , அறிவும்  நுண் அறிவும் கொண்டவனாகவும்   கூறுவர்.  அழகுக் கலைகள் மனித நாகரீகத்தின் பண்பாடாக விளங்குகிறது

கவின் கலைகள்  அழகு இன்பம்  தருவதாகவும்  கற்பனை  வளத்தை கூட்டுவதாகவும்  இருக்கிறது.  இந்த கவின் கலையானது  நாட்டுக்கு நாடு வேறுபடும். அந்த நாடுகளின் தட்ப வெப்பநிலை ,இயற்கை,  பழக்க வழக்கங்கள்,  மொழி இயல்பு, சமயக்கொள்கைகள்,சுற்றுப்புற இயல்பு  என்பனவற்றுக்கு ஏற்ற மாதிரி வேறுபடுகிறது
இதனால்தான்  பரதநாட்டுக்கலைகள் ,ஏனைய  சீன  ஜப்பான்  ,கிரேக்க ரோம் நாட்டு  கலைகள்  வேறுபட்டுக் காண்கின்றது .  ஆனால் எல்லா நாட்டுக்கலைகளும்  இன்பமும்  வியப்பினையும்  ,மகிழ்ச்சியினயும் தருகிறது.


அழகுக்கலைகளை  ஐந்து பிரிவுகளாக கூறலாம்.  கட்டிட கலை , ஓவியக் கலை, இசைக்கலை,  காவியக்கலை. கவின் கலையை கண்ணால் கண்டும் காதால் கேட்டும், மனதால்  உணர்ந்து கற்பனை உலகில் பறக்கவும்  செய்து மன உணர்வுகளை  தூண்டி மகிழ்ச்சிப்படுத்தும்.


உணவிலே எப்படி சத்துவ   ராஜச   தாமச  குண  உணவுகள்  மனித உணர்வுகளை  பாதிக்கின்றதோ அதுபோல 
கவின் கலைகளும்  மனிதமனங்களை   பாதிப்புக்கு உள்ளாக்கின்றது.



பழங்காலத்தில் தமிழை மூன்று பிரிவுகளாகப் வகுத்தார்கள்


இயல் இசை நாடகம்  என  முத்தமிழை    பிரிவுகளாகக்   கொண்டார்கள் தமிழ்நாட்டை  ஆண்ட அரசர் களும்  மூவெந்தர்கள்  எனெ சேர சோழ பாண்டியர்கள்.   தமிழ்  இயல் இசை நாடகம்    எனெ மூன்று பிரிவுகளாலேதான் இதனை முத்தமிழ் எனெ  கொண்டனர்.  இயற்றமிழ்  என்பது  காவியக்கலை  ஆகும்  இசைத்தமிழ் என்பது  இசைக்கலை   யாழ் குழல் முழவு  தாளங்கள் இணைந்து  செயல் படுவது ஆகும்.  நாடகத்தமிழ்  என்பது நாடகம்   நாடகத்தில்  நடிகர்கள் நடித்து  கண்ணால் பார்த்து ரசிப்பது ஆகும்

இயல் இசை நாடகம்  மூன்றும் இணைந்து  எழுதப்பட்ட காவியம் சிலப்பதிகாரம், இதனால்  சிலபதிகாரத்தை   முத்தமிழ் காவியம் என்பர்.
கவின் கலைகளை தமிநாட்டிலும் பாரத தேசம் எங்கும்  மக்கள் வளர்ப்பதில்  கற்பதில்  பெரும்  இன்பம் அடை கிறார்கள்..  உலக நாடுகளிலும்  அவரவர்க்குரிய  பண்பாட்டு கலைகளை  கொண்டாடி  இன்புறுகிறார்கள்.

 இந்த அழகுக்கலை கலை   நாமே பயில்வதாலும்  அல்லது கண்டு கேட்டு ரசிப்பதாலும்  மகிழலாம்.


எல்லாரும் எல்லாக்கலை கலையும் கற்க முடியாது.  எதாவது  ஒருகலையினை  ஆர்வம் காட்டி  அதனை வளர்த்துக்கொள்ளலாம்.,.இந்த கவின் கலைகள்  வாழ்வின்  வாழ்க்கை முறையை  பண்படுத்தும்  இன்பம் தரும்  .





நுண்கலைகள்    கட்டிடக் கலை , சிற்பக்கலை , ஓவியக்கலை, இசைக்கலை,  காவியக்கலை  என  ஐந்து வகை. 
கட்டிட கலை   என்பது  கண்ணால் கண்டு இன்புற  வைப்பது .  கோயில்கள் மாடமாளிகைகள்   அரச மாளிகைகள் 



 இக் கட்டிடங்கள்  உயர்ந்தும்  மிகப்பெரியதாகவும் இருப்பதனால்   கட்டிடங்களை மிக அருகில் இருந்து  முழு அமைப்பையும் கண்ணால் பார்க்கமுடியாது. எனவே  இக் கட்டிடங்கலை மிக தூரத்திலிருந்துதான்  கண்டு ரசிக்க வேண்டும்



சிற்பக்கலையானது   கட்டிட கலையை விட நுட்பமானது. கல் மண்  மரம் உலோகங்களினால் வடிவமைக்கப்படுகிறது. கற்பனையாக   அமைக்கப்பட்ட உருவங்களை  அமைப்பது ஆகும்   சிற்பக்கலையை  கண்ணால் கண்டு மகிழக் கூடியது



ஓவியக்கலை  சிற்பக்கலையை விட நுட்பமானது . கண்ணால் காணக்கூடிய உருவங்களையும் கண்ணால் காணமுடியாத  கற்பனை காட்சிகளையும்   பலவித நிறங்களால் இயற்கை அழகுடன்  வரையப்படுகின்றவை




முற்காலத்தில் இந்த ஓவியங்கலை  சுவர்கள்  பலகைகள்  துணிகளில்   வரையப்பட்டன .  படம் எனும் சொல் படாம் எனும் சொல்லில் இருந்து வந்தது படாம் என்பது துணியைக்குறிக்கும்  .  ஓவியக்கலையை அருகிலே இருந்து  கண்டு மகிழ முடியும்



அடுத்து  இசைக்கலை  இதனை கண்ணால் காணமுடியாது.  காதினால் கேட்டு இன்புறுவது.  காலத்துக்கு கால்ம் கலைகளின்  வளர்ச்சி மாறும்.  பல்லவ அரச காலத்தில் சிற்பக்கலை மிக வளர்ச்சிஅடைந்தது.
முகலாயர் காலத்தில் கட்டிட கலை  வளர்ச்சி யடைந்தது.  இசைக்கலை காலத்துக்கு காலம் வளர்ச்சி வேறுபடும் இசை வாய் பாடல்களாகவும் இசைக்கருவிகளூடா கவும்   பரவியது இசைக்கருவிகளும் துளைக்கருவி தந்திக்கருவி கோட்டுவாத்தியம்  என பலதரப்பட்ட கருவிகள் இசைக்கலை வளர  பெரும் பங்கு வகித்தன



யாழும் குழலும்  கெட்பதற்கு இனிமையானவை .திருவள்ளுவர்  ஒரு குறலெ எழுதிஉள்ளார்
யாழ் இனிது குழல் இனிது  என்பதம் மக்கள்
மழ்லைச்சொல் கேளாதவர் .  என
பேருண்மை மழலை சொல்லை விட பெரிய இனிமையான  இசை கிடையாது


வயலின் வீணா  ,குழல் என கருவிகள் இசையை மேலும்  அழகாக்கின்றன.இசையானது  நடனம் நாட்டியம்  கூத்து 
 இவைகளுடன்  கண்டு கேட்டு  மகிழ உதவுவன.


அடுத்து  காவியக்கலை  இது ஏனைய கலைகளை விட  மிக நுட்பமானது.  இதனை மனதால்  பொருளை உணர்ந்து ரசிக்கக்கூடியது.காவியமும் நாடகமும் ஒருங்கு இணையும் போது  காவியக்கலையை  மகிழ்கிறோம்
கவின் கலைகளை  கண்டும் கேட்டும் ரசிக்ககூடியன.இதனை எல்லோரும் ரசித்து வளர்க்க  முனைவோம்.

Friday, March 13, 2015

சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்தம்

  
  நான்கு வேதங்களின்  முடிந்தமுடிவு  சைவ சித்தாந்தம்.  தமிழர்களின்  அதி உன்னத  படைப்பு.  இதில்  வேத உண்மைகளும்   ஆகம  உண்மைகளும்  கலந்திருக்கிறது.  மும் மலங்களான  பதி  ---கடவுள்,   பசு ----ஆத்மா
பாசம்----இறப்பு பிறப்பு  என   பதி பசு பாசம்   இவை மூன்றும்  சைவ சித்தாந்தங்களின்   அடிப்படையாகும்.
 சந்தான குரவர்கள்  சைவசித்தாந்த மரபினை    மார்க்கத்தினை  நன்கு  சைவ மக்களின் இடையே  பரப்பினர்

மெய்கண்ட  சிவாச்சாரியார்  ---------சிவஞான  போதம்
அருணத்தி  சிவச்சாரியார்  -----------சிவஞான சித்தியார்
மனவாசகங்கடந்தாரின்   --------- உண்மைவிளக்கம்
உமாபதி  சிவாச்சாரியார்------ஸ்சிவப்பிரகாசம்
திருத்தொண்டர்  புராண  சாரம்  .திருவருட் பயன்  ,வினா வெண்பா,  போற்றிப் பஃடை
முதலிய நூல்கள்  சைவ சிந்தாந்தம் பற்றி கூறுவன
இவர்களைவிட  மறைஞான  சம்பந்தர்,  பட்டினதடிகள்,  சிவஞான முனிவர்,  மாசிலாமணி தேசிகர்,  ஞான பிரகாச சுவாமிகள்,  குமர குரூபர சுவாமிகள்.  சிவசிந்தாந்த கருத்துக்களை   சமய உலகுக்கு  அளித்த  பெரு மகன்களா

இந்து சமயம்  உலகிற்கு  ஆத்ம   தத்துவங்களை   அதாவது ஆன்மா பற்றியும் ஆன்ம ஈடேற்றம் பற்றியும்   உலகிற்கு வழங்கியது
இந்து என்ற சொல்  இந்துவெளி   நதிக்கரையில்  வாழ்ந்த மக்களின்  நாகரீகத்தை  கூறியது 
1921,ல்  சிந்துனதி தீரத்தில்  மொகந்தன்சதாரோ   ஆரய்ச்சியில்  பசுபதி  எனும் யோகத்தில் அமர்ந்த  வடிவத்தினை கண்டனர்  .  இது 6000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வரலாற்றினையும்  பண்பாட்டினையும்   விபரிக்கின்றனர்


            
சிவனை வழிபடுபவர்கள்   சைவர் எனவும் விஷ்னுவை வழிபடுபவர்கள்  வைஷ்னவர்கள்  சக்தியை வழிபடுபவர் சாக்தர்கள்   குமரனனை வழிபடுபவர் கௌமாரர்  எனவும் கூறுவர்
பன்னிரு திருமுறைகள்   சைவசமயத்தின் பாடல்கல்களாகும்  .  திருமூலர்  எழுதிய  திருமந்திரம்  வடமொழியில் காணப்பட்ட  அரிய கருத்துக்களை  தமிழில் கொண்டுவந்தனர்    இவரதுகாலம் 3000  ஆண்டுகளுக்கு  முற்பட்டது
சமய குரவர்கள்  திருமுறைகளைப்பாடிஉள்ளனர்  

Thursday, March 12, 2015

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள்

சங்க நூல்கள்  .
 திருக்குறள்   ,இதிகாசங்கள்  ,ஐம்பெரும் காப்பியங்கள்,  பன்னிரு திருமுறைகள்  திரு மந்திரம்.எனெ பலவகை நூல்கள்  எம் தமிழ்  சமுதாயத்தில் உண்டு. இவை இன்றும்  வழிப்படுத்தும் நூல்கள்.  பல்வேறுபட்ட  அறிஞர்கள்  .புலவர்கள்.,பண்டிதர்கள் வித்துவான்கள், பெரும் பங்கு ஆற்றிஉள்ளனர்.  இதனைவிட இசைத்தமிழ்  எனும் வடிவம் உண்டு.  தற்போதை  தலை முறைகள்   நுனிப்புல் மேய்வது போல்  சங்க இலக்கியங்களை தொட்டுச் செல் கின்றனர்.
இவை  பெரிய அளவில் நடைமுறைக்கு வந்தால்  சமுதாயத்தில்   பல பாரிய மாற்றங்கள்   வரும் எனலாம்


  ஐம்பெருங்காப்பியங்கள்

 சிலப்பதிகாரம்
 மணி மேகலை
 சீவக சிந்தாமணி
 வளையாபதி
 குண்டலகேசி


   மனித வாழ்வுக்கு   பொழுது பொக்கு அம்சங்கள்   அவசியமானது.  அவை மனித மனங்களை  ஆரொக்கியப்படுத்த வேண்டும்   வாழ்வில் உடல் ஆரோக்கியதைவிட மன ஆரொக்கியம்  மிக முக்கியமானது.
 சங்க இலக்கியங்கள்    கூறும்  கவிதைகள்    நாட்டு பாடல்கள்  நாடகங்கள்   மனித மனங்களை  ஓரளவு  வழிப்படுத்தின .  ஆனால்  இன்று  கற்பனை  வளங்கள்   சில சிறுமைப்படுத்தப்படுகின்றன
 கோவிலில்   கற்பகிரகத்துக்கு   திரையிட்டு   அலங்காரங்கள்  முடிந்து  பின்னர்தான்   பூஜைகள்   ஆரத்திகள்  நடைபெறுகின்ரன.  ஆனால் இன்றைய  வாழ்வுமுறைகளில்  எல்லா  காரியங்களுக்கும்  வெளிப்படையாகவே  சபையில்  காட்டப்படுகின்றன  .  பேசப்படுகின்றன  ஒரு வயது முதல்  எல்லாவயதினரும்  ஒரேசம்பவம் செயல்களை  வயது வேறு பாடு  இல்லாது   அறியப்படுகிறார்கள்.  இதனால்   நல்லது கெட்டது சரி பிழை  புரியாது  மனித சமுதாயம்  திணறுகின்றது.  எனவே  தற்காலத்துக்கு   சங்ககால   வாழ்வியல்  அறம் அன்பு   சரிபிழை  புரிந்துணர்வு  .தற்கால  வாழ்வுக்கு  வழிகாட்டியாக  உதவ வேண்டும்  . இது ஆரொக்கியமான சமுதாய வளர்ச்சிக்கு   அவ்சியமாகிறது 


உலகில்  தக்கன தகாதன   என செயல்கள் உண்டு.   சில விடயங்கள்  நேரடியாக கூறாது  நாகரீகம் கருதி  பொருள் படக் கூறுவது உண்டு.சில விடயங்கள் மறைக்க வேண்டும்  நான்கு சுவருக்குள்  நடப்பது என்பார்களே  அது போல.  எல்லாருக்கும் எல்லாம் தெரியும். எனினும்  நாகரீகமாக  பேசவும்  வெளிப்படைத்தன்மை  தேவைக்கேற்ப  சொல்வது கருதுவது  உண்டு.
கற்காலங்களில்  மனிதசமுதாயம்  நாகரீகம்  மனித மேம்பாடு தெரியாத நாட்களில்  வெளிப்படைத்தன்மை   கடைப்பிடித்தனர்
இன்று  மக்கள்  நாகரீகம்  அறிவு  விஞ்ஞானம்  தொழில் நுட்பம்  என பேரறிவு பெற்று விட்டார்கள்   எனவே  கற்கால நடவடிக்கை  தற்காலத்துக்கு அவசியம் இல்லை.  ஆரோக்கியமான சமுதாயத்துக்கு  நன்மையும் இல்லை
கற்காலங்களில்  தப்பு என கருதும்  விடயங்கள்   ஒரு குறிப்பிட்ட பகுதியை  அல்லது  குறிப்பிட்ட  பிரதேசத்ததை  பாதிக்கும்
ஆனால் இன்று   டெலிவிசன்   இன்டெர்னெற்  என  குளோபலைசேசன்  என உலகம்   வளர்ச்சியடைந்துவிட்டது
எனவே  மனிதசமுதாயத்தை  பாதிக்கும் அல்லது  அவசியமற்ற  ,  பாதிப்புக்கு உள்ளாக்கும்  விடயங்களை  களைந்து   அடுத்தபடிக்கு  எப்படி  கொண்டு செல்லலாம் என  கருதலாம். 
தற்கால  வசதிகள்  வாய்ப்புகள்  அறிவுகளை  எப்படி வளப்படுத்தலாம்  எனும் யோசிக்கும் காலம்  வந்துவிட்டது.
இன்னிலை வந்தால்  மனித சமுதாயம்  உயர்நிலை நோக்கி  செல்லும்



 சங்க இலக்கியங்கள்   பண்டைய காலத்தில்  மனித சமுதாய    வளர்ச்சியில்  பெரும் பங்கு உடையது
அதில் காணப்படும்  கவிதைகள்  கலை  வெளிப்பாடுகள்,  சொற்சுவை பொருள்சுவை  கவிநயம்    மனித வாழ்க்கையின்  
நன்மைகள் தீமைகள்   ,அறிவுறைகள்  இன்றும் போற்றலுக்குரியவை. 
சங்கநூலகள்   ஐம்பெரும் காப்பியங்கள்   இதிகாசங்கள்  ,அறவழிகள்  அறநூல்கள், ஆன்மீக வழிமுறைகள்  தற்காலத்திலும் கடைபிடிக்க வேண்டியன.
 தற்கால தொழில் நுட்பங்கள்  வளர்ச்சிகளும்  ஏற்றவைதான்  எனினும்  தற்போதைய வளர்ச்சிகள்  வாழ்வுக்கு உதவ வேண்டுமே தவிர  அவை  வாழ்க்கை அல்ல
சங்க நூல்கள்  வாழ்வுமுறைகளையும்   வாழவேண்டிய  நோக்கங்களையும்   கூறுவன 
தற்கால விஞ்ஞான   வசதிகள்    கருவிகள்  வாழ்வின் செயல் பாடுகளை  இலகுவாக்குவன.  வாழும்  முறைகளையும் 
வாழ்வின் நோக்கங்களையும்   போதிக்க மாட்டா
வாழ்வுக்கு கருவி முக்கியமில்லை  .  வாழ்வின் நோக்கமும் வாழு முறைகலும்  .,  மனித நாகரீக செயல் பாடுகளும் 
  பேசும் விதங்களும்  , பிற மனிதனிடம்  பழகும் பண்பாடும்  கூறுவதற்ற்கு சங்க இலக்கியங்கள்   வழிகாட்டிகள்
தீமைகள் தீயது  ,  தேவைஅற்றது எவையென  பகுத்து ஆராயும்  அறிவினை போதிப்பது  சங்க இலக்கியங்கள் 
அவை நம்ம் முன்னோர்  வகுத்து தந்த  பொக்கிசம்.  இவற்றின் வழிகாட்டலுடன் தற்கால வசதி  ,அறிவையும்  சேர்த்து 
மனித நாகரீகம்  மேம்பாடு அடைந்தால்  தற்காலம் சிறக்கும்.
சங்கநூல்களின்  வழிமுறைகள்  தற்காலத்தில்  பாவனைக்கு  கொண்டுவர  இன்றைய  அறிவாளர்கள்  வழிகாட்டி  எம்மால் ஆன பங்கினை   செலுத்துவது அவசியம்
சந்க காலத்திலும்  பொழுது போக்கு அம்சங்கள்   உண்டு.  ஆனால் மனித  மனங்களை  பாதிக்காது அப்படி பாதித்தாலும்   ஒரு சிறு பகுதியை அல்லதுசிறு பிரதேசத்தைத்தான்  பாதிக்கும்  ஆனால் இன்று  வாழ்க்கையுடன்   சேர்ந்து   சாப்பாடு போல்  பொழுது போக்கு  அமைந்து விட்டது  தேவைக்கு  பாவிப்பது போலன்றி  தேவை இல்லாதும்  வாழ்வின் ஒரு   பகுதி ஆகிவிட்டது
எனவேதான்   வசதி  வாய்ப்புகளை   வாழ்வின் மேம்பாட்டுக்கு   ஏற்ப  நெறிப்படுத்தி  வளப்படுத்த  சந்க இலக்கியங்கள்   துணைபோக உதவும் எனலாம்




சங்கப் பாடல்


  சிறு வெள்ளாம்பல் சிரித்தது
____________________________________


சூளாமணி காவியத்தை இயற்றிய  தோலாமொழித்தேவர்  செஞ்சொற் புலவர் இயற்றிய ஒரு செய்யுள்


காதலர் அகன்ற போழ்தில்  கற்புடை  மகளிர்போலப்
போதெல்லாங் குவிந்த  பொய்கைத் தாமரை  பொலிவு நீங்க
மீதிலாந் திகிரி வெய்யோன் மறைதலும் சிருவெள்ளாம்பல்
தாதெலாம் மலர நக்குத் தம்மையே மிகுந்த வன்றே


மலர்கள்  பூத்தன என்று  சொல்லோவியம்  தீட்டுகின்றார்   தோலாமொழிப்புலவர்

குளிர்ந்த  நீருள்ள  பொய்கையிலே  தாமரைக் கொடிகளும்  ஆம்பற் கொடிகளும்  படர்ந்து  தாமரைப்பூக்களையும்  ஆம்பற்பூக்களையும்  ஏந்தி நிற்கின்றன  ஆனால்  தாமரைப் பூக்கள்  பகலில் மலர்ந்து  மாலை நேரத்தில்  மூடிக் குவிகின்றன
ஆம்பற்பூக்கள்  மாலை நேரத்தில்  மலர்ந்து  சிரிக்கின்றன  இதனை  புலவர் பெருமான் கூறுகிறார்  காதலனுடன்  மகிழ்ந்திருக்கும்  காதலி  ,காதலனை பிரிந்தபோது  முகம் வாடுகிறாள் .அவளுடைய  முகவாட்டத்தைக் கண்டு  சிறுமனம்  படைத்தோர்  சிரிப்பதுபோல்  சூரியன்  மறைந்தபோது இதழ் குவித்த  தாமரை பூக்களைப்பார்த்து  சிரிப்பதுபோல  வெள்ளாம்பல்  மலர் சிரிப்பதாக உவமை கூறுகிறார்  இவ்வகையான பல பல பாடல்கள்  சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன 




  அங்கொளி விசும்பில் தோன்றும்
               அந்திவான்  அகட்டுக்  கொண்ட
 திங்களங் குழவிப்  பால்வாய்
            தீங்கதிர்  அமுதம்  மாந்தித்
 தங்கொளி விரித்த ஆம்பல்,
                தாமரை  குவிந்த  ஆங்கே
  எங்குளார் உலகில்   யார்க்கும்
               ஒருவராய்   இனிய  நீர் ஆர்

தோலாமொழித்தேவர்   முன்பு கூறிய  தாமரைக்குளத்தின்  அழகுக்கு  அழகு  செய்வதாய்  மாலை நேர  இயற்கைக்காட்சியினை   கண்டு ரசிக்கிறார்.  அங்கு கண்ட  வெண்னிலவினை  பார்த்து கேட்கிறார்  எப்படி உலகில் உள்ள  யாவர்க்கும்   விரும்பக்கூடிய  கவிகளின்  இன்பத்துக்கு உரியவராய்  உள்ள நீர் யார்  எனெக் கேட்கிறார்  இது அவர்  தீட்டிய  அழகான  சொல்லோவியம்.


  மாலை நேரத்தில்  சூரியன்  மறைந்தவுடன்  குளத்தில் உள்ள  தாமரை  பூக்கள் இதழ் குவிகின்றன  தாமரைப்பூக்களுக்கு  சூரியன் மறைந்தது   சோகமானது.  அதேநேரத்தில்  ஆம்பல்  மலர்  மொட்டுக்கள்  இதழ் விரித்து  சிரிக்கின்றன.  ஏனெனில்  வானவெளியில்  வெண்ணிலவு  உதிக்கின்றது.  கவிஞர் போல்  இந்த ஆம்பலும்  மகிழ்வுடன்  வெண்ணிலவினை  வரவேற்று மகிழ்கின்றது  இந்த அழகான  மாலைநேர  இயற்கை காட்சியின்  மூலம்   உலகியல் உண்மையுடன்  இயற்கையை  வியந்து ரசிக்கிறார்  .இது  இக்கவிஞன் என்ன ரசிகன் எனத்தோன்றுகிறது
இங்கு  வெண்ணிலவுக்கு  எப்படி  உல்கில்  உள்ள  எல்லாருக்கும்  இனிய ஒருவராய்  இருக்கமுடிகிறது நீர் யார் என  வினவுகிறார்  .  என்ன  கற்பனை  என்ன அழகு உணர்ச்சி

  மாலை  நேர பெண்ணின் நிலமையை   சீத்தலை சாத்தனார் எனும் புலவர்  விளக்குவது

" அமரக மருங்கில்  கணவனை  இழந்து 
  தமரகம்  புகூம்  ஒரு மகள்   போலக்
  கதிராற்றுப்படுத்த  முதுராத்துன்பம்மொடு
  அந்தி என்னும்  பசலை  மெய்யாட்டி
  வந்திருந்தனளால்  மானகர்  மருங்கென் ''


இந்த மாலைநேரக் காட்சியினை   சீத்தலைச்சாத்தனார்  எனும் புலவர்  துயரத்தோடு  கற்பனை செய் கின்றார்.
மாலை நேரம்  .  சூரியன்  மேற்கே  சென்று மறை கின்றான்.  அந்தநேரம்    வானமானது  சிவந்து  செவ்வானமாக   பரந்து  விரிகின்றது.  இதனை   போர்களத்தில்  செவ்விரத்தம்  படிந்து காணப்படுவதுபோல  தோன்று கின்றது.சூரியன்  மெல்ல மெல்ல  மேற்கே  மறைகின்றான்.  காரிருள்  ஊருக்குள்  சூழ்ந்தது.போர்களம் போல  காணப்பட்ட  செவ்வானம்  மறைந்தது  கருநிற போர்வை போர்த்துபோல்  இருள் சூழ்ந்தது. இதனைப்பார்க்கும் போது  போற்களத்திலே  தனது கணவனாகிய  சூரியனை  இழந்து விட்ட  பெண் ஒருத்தி  துயரத்தோடு  தாய்வீடு  திரும்பியது  போல கற்பனை செய்கின்றார்  புலவர்
ஒரே மாலைநேரம்  ஒரேஇயற்கை  காட்சி  .  உலகில்  இயற்கையின்  அழகு   மனித மனங்களை  பல்வேறு  மனப்பாங்கினை  நவரசங்களை    உணர காட்சிப்படுத்துகிறது 

_____________________________________________________________________

நெல்  வயலின்  காட்சியினை  காவியக்கலைஞர்  திருத்தக்க தேவர்  கண்டபோது   அவர் மனதில்  தோன்றியது.
கல்விசேர்  மாந்தர்  பெருமையினை கூறுவது போல்  திருத்தக்க தேவர் மனதில்  அக் காட்சி புலப்படுகிறது


" சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம் போல்
  மெல்லவே  கருவிருந் தீன்று,  மேலலார்
 செல்வமே  போல்  தலை  நிறுவித்,  தேர்ந்த நூல் 
கல்வி  சேர்  மாந்தரின்  இறைஞ்சிக்  காய்த்தவே"


கருக்கொண்ட  நெற்பயிர்  கதிர் வெளிப்பாடாதிருக்கும்  நிலையில்  சூல் கொண்ட  பச்சை பாம்பின்  தோற்றம்  போல்  காணப்படுகிறது.  கதிர் வெளிப்பட்டு  பூத்து  தலை நிமிர்ந்து  இருப்பதும்  காற்றில் சுழன்றாடுவதும்  அறிவில்லாத கீழ் மக்கள்  சிறிது  செல்வம் கிடைத்தவுடன்  பிறரை மதிக்காமல்  இறுமாந்து  தலை கால் புரியாது   வாழ்வது போன்றது  மணி முற்றின  நெற்கதிர்கள்  சாய்ந்து நிற்கும் காட்சியானது   கற்றறிந்த மக்கள்  அறிஞர்கள்  அடக்கமாக  பொறுமையாக   வாழ்வது போலாகும்  என திருத்தக்க தேவர்  அழகும் இனிமையும்  கூடிய உண்மையை கூறுவதுபோல்   வயல் காட்சியினை அவர்  சொல் ஓவியமாக   பாடியுள்ளார் 
இயற்கையையும்  வாழ்க்கையையும்  கவிஞர்  அழகுற பாடிஉள்ளமை  மிக அழகான சொல்லோவியம்





இளமையை   தேடுவதுபோல்  ஒரு  காட்சியினை  கவிஞர் ஒருவர்  அழகாக
பாடுகிரார்


"  கம்பித்த காலன்  கோலன்
                கையன கறங்கு  தண்டன்
  கம்பித்த சொல்லன்   மெய்யைக்
                   கரையழி நரையுஞ் சூடி
  வெம்பித்  தன் இளமை  மண்மேல்
                     விழுந்தது  தேடு  வான்போல்
  செம்பிற் சும்பிளித்த  கண்ணன் 
                     சிரங்கலித் திரங்கிச் செல்வான்




முதிய கிழவர்   குனிந்த  உடம்பும்  திரைத்த தோலும்  நரைத்த தலையினையும்  உடையவாராக காட்
சி அளிக்கின்றார் அவரது கால் கைகள் நடுங்கு கின்றன அவரால் நிமிர்ந்து நடக்க முடிய வில்லை. கையில் கோல் ஊன்றி  வளைந்த  முதுகோடு  குனிந்து தரையை பார்த்தவண்ணம்  நடக்கின்றார். அவர் தரையில் எதனையோ தேடுவதுபோல் நமக்கு தெரிகிறது.அந்த முதியவர் எதனை தேடுகிறார் எனெ  எமக்கு புரியவில்லை.
ஆனால் கவிஞருக்குமட்டும்  அவர் எதனை தேடுகிறார்  என்பது புரிகின்றது
முதியவர்  தள்ளாடி குனிந்து  தரையில்  தனது விழுந்துபோன இளமைப் பருவத்தை  தேடுகிறார் எனெ கவிஞர்  கூறும் விளாக்கம்  ரசிக்கும் படியாயும் கற்பனை திரனையும்  சுவையாக சொல்லோவியமாக  தருகிறார் கவிஞர்






பாலை பாடிய  பெருங்கடுங்கோ  இவர் சேர மன்னர்  குலத்தவர்.  வரண்ட நிலத்தை பற்றி பாடுகிறார்  கலித்தொகையில்  பலை நிலத்தின்  வரட்சியினை மனித மனங்களுடன்   இணைத்து  உலகியல் உண்மைகளை  பாடலாகப் பாடிஉள்ளார்  . பாலை நிலத்தில் பட்டுப் போன மரத்தின் தன்மையை  பாடுகிறார்




 "  வறியவன் இளமைபோல்  வாடிய சினையவாய்ச்
   சிறியவன் செல்வம் போல்  சேர்ந்தாற்க்கு நிழலின்றி
   யார்கண்ணும்  இகந்து செய்து இசைகெட்டான்  இறுதிபோல்
   வேரோடு மரம் வெம்ப  விரிகதிர் தெருதலின்
   அலவுற்றச் குடிகூவ ஆறின்றி  பொருள்  வெக்கிக்
  கொலைஅஞ்சா  வினைவரால் கோல் கொடியவன் நிழல்
  உலகுபோல் உலரிய உயர் மர வெஞ்சுரம்''



பட்டுபோனமரத்தினை கண்டதும்  கவிஞரின்  மனதில் ஓடும்  எண்ண அலைகள் 
  பாலை வனத்தில்  வெப்பம்   காரண்மாக  மரங்கள் காய்ந்து கிடக்கின்றது.  இலைகள் கருகி உள்ளன.  மரத்தின்கீழ்  நிழல் இல்லை
இதனை  செய்யுள்ளாக  வெளிப்படுத்துகிறார்  வறுமை யுள்ளவன்  பொருள் இல்லாது  இன்பம் நுகர முடிய வில்லை
அதுபோல்  மரம் கருகி கிடக்கின்றது .  வறிய மனம் உள்ளவன்  தனது செல்வத்தை  பிறற்கு கொடுக்காது   இருப்பதுபோல் உள்ளது.
கொடுங்கோல் ஆட்சியின் கீழ்  மக்கள்  வாழ வழியில்லாது  வாடி இருப்பதுபோல்  பட்டமரங்கள் பாலை வனத்தில் காணப்படுகின்றது. இதுபோல் புலவருக்கு  பாலை நிலத்தின் தன்மையை   பாடுகிறார் 


______________________________________________________________________


மணமில்லா பூக்களும் குணமில்லா செல்வந்தர்களும்   கொண்ட ஒத்த இயல்பினை  தோலா மொழித்தேவர் எனும் புலவர் தனது சூளாமணி எனும் நூலில்  காவியமாக பாடிஉள்ளார்.
வேனில் காலத்தில்  அரண்மனை பூஞ்சோலையில்  கோங்கிலவம் பூக்கள்
  பூத்தன மற்ற எல்லாபூக்களிலும்  நன்கு அழகாகவும் கண்கவர் நிறத்திலும் பூத்திருந்தன.அதனை பார்த்த அரண்மனை  பணிப்பெண்   அரண் மனையில் அதனை பற்றி  கூறுகிறார்  பொன்னிறமுள்ள  கொங்கு மலர்  கண்ணை கவரும் அழகும்  தங்கந்தான் கோங்காக பூத்ததோ எனெத் தோன்றுகிறது .இந்த மலர்  அழகாகவும்  எழிலாயும்  காணப்பட்டாலும்  மணமில்லையே மணமும் இருந்தால் எப்படி  சிறப்பாய் இருக்கும்  என கூறுகிறாள்
இதனை பாடலாகப் பாடுகிறார் புலவர்




"தேங்குலம் அலங்கல்  மாலைச் செரிகழல் மன்னர் மன்னா
பூங்குலாய்  விரித்தச்சோலைப் பொழிமது திவலைதூவக்
கோங்கெலாம்  கம்ழ மாட்டாக்  குணமில்லர் செல்வம் போல்
பாங்கெல்லாம்  செம்பொன் பூப்ப  விரிந்தது  பருவம்  என்றாள்




இதில்  இச் செய்யுள்வரி   


"கோங்கெலாம்  கமழமாட்டக்  குணமில்லாச் செல்வம் போல "
கொடையில்லா செல்வம்  மணமில்லா மலருக்கு  ஒப்பிடுகிறார்  புலவர்.  அழகும் எழிலும் கொண்ட மலருக்கு  மணம் இல்லை  பணம் பொருள் இருந்தும் கொடை இல்லாமையால்  செல்வந்தர் புகழ்  பெருமை அடையவில்லை எனெக் கூருகிறார்

புலவர்கள் கற்பனை சிந்தனை உலகியலுடனும் இயற்கையுடனும்    சேர்ந்து பயணிப்பர்.
முற்காலத்தில்  கற்றவரும் புலவர்களும்  சமுதாயத்தில் உயர்ந்த இடதில் கருதப்பட்டதால்  அவர்களது வார்த்தைக்கு சொல்லுக்கு  மரியாதை இருந்தது. சமுதாய சிற்பிகளாக கருதப்பட்டு  இந்த சொல்லோவியங்கள் அவர்களால் படைக்கப் பட்டன

================================================================================
கம்பர்  கவிச்சக்கரவர்த்தி.  கம்பர் கூறிய  கம்பராமாயணம்   மனித சமுதாயத்துக்கு கிடைத்த   இராமபிரானின் பெருமை பாடும்  கவிச்சுவை  சொட்டும்   காவியம் .



கம்பரின்  கவித்துவம்  


அறிவு இல்லாதவரை புல்லர் எனக்கூறூகிறார்.  ராமரின் அம்பு தாடகை மீது   நெஞ்சில் பாய்ந்து  உள்ளே சென்று  அப்பால் வெளியே  சென்றது .  கம்பன்  இதன் கருத்தை  கூறுகிறார்.  அறிவுடையோர் சொல்லும் நன்மொழி  அறிவில்லாதவர் மனதில் தங்காது  போவது போல ராமரின் அம்பு  தாடகை நெஞ்சில் ஊடுருவி வெளியேறியதுஎன்கிறார் கம்பன்.


 " சொல்லொக்கும் கடிய வேகச் சுடு சரங் கரிய செம்மல்"
  அல்லொக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிரக்குன்றக்
 கல்லொக்கும் நெஞ்சில் தங்கா தப்புறங் கழன்று  கல்லாப்
 புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றோ"


இங்கெ  அல்லொக்கும் நிறத்தினாள்  _________இருளை  ஒத்தா  கரிய நிறமுடையா தாடகை   என்கிறார்
வயிரங்குன்றக் கல் ஒக்கும் நெஞ்சில்   _________ என்பது  உறுதியான  பாறை குன்று  போன்ற கல்  நெஞ்ச்ம் உடைய   தாடகை  பொன்ற  கல்லாப் புல்லர்  அறிவற்றவர்கள் எனக்  கம்பன் பாடுகிறார்




_____________________________________________________


கம்பன் ராமபிரானின் அழகைப்பற்றி   வியக்கிறார். 



மிதிலையில் ராமன்  சென்றடைகிறான். ராமனைக்கண்ட மகளிர்  கூட்டம்  ராமனின் அழகினை பார்த்து வியக்கிறார்கள் .
ராமனது அழகினை அவர்களால் முழுமையாகா காண முடியவில்லை. அப்படி ஒரு அழகு .ராமனின் அவர்களது பார்வையில் முழு உருவும்  பார்க்க முடியவில்லை.கடவுளாக கருதப்படும் ராமபிரானின் முழு அழகையும்  சாதாரண மனிதர்களால் எப்படி வர்ணிக்கமுடியும்.  கம்பன்  மனதுள் ராமபிரானின் விச்வரூப தரிசனத்தை அல்லவா கண்டார், அதனைத்தான் கம்பன்  சொல்ல முற்படுகிறார். ராமனின் பாதாதி கெச வர்ணனை   கம்பனால்  கூறப்படுகிறது .தோளை கண்டார் தோளே கண்டார்.  புய அழகினை கண்டவர் புயத்தினையே கண்டார் .கருனை ததும்பும்  மந்தகாச வதனம் காண்டார்   கண்ணானது  வியந்து போய் மயங்கினர் .




கம்பன் சொல்லும் சொல்லொவியம்



"  தோள் கண்டார் தோளே கண்டார்
    தொடுகழல்  கமலம் அன்ன
தாள் கண்டார் த்ளே கன்டார்
   தடக்கை  கண்டாரும் அவ்வாறே
வாள்கண்ட  கண்ணார்  யாரே
    வடிவினை முடியக்கண்டார்
ஊழ்கண்ட  சமயத் த்ன்னான்
   உருவுகண்டாரை  யொத்தார்"


பலரும் பொற்றும் ராமனை கதையை ராமகாவியமாக   கவிச்சுவை   சொல்சுவை  கொண்ட  பாடல்களால் பாடிஉள்ளார்
கம்பர்

____________________________________________________________________________




கடவுளின் திருவருள் பெற்ற   கவிஞர்கள் பலர் .கடவுளின்   பார்வை பட்டமையால்  அவர்கள் பேரானத்தம் அடைந்தவர்கள்   .இப்படியாக சமய குரவர்களும்  இறைவன் மீது பாடல்களை பாடினார்கள். திருநாவுக்கரசர்  சமயகுரவர்களில் ஒருவர்.  இவரது கவிதைகளும்  சொல்லழகு பொருளழகு உடையன.

கடவுளின் பாதரவிந்தங்கள்  எப்படி நிழல்களாக பக்தர்களுக்கு  இருக்கும் என்பதை  அனுபவித்து  உணர்ந்து பாடுகிறார்



"  மாசில் வேணையும் மாலை மதியமும்
  வீசு தென்றலும்  வீங்கிள வேனிலும்
  மூசு வண்டரை  பொய்கையும் போன்றதே
  ஈசன் எந்தையும்  இணையடி நீழலே


  கவிஞர்  இறைவனது  நிழலானது


  இளவேனில் காலமும்  மாலைநேரமும்  தென்றல்  காற்றும்  , பால்போன்ற  நிலவின் ஒளியும்  ,  தாமரை குளத்தருகே  பசிய  புற்றரையும்  ,  வீணையின்  இசையின் இனிய நாதஒலியும்   ஒன்றாக இருக்கும் இடத்தில்  வாழ்வதுபோல ஒரு இன்பத்திலும் கூடிய  இன்பமும் அமைதியும் தருவதாகப் பாடல் படுகிறார்
இயற்கையின் அழகினை கடவுளின் கருணையும் அமைதியும்   இன்பமும் கொண்டதாக பாடுகிறார்  என்ன கவிஞரின் ரசிகதன்மை

Thursday, November 20, 2014

சீறீ ல சீறீ ஆறுமுக நாவலர்

   
     ஆறுமுக நாவலர்
------------------------------------



 
  சீறீ   ல   சீறீ    ஆறுமுக நாவலர்
  இலங்கை  அரசாங்கம்    1971 -  10 -   29  ஆம் திகதி   சீறீ ல  சீரீ  ஆறுமுக  நாவலரின் 
150 ஆவது  பிறந்தநாள்  நினைவு  தினத்து  ஞாபகமாக  விசேட முத்திரை  வெளியிட்டது.  இவர்
நமது மொழி  சமயம்  நாடு  முதலியனவற்றிற்கு   அளப்பரிய  சேவை செய்துள்ளார்
 சைவ சமயத்துக்காக  பாரிய தொண்டு புரிந்துள்ளார்


    இவரது காலம்   1822---!879  வரை
-----------------------------------------------------------
சைவ சித்தாந்த  வழியினை  போதிக்க நடை முறையில்  வாழ்ந்து காட்டியவர்    ஆறுமுக நாவலர்   நாவலர் பெருமான்   19 ஆம்  நூற்றண்டில்  சைவசமயத்துக்கும்   தமிழுக்கு   செய்த தொண்டு  அளப்பரியது அவரை ஒரு  அவதாரம் எனலாம்  அவரை சமயகுரவர் வரிசையில்   ஐந்தாம் குரவர் என்பர் 

சைவமே நிறுத்துஞ் சைவாச்சாரியார்  நால்வரோடு  , கைவ்ரு மெந்த நூலுங் கண்டுரை கற்றோற்கின்பம் செய்வகை எழுத வல்ல ஆசிரியர்கள் நால்வரோடு  இவராமென்ன யார்க்கும் அதிசிய     அதிகமாக  என்று சேற்றூர்  அருணாசலக்கவிரயர்  (நாவலர் சரித்திரம்  30 ஆவது பாட்டு)   கூறுகிறார்

சிவசம்புப் புலவர்   --
"  ஆரூரனில்லைப் புகலியர் கோனில்லை  யப்பனில்லை 
சீருரு  மாணிக்க வாசகனில்லைத் திசையளந்த
பேருரு  மாறுமுக  நாவலனில்லைப்  பின்னிங்கியார்
நீரூரும்  வேணியான்  மார்க்கத்தைப்  போதிக்கும் நீர்மையரே"

நாராயண சுவாமி முதலியார்--
" தமிழ் ஆசிரியர்களுள் சென்ற நூற்றாண்டிலே  சிவசித்தாந்தத்துக்கு  மறு உயிர்  கொடுத்தவர்  திரு. ஆறுமுகா நாவலர்

புலோலி  நா. கதிரைவேற்பிள்ளை---
' உலகமுவப்பத்  தோன்றிய  பரசமய  கோளரி"

சே. வே.  ஜும்புலிங்கபிள்ளை. ,  கரண்ணீகார்  வேதி. சென்னை--
நாவலர்  உருவப்படத்தை யான் பூஜை செய்வதோடு  அவர் குருபூஜைத்தினத்தையும்  இத் தேசத்தவனாகிலும்  கொண்டடுவதுவழக்கம்".

சி.வை  தாமோதரம்பிள்ளை அவர்கள்
"   நல்லை நகர் ஆறுமுக  நாவலர்  பிறந்திலரேல்
   சொல்லு தமிழ்  எங்கே  சுருதி எங்கே - எல்லவரும்

  ஏத்து புராணமகா  கமக்களேங்கேப் பிரசங்கமெங்கே
  யாத்தனறிவெங்கே  யறை 

ஆத்தி சூடி

ஆத்தி  சூடி
--------------------
--------------------
    
 காப்பு

  ஆத்திசூடி  அமர்ந்ததேவனை
  ஏத்தி யேந்தி  தொழுவோம் யாமே


1  அறம் செய விரும்பு
2   ஆறுவது சினம்
3  இயல்வது கரவேல்
4  ஈவது விலக்கேல்
 5   உடையது விளம்பேல்
 6   ஊக்கமது   கை விடேல்
 7    எண்ணெழுத்து இகழேல்
 8   எற்பது இகழ்ச்சி
 9   இயம் இட்டுண்
 10   ஒப்புரவு ஒழுகு

 11    ஓதுவது ஒழியேல்
 12   ஒள்வியம்   பேசேல்
 13   அக்கம் சுருக்கேல்
 14  கண்டு ஒன்று சொல்லேல்
 15   ங்ப்போல் வளை
 16   சனி நீராடு
17   ந்யம்பட உரை
18    இடம் பட விடேல்
19    இணக்கம் அறிந்து  இணங்கு
20    தந்தை  தாய் பேண்

21    நன்றி மறவேல்
22    பருவத்தே பயிர் செய்
23    மன்று பறித்துண்ணேல்
24     இயல்பலாதன   செய்யேல்
25   அரவம் ஆட்டேல்
26  இலவம் பஞ்சில் துயில்
27  வஞ்சகம் பேசேல்
28  அழகு அல்லாதன செய்யேல்
29  இளமையில் கல்
30  அறனைமறவேல்

31  ஆனந்தல் ஆடேல்
32  கடிவது மற
33  காப்பது விரதம்
34  கிழமைப்பட வாழ்
35  கீழ்மை அகற்று
36   குணமது கைவிடேல்
37  கூடிப் பிரியேல்
38  கெடுப்பது ஒழி
39   கேள்வி  முயல்
40    கை வினை  கரவேல்

41  கொள்ளை விரும்பேல்
42  கோதாட்டு ஒழி
43  சக்கர நேறி நில்
44  சான்றோன்  இனத்திரு
45  சித்திரம்  பேசேல்
46  சீர்மை மறவேல்
47  கழிக்கச் சொல்லேல்
48  சூது  விரும்பேல்
49  செய்வன திருந்த்ச் செய்
50  சேரிடம் அறிந்து  சேர்

  51  சை  யெனெ  திரியேல்
 52  சொற் சோர்வு படேல்
 53  சோம்பித்திரியேல்
 54  தக்கொன்  எனத்திரி
 55 தானமது  விரும்பு
56 திருமாலுக்கு  அடிமைசெய்
57 தீவினை அகற்று
58 துன்பத்துக்குஇடங் கொடேல்
59 தூக்கி வினை செய்
60  தெய்வம்  இகழேல்

61 தேசத்தோடுஒத்து வாழ்
62 தையல்சொல் கேளேல்
63 தொன்மை மறவேல்
64 தோற்பன தொடரேல்
65 நன்மை கடைப்பிடி
66 நாடொப்பன செய்
67  நிலையில் பிரியேல்
68  நீர்  விளையாடேல்
69 நுண்மை நுகரேல்
70 நூல் பல கல்

71  நெற்பயிர் விளை
72 நேர் பட ஒழுகு
73   நைவினை  நணுகேல்
74   நொய்ய உரையேல்
75  நோய்க்கு இடங்கொடேல்
76  பழிப்பன பகரேல்
77  பாம்பொடு  பழகேல்
78 பிழை படச் சொல்லேல்
79   பீடு பெற நில்
80   புகழ்ந்தாரை  போற்றி வாழ்

81  பூமிதிருத்தி யுண்
82  பெரியாரை  துணைகொள்
83  பேதமை  அகற்று
84  தையலோடுஇணங்கேல்
85  பொருள்தனைப் போற்றி வாழ்
86  போர்த்தொழில்புரியேல்
87  மனம்  தடுமாறேல்
88  மாற்றானுக்கிடங்கொடேல்
89  மிகைபடச் சொல்லேல்
90  மீதூண்  விரும்பேல்

91  முனைமுகத்து  நில்லேல்
92  முர்க்கரோடு இணங்கேல்
93  மெல்லினல்ல தோழ்  சேர்
94  மேன்மக்கள்  சொற்கேள்
95  மைவிழியார்  மனையகல்
96 மொழிவதற  மொழி
97 மோகத்தை  முனி
98 வல்லமை  பேசேல்
99   வாத முற்  கூறேல்
100வித்தை விரும்பு

101   வீடு பெற நில்
102   உத்தமனாய் இரு
103 ஊருடன் கூடி வாழ்
104  வெட்டெனெ  பேசேல்
105  வேண்டி வினை சேய்யேல்
106   வைகறை  துயில் எழு
107   ஒன்னாருரை  தேறேல்
108   ஓரஞ் சொல்லேல்
                                       முற்றிற்று
------------------------------------------------------

Monday, September 15, 2014

இசை

இசை     கோலங்கள்

கணபதி     துணை

விக்னம்   தீர்க்கும்     விக்ன வினாயகா

            வினைகளை   நீக்கி     நின்னருள்   தாதா

மானிட  துயரங்கள்  மடியவே    என்றும்

                   மண்ணில்    நல்லருள்   பொழிந்திடுவாயே



    
கலியுக  வேதனை    கலக்கிடும்  மாந்தரை
   
           கலிதனை  நீக்கி    கருணை  புரிந்திடு

நலிவுறு   மாந்தரின்     வலியுறு  துயரங்கள்

          பொலிவிழந்   திட்டிட   போக்கியே  அருள்க


பார்மிசை      மாந்தர்    படர்  துயர்  அகல

        பஞ்ச    கரத்தினை   காட்டி  அழைத்திடு

சோர்வுற்றிட்ட   பக்தர்   மனங்களில்  

         சோபை    ஒளியினை    காட்டி  அருள்க


பன்னிரு   கரமுடை  வேலவன் முன்னே

        அண்ணலாய்    வந்து   அவனியில்  உதித்த

இன்புடன்   வாழும்     வழிநெறி  காட்டும்
   
           ஆனைமுகத்தோனே     திருவடி சரணம்
  ----------------------------------------------------------------------------

இசை ஒரு முத்து
----------------------------

வாவியில் தோன்றிட்ட  மலர் மொட்டு
  வானத்தில்  நிலவின்  வரவினால்
மாதாவைக் கண்ட  மழலை போல்
 ஆவலுடன்  இதழை  விரித்தன

தேனுண்ண வந்திடும்வண்டினம்
 தேனுண்டு மயங்கிக்  களித்தன
மயங்கிடும்  வண்டினம் எழுந்தும்
சுயமாக ரீங்காரம் இசைத்தன

ரீன்கார இசை  ஓசை நயமாகி
 ஒங்கார வடிவாகி  இனித்தன
நயமான இசையும்  பாவமாய்
  நயமாகி சந்ததை  அணைத்தன

இனித்திடும் எம் அருமை செந்தமிழும்
 இசையுடன் கூடிக் களித்தன
இசை சுவரங்களின்  சேர்க்கையால் 
 அசைவுடன்  தோன்றிடும்  முத்துசரம்
--------------------------------------------------------

இசை இன்பம்
--------------------
இசையின் இன்பம் அறிந்திட
  விசையுடன்  பாரினில் பறந்திடும்
தேடி அலைபவர் இதயத்தில்
தேனாய் தித்திக்கும்  அமுதமாய்

காதலர் உள்ளம் களித்திட
காவிய கானமாய்  தோன்றியே
பாமரமக்களும் இசைத்திட
 பாசுர பாவமாய் பரவின

வலையுரு மனதின் அலையினை
கலையா நீரின் அருவியாய்
தாளா  தாகமாய் மீட்டிட
மீளா இன்பங்கள்  அளித்திடும்
----------------------------------------------------

-இசையில்  பல வகை
--------------------------------
கர்னாடக இசை
மெல்லிசை
கிராமிய இசை
திருமுறைகள் 
தேவாரம் திருவாசகம்    திருப்பல்லாண்டு    புராணம்  திருப்புகழ்
     இவைகளை  பஞ்ச புராணம்  என்பர்
சுலோகம்
சிறுவர் பாடல்கள்
--------------------------------------


 ராகங்கள்
கர்னாடக சங்கீதத்தில்   72  மேளகர்த்தா ராகங்கள் உண்டு   இவை சம்பூர்ண ராகங்கள்  .தாய் ராகங்கள்
இவற்றிலிருந்து சேய் ராகங்கள்  பிறக்கின்றன.  இவை  ஜன்னிய ராகங்கள்  என்பர்.  இந்த ஜன்னிய ராகங்கள்   உபாங்க ராகம்  பாசாங்க ராகம்   வக்ர ராகம் வர்ஜ ராகம்   எனெ பலவகைப்படும்.  சேய் ராகங்களில்   எட்டு சுரங்களிலும் குறைவான சுரங்கள் காணப்படும்.  
தாய் ராகங்களில் எட்டு சுரங்களும்   அது ச ரி க ம ப த நி ச  என   கூறலாம்.  ஆனால்  எட்டு சுரஷ்தானங்களும் வேறுபடுவதனால்    72   மெளகர்த்த ராகங்கள்   உருவாகின்ரது
இந்த ராகங்களில் இரு விதமான மத்திமம் கானப்படுவதனால்   அதாவது 36 சுத்த மத்திம ராகங்களும் 36 பிரதி மத்திம ராகங்களும்   எனெ  72 ராகங்கள் உருவாகின்றது
சேய் ராகங்களின்   சுரஷ்தானவேறுபாட்டுகு எற்ப   அனேக ஜன்னிய ராகங்கள்   உருவாகின்றது


ஜன்னிய   ராகங்கள்    சிலவற்றின்     ராகங்களின்   ஆரோகணம்  அவரோகணம்
பூபாளம்   ஆ---  ச ரி க ப த சா ..      _________15  வது  மேளகர்த்தா  வின்            
               அவ --- ..ச  த ப க ரி சா      
மோகனம்    ஆ  ---  ச ரி க ப த சா..
               அவ ----..ச த ப க ரி சா____________29  வது     ஜன்னியம்
சுத்த சாவேரி    ஆ--ஸ ரி ம ப த சா ..  ___________22  வது  
                     அவ -- .. ச த ப ம ரி சா
மலகரி             ஆ  --ஸ ரி ம ப த சா..   ________   15 வது
                     அவ  --- ..ச த ப ம க ரி சா
கம்சத்துவனி    ஆ  --ஸ ரி க ப நி சா..      _________29  வது             
                     அவ  ---  ..ச நி ப க ரி சா

மத்திய மாவதி   ஆ ----  ச ரி ப ம நி சா..    ________28 வது                     
                        அவ  ---..ச நி ப ம  ரி சா
 மந்தாரி          ஆ --ஸ ரி க ம ப நி சா ..   ________51 வது
                       அவ--- ..ச நி ப ம க ரி சா
  பிலகரி            ஆ  --- ச  ரி க ப த சா ..    ________29 வது              
                        அவ  ---..ச நி த ப ம க ரி சா
காம்போஜி        ஆ   ---  ச ரி க ம ப த சா .. ________28  வது
                  அவ  ----..ச நி த ப ம க ரி சா
சிரீ ரஞ்ஜனி    ஆ   --ஸ ரி க ம த நி சா ..  __________ 22 வது
                 அவ  ---  ..ச நி த ம க ரி சா




இசைக்கலை  எட்டு சுரங்களால் ஆனது.அவை ச ரி க ம ப த நி ச.
அனேகமாக எல்லாப்பாடல்களும்  எட்டு சுரங்கலினுள் அடங்கும்.  இதனை சட்ஜம் ரிசபம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம்  தைவதம்  நிசாதம்
  இதி ல் முதல் சட்ஜம் மத்திமச்தாயி  சட்ஜம் என்பர். எட்டாவது சட்ஜம்  மேல்ச்த்தாயி சட்ஜம் என்பர்.  பழைய காலத்தில் இந்த ஏழு சுரங்களையும்  முறையே  இளி  விளரி தாரம், குரல், துத்தம், கைக்கிளை,உழை. என அழைப்பர்


இசையைப்பாடிய  கலைஞர்கள் பாடலுடன்  மேலும் இனிமை சேர்க்க   இசைக்கருவிகளையும்  பக்கத்துணையாக கொண்டு இசையை  பாடினார்கள்.சங்க காலத்தில்  மத்தளம் , யாழ். குழல்  ஆகிய கருவிகளும் பாவனையில் இருந்தது. எனினும்  யாழ் தான் நாட்டில் பெருஞ்சிறப்பு பெற்றது.பல இசைக்கலைஞர்கள் யாழ் பாடிகளாக சிறப்புப் பெற்றிருந்தார்கள்.  யாழ்ப்பாணம் எனும் பெயரே  பாணன் ஒருவருக்கு பாடல் பாடி மகிழ்வித்தமையால்  தமிழ் அரசரால் பரிசாக கொடுக்கப்பட்டது  ஒரு   நாட்டையே பரிசாகப் பெறும்  பெருமை வாய்ந்தாக இசையின்  பெருமை மக்களால் பொற்றப்பட்டது. எனலாம்

இசையின்   ரசிகர்கள்     இசையால்    கவரப்பட்டவர்கள்     இசையின்      வளர்ச்சியில்   பெரும்    பங்களிப்பு   அளித்தவர்கள்

இசை    சுருதி      லயம்    நாதம்    என்பவற்றின்   அடிப்படையில்;     இவை ஆதாரமாக  உள்ளத .    இசைக்கு    சுருதி    மாதா   லயம்   பிதா  என்பர்.
சுருதியுடன் கூடிய   இசையும்     லயத்துடன்     பாடல்களும்    ரசிக்கக்ககூடியன

நல்லூர் கந்தசாமி கோயில்








நல்லுர் கந்தன்    கீர்த்தனைகள்





  பல்லவி

பக்தி செய்திடும்    பக்தர்கள் உள்ளங்களில்

பக்தனாகி    உறைந்திடும்  நல்லூர் முருகா

   அனுபல்லவி

முருகா என ஒரு தரம்   அழைத்தால்

முறுவலுடன்   வந்து   தரிசனம்தருவாய்

வள்ளி தெய்வானை   விரும்பிடும்   மணாளா

தெள்ளு தமிழ்   கடவுளே   கந்தா முருகா


   சரணம்

ஏழ்திசையும்    போற்றும்   குறுஞ்சி  மலை வாழும்

ஏற்றமிகு    வாழ்வு   கொண்ட   குறத்தி  மணாளா

 குன்றுமேலுறையும்  குறுஞ்சி  மலை தெய்வமே  

குன்றுதோறாடும்     குமரக் கடவுளே  கந்தா


முன்னைவினை நீக்கி  முத்திநெறி காட்டும்

மூலப் பொருளே  முக்கண்ணன் மைந்தனே

வேழமுகத்தோன்   உடன் பிறந்த  இளையவனே

வேலொடு  மயிலில்  விற்றிருக்கும்  கந்தா


பாடு பாடு எனெப் பலமுறை    கூறியும்

பரம்பொருள்  புகழை   பாடிட  முடியவில்லை

பன்னிருகரங் கொண்ட   வள்ளலின்  பெருமையால்

பாமரன்      பாடினேன்    வள்ளல்   புகழினை


வாழி   வாழி  வண்ணமயில்  வாகனா

வாழி வாழி   குன்றுதோறாடும்   தலைவா

சரணம்   சரணம்    அடியேன்   சரணம்

சரணம்   சரணம்    சரவண  பவகுகா


--------------------------------------------------------



   பல்லவி


தமிழ் பாடும் உலகிலே   தலையாய  தெய்வமாய்

மகிழ்வோடு  பாடவே     மனதார   வேண்டினேன்


  அனு பல்லவி

நல்லுர் பதியிலே   நயமாய் குடி கொண்டு

வேலோடு   வினை தீர்க்கும்  வேலவா கந்தா

   சரணம்

சேவற்கொடியோனே   செந்தமிழ் திருத்தேனே

பாவ வினை தீர்க்கும்  பன்னிரு விழியோனே

காவலாய் நல்லூரில்  காத்திருக்கும்  குமரோனே


தேவர் மகிழ்  குமரா  தெய்வத்திரு  மகனே

-------------------------------------------------------------------------------






              பல்லவி

வாயார  நினது புகழ் பாட வந்தேன்

வண்ணக் கவிதையால்    புகழு கின்றேன்

      அனு பல்லவி
என்னுள் குடிகொண்ட    நல்லூர் கந்தனே

என்னையும்   அறியாது   என்னுள்ளே புகுந்தாயே


  சரணம்

செந்தமிழ்   பாட்டினில்   கருவாய்   அமைந்து

பைந்தமிழ் பேசும்   பாவனை தந்து

தெள்ளுதமிழ்   பாடல்   பாடெனப்  பணிந்து

மகிழ்த்திடும்  பாமாலை   பாடவைத்தாயே


கலைமலி   நல்லூர் பதியிலே    உறையும்

கவிதையாய்   அமைந்த  வித்தக   வேலனே

கவிதை  பாடும்   பணியினை  பணித்து

கவிதனை   உன்மேல்    பாட  வைத்தாயே


எப்படி உரைப்பேன்    உனது   அழகினை

எப்படி  சொல்வேன்    உனது    புகழினை

நாவலர்   பாவலர்  பணிந்து  போற்றும்

நல்லூர்  பதியில்   எமை  ஆளும்   கந்தா



--------------------------------------------------------------




 பல்லவி


எல்லையில்லா   பெரும் புகழ் கொண்ட நல்லூர் பதியோனே

எப்படிப்பாடுவேன்     நினது பெரும் புகழினை

  அனுபல்லவி

வெள்ளை உள்ளங்களில்    விரும்பியே   குடியிருக்கும்

வெற்றி வேலாயுதனே   நல்லூர்    கந்தா
  

சரணம்

இலங்கை நாட்டின்   வடபால் அமைந்து 

பல்லாயிரம் பக்தர்களின்  மனங்களில்  படிந்து

தாமரையொத்த    தளிர்கரங்  கொண்ட 


வேதமாய்  விளங்கும்    கருணை  முருகனே



-----------------------------------------------------------------




  பல்லவி

நினைத்தபோது   என் துயர் அகலும்

நீல மயில்மீது  பவனி  வரும்  என்   முருகனை

  அனுபல்லவி

ஆறு திருமுகமும்   பன்னிரண்டு  கரம்  கொண்டு 

ஆறுதலை   அளிக்கும்    அழகு  முருகனை

    சரணம்

எல்லையில்லாப்  புகழ்கொண்ட   நல்லூர் பெருமானே

என்னையும் அறியாது  என்னுள் குடி கொண்டாய்

நினது புகழ்  பாடும்  பலமும் தந்து  என்னை

 நிந்தாள் பணியும்    அறிவினையும்   தந்தாயே



வேதமாய்  எனது  மனதுள்   மணம் வீசி

வேலவன் கந்தன்   வெந்துயர் தீர்ப்பான்

மந்தகாச புன்னகையோடு    மகிமைகள் சேரும்  

நல்லூர் பதிவாழ்    குமாரா   கந்தா


பன்னிரு விழியால்   அருள் மழை  பொழியும்

பன்னிரு கரங்கொண்ட  திருமால் மருகா

சூலாயுதம்  கொண்டு  சூரன் உடல் கிழித்த

வேலாயுதம்  கொண்ட   சக்தியின் மைந்தா



------------------------------------------------------------------







      பல்லவி


அழகின் உறைவிடமாம்  வள்ளிப்பிராட்டிக்கு 

பழம் போல் இனித்திடும்   பரம தயாளா

   அனுபல்லவி

நல்லூர் பதிதனை  ஆண்டருள்  முருகா 

நானிலம்   களிப்புற   கருணை  பொழிந்திடு


    சரணம்

வள்ளி தெய்வானை    விரும்பிடும்   மணாளா

வணங்கிடும் அடியார்க்கு   வல்லமை தருவாய்

துள்ளி ஒடுடிடும்  மயில்மீது உலாவரும்

துயரம் களைந்டும்    தத்துவ வேலா



அன்பிலே  உருகி   களித்திடும் அடியவர்

இன்புடன்  ஓடியே   துயர் களைந்திடுவாய்

தேனினும் இனிய தெவிட்டாத் தெய்வமே

நன்னெறிகாட்டி  நானிலம் காத்திடு


-----------------------------------------------------------





       பல்லவி

சிந்தையிலே   வந்து நினது புகழ் பாடவைத்தாய்

செந்தமிழ் தெய்வமாகி   நல்லூரில்  குடிகொண்டாய்



     அனு பல்லவி

திருவிலே  சிறந்திட்ட  தெய்வீகப் பேரருளே 

கருவிலே நினது அருள்   கனிந்திடப்பெற்றேனே



      சரணம்

குரு  வடிவாய்வந்து நினது தோற்றமும்   காணப்பெற்றேன்

தருவாய் பெருஞ்செல்வம்  தரணியில் நான்வாழ

திருமுறை ஒலியூடு   தீபங்களின்   ஒளியுடன்

திக்கெட்டும்  தெய்வீகம்  பரப்பிவரும்  பேரொளியே



பல்லாயிரம்  துயரமும்  பனியாகி நீங்கிடவே

வேலாயுதம் கொண்டு  வெவ்வினை   நீக்கிடுவாய்

நல்லூர் பெருமானின்   புகழ்பாடும்   பெரும் பேற்றை

ஆவலுடன்  பாடவைத்த    நல்லூர் பதியோனே
-----------------------------------------------------------------





          பல்லவி

பார்புகழ்   நல்லூரில்  மையங்கொண்ட    முருகனே

கார்மயில் வாகனனே  கலியுக தெய்வமே


   அனு பல்லவி

கருவிலே என் நினைவில்  கருணையுடன்   வீற்றிருந்து

மாசில்லாப் பெருவாழ்வு  மாண்புடனே   அளித்தவனே


  சரணம்


சிந்தைநிறை திருவருளும்   சிறப்புறு  பெரு வாழ்வும்

தந்தையாய்  இருந்தெமக்கு   தானமாய்  தந்திடுவாய் 

முந்தை வினை  போக்கியே  முத்திநெறி  காட்டிடுவாய்

எந்தையே  உடனிருந்து  எம்மையெல்லாம்  காத்திடுவீ


தித்திக்கும்    தேனமுதே  தேவர்  பொற்றும்  தெய்வமே

தித்திக்கப் பாடிவரின்   தெய்வஒளி வீசிடுமே

தித்திக்கும்  இனிமையாய்   தெவிட்டாப்    பெருமகனே

தித்திக்கப் பேசுவோம்    திக்கெங்கும்   நின்  புகழை

       ---------------------------------------





    பல்லவி


தெய்வீக  படைத்தலைவா   தேவர் மகிழ் கோமானே

மெய்யுருகி பாடுவோற்கு  மேன்மை நிலை  தந்திடுவாய்

   அனு பல்லவி


காலனாய்   சூரனுக்கு   காட்சி தந்த வள்ளலே

காலடியில்  பணிகின்ற   பத்தனையே   காத்திடுவீர்  


   சரனம்


நல்லூர்  பதியிலே  நான்மறைகள்  ஓதிவர 

பல்கலை   அழகுடை  தேரிலே   பவனி வந்து

நாற்திசையும்  துயர்  அகல  காட்சி தருபவனே

வேற்கை கொண்ட    வினை தீர்க்கும்  வேலவனே

            ----------------



   
     பல்லவி

நல்லுர் பதியிலே    குடியிருக்கும் வேலவா

நானிலம் வாழவே  நன்மைகள்  செய்திடுவாய்

   அனு பல்லவி

அறியாமை இருள்   நீக்கும்   அறிவின்  தெய்வமே

பிறவிப்பேரின்பம்   பெரும்  பேறாய் தந்திடுவாய்

  சரணம்

வேலோடு மயிலுமாய்  வீதியிலே  பவனி வந்து

வேலாயுதமாக   வீற்றிருந்து    அருள்பவனே

சேயாய்  சிவனுக்கு  சிறப்புற அமைந்தவனே

சேமமுற   பெருஞ்  செல்வம்  செம்மையுற தந்திடுவாய்



இலங்கை நாட்டின்  இயங்கும்   சக்தியாய்  

இன்பமுடன்  எழுந்தருளும்   இளவலே  சண்முகா

யாழ்ப்பாண  நாட்டிலே  யாழிசையின்   ஓசையுடன்

ஒங்குபுகழ்   நல்லூரில்  ஓங்காரமாய்   உறைபவனே
          ----------------------------













     நல்லூர்  கந்தன்   கீர்த்தனைகள்
  பல்லவி
தமிழ்பாடும் உலகிலே  தலையாய  தெய்வமாய்
மகிழ்வோடு பாடவே    மனதார வேண்டினேன்

  அனு பல்லவி
நல்லூர் பதியிலே   நாயகமாய்   வீற்றிருக்கும்
வேலொடு வினை தீற்கும்  வெற்றி வடி வேலோனே
  சரணம்
சேவற்கொடியோனே  செந்தமிழ் காவலனே
பாவவினை தீற்கும்   பன்னிரு விழியோனே

காவலாய்  நல்லூரில்  குடிகொண்ட   குமரோனே
தேவர்  மனங்  கவர்  தெய்வமே   முருகனே 

 நல்லூர்  கந்தசாமி கோயில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நல்லூரில் உள்ள ஒரு முருகன் கோயில்.

முருகன்     தோத்திர     பாடல்கள்